Wednesday, October 30, 2024

காசியில் குமரகுருபர் நடத்திய அற்புதம்.

காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. 

காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் குமரகுருபரர் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். 

மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். 

"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.... எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்."  - சொல்லிவிட்டு எழுந்து போனார். 

அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. 

ஞானிகள் என்போர்... 
எளிமையானவர்கள்  எல்லாவித அவமதிப்பையும்  இன்முகத்துடன் ஏற்பவர்கள்.

எதிரே இருப்பவன் அரசனோ
ஆண்டியோ இரண்டும் ஒன்றுதான் அவர்களுக்கு .

எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை , ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான்  தானம் கேட்கும் , ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.

ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது .

மறுநாள்... விடிந்தது. 

காசி தேசத்துச் சான்றோர்கள், அவையில் கூடினார்கள். 

பாட்டுப் பாடுகிற வித்வான்களும், 
ஆடல் மகளிரும், 
அரபியில் கவிதை சொல்கிறவர்களும், 
அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்று கூடினார்கள்.

எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" 
- நவாப் விசாரித்தார்.

அவர் அரபி படிக்க போயிருக்கிறார்.." 
- யாரோ சொல்ல, சபை சிரித்தது.

"அப்படியா... ஆயுசுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..."
 - மறுபடி சபை சிரித்தது.

"அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." - யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.

"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."

"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில், நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.."  - ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.

"சில சவுக்கடிகள்..." அவருக்கு உபயம் என உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். 

மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.

"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."

"வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். 

நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."

"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.

வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். 

பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம்  சபைக்குள் நுழைந்தது.

குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். 

* அவர் நரைத்த தலைமுடியும், 

* தலைப்பாகையும், 

* வெள்ளை வெளேர் என்று 
வயிறு வரை நீண்ட தாடியும், 

* இறையை உணர்ந்த 
உறுதியான முகமும், 

* போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும்... 

அவரையும் சிங்கம்போல் காட்டின ,

அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன.

நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.

"என்ன இது..." கத்தினான்.

"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்!!"

"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."

"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா...

சிங்கங்கள் சபை முழுவதும் சுற்றித்திரிந்தன .

நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்

சபை வெறிச்சோடிப் போயிற்று. 
துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. 

உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.

குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. 

நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.

குமரகுருபரர் அவனையே 
பார்த்துக் கொண்டு இருந்தார். 

அவர் கண்கள் சிரித்தன ,
முகச் சுருக்கங்கள் சிரித்தன ,
இதழ்க் கடைகள் சிரித்தன ,
காது வளையங்கள் சிரித்தன ,
அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.

நவாப் சலாம் செய்தான். 

''உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.

"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் .

"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே....

நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..! "

ஆமாம்!  பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று , ?

"இறையருள்."

எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."

உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு.

"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"

ஒரு நொடியில் கொடுத்தான்.

எப்படி ,,, ?

சகலகலாவல்லி மாலை
என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.

மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.

கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." 

நவாப் பணிவாகப் பேசினார்.

Monday, October 28, 2024

அமாவாசை பற்றி தெய்வீக விளக்கங்கள்

🚩🕉️🚩🕉️🚩🕉️🚩☸️🌟☸️🌟☸️🌟☸️☘️🌷☘️🌷☘️🌷☘️
*அமாவாசை ஸ்பெஷல் !*
➖➖➖➖➖➖➖
🌿🌸🌿🌸🌿🌸🌿

*⚫அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:⚫*

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?

⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔯🌸🔯🌸🔯🌸🔯

Monday, October 14, 2024

பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றும் பொழுது கவனிக்கப்பட வேண்டியது

🌹 பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை 🌹

🌹 பெண்கள் அணிந்துள்ள மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ அதை மாற்றும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

🌹 பெண்கள் அணியக்கூடிய மாங்கல்யம் மிகச்  சிறப்புடையது.மாங்கல்யம் ஹோமம் வளர்த்து பல மந்திரங்கள் ஜெபித்த பின்னரே மாங்கல்யம் ஒரு பெண்ணின் கழுத்தில் ஏறுகிறது.

🌹 பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றலாம்.பழைய கயிறு கழுத்தில் இருந்து கொண்டு புது கயிறை மாற்ற வேண்டும்.புது கயிறு மாற்றிய உடன் பழைய அழுக்கு கயிறை எடுத்து விடலாம்.

🌹 இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. புது மஞ்சள் கயிறு மாற்றியபின் மாங்கல்யத்திற்கு குங்குமம் இட வேண்டும். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.கோவிலில் செய்ய முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் செய்யலாம்.

🌹 மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது., ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. 

