*"கண்ணாடியை வீட்டில் இப்படி வைத்தால் உங்களால் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஜெயிக்கவே முடியாது."*
காசு பணம் இல்லாத வீடுகள் கூட இருக்கும். ஆனால் கண்ணாடி இல்லாத வீடு கட்டாயமாக இருக்காது. நம்மை அப்படியே, நமக்கு பிரதிபலித்துக் காட்டும் இந்த கண்ணாடியை வீட்டில் எந்தெந்த இடத்தில் எல்லாம் எப்படி வைக்க வேண்டும் எப்படி வைக்கவே கூடாது என்பதை பற்றியும், இந்த கண்ணாடியின் மூலம் நம் வீட்டில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் உங்களுடைய வீட்டில் இந்த தவறுகளை செய்து வந்தால் அதை கொஞ்சம் மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்.
முதலில் படுக்கை அறையில் கட்டிலுக்கு நேராக கண்ணாடி கட்டாயம் இருக்கக் கூடாது. இது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.
*ஆனால் கண்ணாடியை இப்படி வைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன தெரியுமா?*
காலையில் எழுந்து நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடியில் கண் விழித்தால் உங்களால் வாழ்க்கையில் ஒருபோதும் ஜெயிக்கவே முடியாது. வாழ்க்கையில் தோல்விகள் பின் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால் இரவு அந்த கண்ணாடிக்கு ஒரு திரை போட்டு விடுங்கள். காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு அதன்பின்பு அந்த திரையை விலக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக நிறைய பேர் வீட்டு நிலை வாசலில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் சில வீடுகளில் நிலை வாசலில் கண்ணாடியை வைப்பதன் மூலம் பிரச்சினைகள் அதிகமாக வருகின்றது. உங்கள் வீட்டில் அதிகப்படியான பணப்பிரச்சனை சண்டை சச்சரவுகள் இருந்தால் நிலை வாசலின் வெளியில் இருக்கும் கண்ணாடியை எடுத்து நிலை வாசலுக்கு உள்ளே, நேராக வீட்டிற்குள் இருக்கும் சுவற்றில் மாட்டி வையுங்கள். வீட்டிற்குள் நுழைபவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன் பார்க்கும்படி இந்த கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
நிலைவாசலின் வெளிப்பக்கத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாதென்று ஏன் சொல்லுகிறார்கள். நிலைவாசல் என்பது மகாலட்சுமியும் அஷ்டலட்சுமிகளும் வாழும் இடம். அந்த இடத்தில் கண்ணாடியை வைத்து விட்டால், உள்ளே நுழைபவர்களுடைய எண்ணங்களை அந்தக் கண்ணாடி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளும். அப்போது அந்த இடத்தில் இறை சக்தி குறைந்து விடும் என்பதற்காகவே நிலை வாசலில் கண்ணாடியை வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் குளியல் அறையில் கண்ணாடி வைக்கும் பழக்கம் உள்ளது. குளியல் அறையில் கண்ணாடி வைக்கக்கூடாது. அப்படியே கண்ணாடி குளியலறையில் தேவை என்றால், நீங்கள் குளிக்கும் போது உங்களுடைய பிம்பம் கண்ணாடியில் தெரியும் படி இருக்கக் கூடாது. முகம் கழுவும் இடம் கைகழுவும் இடம், அதாவது வாஷ்பேஷன் மேலே கண்ணாடியை வைக்கலாம். நாம் குளிப்பது அப்படியே பிரதிபலிக்கும் படி எதிர்ப்பக்கத்தில் கட்டாயமாக கண்ணாடி இருக்கக்கூடாது.
குளியல் அறையில் கண்ணாடியானது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் அல்லது கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் தான் இருக்க வேண்டும். மாறாக குளியலறையில் தெற்கு திசை சுவற்றில், மேற்கு திசையில் உள்ள சுவற்றில் கண்ணாடியை மாட்டி வைத்திருந்தால் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய் படுவார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு மன பயம் இருக்கும். சில பேருக்கு மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
இதேபோல் வீட்டிற்குள் அதாவது ஹாலில் அல்லது வேறு ஏதாவது இடத்திலோ கண்ணாடியை வைத்து இருந்தால் அதை வடக்கு திசையிலும் கிழக்குத் திசையிலும் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும், மேற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும் தான் வீட்டிற்குள் கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தால் மேல் சொன்ன படி கண்ணாடியை ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் தவறாக வைத்திருந்தால் கண்ணாடி இருக்கும் இடத்தை சரியான இடத்திற்கு மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்."
*வாழ்க வளமுடன்*
No comments:
Post a Comment