🌹 இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு   தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.தினமும் குளிக்கும் போது தாலிக்கு  மஞ்சள் பூச வேண்டும்.இவ்வாறு செய்வதால் அந்த பெண் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிறைந்து இருக்கும் என சாஸ்திரங்கள் சொல்கிறது.

🌹 மாங்கல்யத்திலும்,மாங்கல்ய கயிறிலும் அதிகமாக அழுக்கு சேராமல் பார்த்து கொள்வது பெண்களின் முக்கிய கடமையாகும்.

நாக தோஷம் தீர்க்க பரிகாரம்.

#நாகதோஷம்! 

"நல்ல உடல்நிலை கொண்ட திடகாத்திரமான மனிதருக்கு, எந்த காயங்களும் இல்லாமலேயே, திடீரென்று சில இடங்களில் முதுகுத்தண்டு வீக்கமடைய துவங்கும் - இது நாகதோஷம்".
"முடிவில்லாத சிறுநீர் பாதை தொற்றுநோய் எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதை நாம் நாகதோஷம் என்று சொல்வோம்".

இதற்கு பல அம்சங்கள் உள்ளன. நாகதோஷம் என்று சொல்லும்போது, நாம் வெளியில் உள்ள ஒரு பாம்பைப் பற்றி சொல்லுவதில்லை. இன்று, ஓர் நிரூபிக்கப்பட்ட உண்மை என்ன வென்றால், உங்கள் மூளையின் ஒரு குறிப்பிட்ட பாகம் ஊர்வனவற்றிற்கான மூளையின் அம்சம் (Reptilian Brain) கொண்ட தன்மையாக உள்ளது. உங்கள் மூளைக்குள்ளேயே ஒரு சிறிய மூளை, தோராயமாக உங்கள் கைமுட்டி அளவு உள்ளது. அது ஒரு முதலையின் மூளை அளவில் உள்ளது.

மூளையின் இந்த பகுதிதான், உங்கள் பிழைப்புக்கு உதவிகரமாக உள்ளது. மூளையின் இந்த பகுதிதான், நீங்கள் எங்கு செல்லவேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. மூளையின் இந்த பகுதிதான், எல்லா பயங்களுக்கும் அடிப்படையானது. மூளையின் இந்த பகுதிதான், எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறது. மூளையின் இந்த பகுதிதான், உங்களை திருமணம் புரியச் செய்தது. ஏனென்றால், திருமணம் என்பது உங்கள் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு வழிதான். குடும்பம் என்பது ஒரு எல்லைதானே? உண்மையா, இல்லையா? குடும்பம் என்பது ஒரு எல்லை, ஒரு மரபுரீதியான எல்லை. எனவே, பெரும்பான்மையான மக்களுக்கு மூளையின் இந்த பகுதிதான் அதிகமாக செயல்படுகிறது. மூளையின் அடுத்த பகுதியான புறமூளை (Cerebral Cortex) என்பதை, துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான மக்கள் ஒரு பிரச்சனையாகவே உணர்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்கள் விடுதலையை நாடுவதில்லை. அவர்கள் பந்தத்தையே விரும்புகிறார்கள், உண்மைதானே? நீங்கள் சுதந்திரத்தை விரும்புகிறீர்களா அல்லது பந்தத்தை விரும்புகிறீர்களா? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், நீங்கள் ஒருவிதமான பந்தத்தையே விரும்புகிறீர்கள் என்று உங்களுக்குப் புரியும். நீங்கள் எப்போதுமே ஒரு விதத்தில் கட்டுண்டு இருப்பதையே விரும்புகிறீர்கள், அதுதான் ஊர்வனவற்றிக்கான மூளை என்பது. உங்களை மனிதனாக்குகிற புறமூளையின் பரிமாணங்கள் உங்களுக்குள் செயல்படுமேயானால், நீங்கள் சுதந்திரம் அடையவே விரும்புவீர்கள். நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடைய விரும்புவீர்கள்.

ஆன்மீக செயல்பாடுகள் இயல்பானவை. தேடுதல் என்பது இயல்பானது. ஆனால், நீங்கள் ஊர்வனவற்றிக்கான மூளையின் பாகத்திலிருந்து செயல்படுவீர்களானால், அதைத்தான் நான் நாகதோஷம் என்பேன். இதுவே மிகக் கொடிய விதமான நாகதோஷம். ஆனால், உண்மையில் நாகதோஷம் என்பது பலதரப்பட்ட நிலைகளில் உள்ளது. சிலர் தோல் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாவர் - இதுவும் நாகதோஷமே. ஆனால், நீங்கள் உங்கள் ஊர்வன வற்றிக்கான மூளையோடு எல்லைகட்டி நிற்பதே மிகக் கொடிய விதமான நாகதோஷம் ஆகும். உங்களை மனிதத் தன்மைக்கு கொண்டு வருகிற மூளையின் பாகம் இன்னும் செயல் பாட்டில் இல்லை. நீங்கள் இதை எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு என்பதை விட ஒரு தொந்தரவாகவே, ஒரு பிரச்சனையாகவே உணர்கிறீர்கள்.

ஆகையால், ஆன்மீக செயல்பாடு என்பது இதுதான்:  எப்போதும் எல்லை கட்டவே முயற்சிக்கின்ற ஊர்வன வற்றிக்கான மூளையிலிருந்து விடுபட்டு செல்வது. ஒரு நாய் எல்லா இடத்திலும் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது அந்த நாய்க்கு ஏதோ சிறுநீர் பிரச்சனை இருக்கிறது என்பதால் அல்ல. (சிலர் சிரிக்கிறார்கள்). அது தன் எல்லையை நிர்ணயம் செய்துகொள்கிறது. நீங்கள் நம்புவது போலவே, அந்த நாயும் அதுவே தனது ராஜ்ஜியம் என நம்புகிறது. நீங்கள் தொடர்ந்து எல்லைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள் - மக்களுடனோ அல்லது பொருள்களுடனோ அல்லது இப்புவியின் பரப்புடனோ - நீங்கள் எல்லை கட்டவே விரும்புகிறீர்கள். ஊர்வனவற்றிக்கான மூளையின் அதிகபட்ச வெளிப்பாடுதான் தேசம். ஊர்வனவற்றிற்கான மூளையின் குறைந்த பட்ச வெளிப்பாடுதான் குடும்பம் (கை தட்டல்). எனவே நீங்கள் கண்டிப்பாக நாகதோஷத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், சர்ப்பத்தின் சாபத்தினால்.

எனவே, நீங்கள் விடுதலை அடைய, நாகம் தனது எல்லைகளைக் கடந்து மேலெழும்புதல் என்பது யோகத்தின் முழு அடையாளமாகவே உள்ளது. நாகம் எப்போது மேலெழும்புகிறதோ அப்போது அது நுண்ணுணர்வின் வித்தியாசமான பரிமாணமாக ஆகிறது, அங்கே அது எல்லா தளைகளையும் உடைக்கிறது, எல்லா எல்லைகளையும் கடந்து செல்கிறது. மனிதத்தன்மை என்று கருதப்படுவதையும் தாண்டிச் செல்கிறது. எனவே நாகத்தை தன் தலைக்கு மேலே கொண்டவனை தமிழில் கடவுள் என்றே சொல்கிறார்கள். ஏனென்றால், அவனுடைய உணரும்திறன், அவன் உள்ளனுபவம், அவனுடைய புரிதல் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்கிறது. எனவே நீங்கள் அவனை கடவுளுக்கு ஒப்பானவன் என்றே கொள்வீர்கள்.

தீராநோய்களும் நாகதோஷமும்:

இந்தியாவில் உள்ள சில ஊர்களில், பொதுவாக நாகதோஷம் என்று சொல்லப்படுவது, ஒரு குறிப்பிட்ட விதமான நோயாகும். அது எந்தவித சிகிச்சை முறைக்கும், எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. ஆனால் நீங்கள் நாகம் சம்பந்தப்பட்ட ஒருசிலவற்றைச் செய்தீர்களேயானால், அந்நோய்கள் மறைந்தே போகும். சில சமயங்களில், இது, சிறுநீர் பாதை தொற்றுநோய் போல வெளிப்படலாம். நீங்கள் எண்ணற்ற மருத்துவரிடம் செல்லலாம், எவ்வித மருந்தும் உட்கொள்ளலாம். ஆனால் வருடக்கணக்கில் குணமடையாது, குணமடையாது, குணமடையவே ஆகாது. மருத்துவர்கள் இது போன்றோரை பார்த்திருக்கக்கூடும். முடிவில்லாத சிறுநீர் பாதை தொற்றுநோய் எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதை நாம் நாகதோஷம் என்று சொல்வோம். நோய் எதற்குமே கட்டுப்படவில்லை எனும்போது, சில குறிப்பிட்டவற்றை ஒருவர் செய்யமுடியும்.

ஏனென்றால், இந்நாட்களில் பெரும்பான்மையானவர்களுக்கு முதுகுத்தண்டு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவர்களுக்கு உடலில் போதுமான அளவு தசைகள் இல்லை - அது வேறு விஷயம். அவர்கள் தங்கள் உடலை கல்லறைக்காக பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உடலை அவர்கள் உபயோகப் படுத்துவதே இல்லை. அந்த மாதிரியானவர்களுக்கு முதுகுத்தண்டு பிரச்சனை இருக்கும். இது அதை பற்றி அல்ல. நல்ல உடல்நிலை கொண்ட திடகாத்திரமான மனிதருக்கு, எந்த காயங்களும் இல்லாமலேயே, திடீரென்று சில இடங்களில் முதுகுத்தண்டு வீக்கமடைய துவங்கும் - இது நாகதோஷம்.

சில குறிப்பிட்டவற்றைச் செய்வதன் மூலம் இதை சுலபமாக சரிசெய்துவிட முடியும். அவர்கள் கோயிலுக்கு சென்று வந்தாலே பிரச்சனை மறைந்துவிடும். இதுபோன்ற எண்ணற்ற மக்களை, குறிப்பாக தென்னிந்தியாவில் நீங்கள் பார்க்க முடியும். அல்லது அவர்கள் ஏதேனும் அர்ப்பணம் செய்தால் அது மறைந்துவிடும்.

Saturday, October 12, 2024

சிதம்பரம் ரகசியம் போல ஆலங்காட்டு ரகசியம்.

சிவாயநம நமசிவாய 

*அது என்ன?.., ஆலங்காட்டு ரகசியம்…..?*

*சிதம்பர ரகசியம் னு ஒன்னு இருப்பது எல்லோருக்குத் தெரியும்.*
*அதுபோல ஆலங்காட்டு ரகசியம்னு ஒன்னும் இருக்கு.*
*நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர்.*
*நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும்.*
*இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராககோயில் கொண்டருளுகிறார்.*
*இதை, ரத்தின சபைஎன்று போற்றப்படுகிறது.*
*சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள்.*
*அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. நிறையவர்க்குத் தெரியுமோ?, தெரியாதோ!, தெரியாது.*
*சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார்.*
*இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள்.*
*அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார்.*
*வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரை, என்ன வரம் வேண்டும்?என சிவபெருமான் கேட்டபோது…..*
*அதற்கு காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.*
*அம்மை கேட்ட வரத்தை, அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவபெருமான்.*
*அந்தசமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார் சிவபெருமான்.*
*காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப் போகிறார், எனவே எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்பும்படி கூறிவிட்டு மறைந்தருளினார்.*
*அதன்படியே அம்மன்னனும், நடராஜருக்கு பின்புறம் உள்ள இடத்தில், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பி கட்டிவித்தான்.*
*சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும், அதனுள் ஐக்கியமானார்.*
*இன்றுவரை இந்த நிமிட அளவிலும், இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக்* *கொண்டிருப்பதாக ஐதீகம்.*

*இதுவே, ஆலங்காட்டு ரகசியம்*.
*இந்த திருத்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல பக்தர்களுக்குத் தீர்த்தத்தையே இங்கு வழங்குகின்றனர்.*
*ஆச்சரிய அம்பிகை:*
*நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை ஆச்சரிய அம்பிகை என்கின்றனர்.*
*சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள்.*
*இதனால் அவளுக்கு சமிசீனாம்பிகை என்று பெயர் ஏற்ப்பட்டது.*
*இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள்.*

*இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப் போகும் விதத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த சிலையின் அமைப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.*
*நடராஜர் ஆடிய போது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்திற்கு ஆளாயினர்.*
*சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார்.*
*இதனடிப்படையில் இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.*

*நடுவர்களாக இருவர்:*
*சுனந்தரிஷி என்பவர் சிவநடனம் காண விரும்பி தவமிருந்தார்.*
*இவரைச் சுற்றி புற்று வளர்ந்து நாணல் புல் வளர்ந்து மூடியது.*
*இதனால் இவருக்கு முஞ்சிகேசர் (முஞ்சி நாணல்)என பெயர் வந்தது.*

*அதே சமயம், கார்கோடகன் என்ற நாகமும், செய்த தவற்றுக்கு மன்னிப்பு வேண்டி இங்கு தவமிருந்தது.*
*இருவருக்கும் அருளிய சிவன், நடன போட்டிக்கு அவர்களை நடுவராக இருக்கச் செய்தார்.*
*சிவநடனத்தைக் காணும் பேறு இருவருக்கும் கிடைத்தது.*
*நாட்டிய காளி:*
*நடராஜருடன் போட்டியிட்ட காளிதேவிக்கு தனிக்கோயில்இங்கு உள்ளது.*

*இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.*
*இக்கலிகால வாழ்வு, மிக அபரீத ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டவை.*
*இதில் வாழ்ந்து வரும்போது, நிறைய வினைப் பெருக்கங்களை பெருக்கி அதன் இயல்பாகவே வாழ்கிறோம்.*
*வாழ்வில் எது கிடைத்தாலும், சேமித்து வைத்தாலும், அது நமக்காக அது சொந்தமாகாது.*
*இறுதியில், நம் இறப்புக்கு அப்புறம், அது நம் உறவுகளுக்கோ, அடுத்தவர்க்கோ போய் விடும், அவர்களுக்கும் இதே நிலைதான்.*
*என்றும் இறுதி வரையும் ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கும், அது தானம் தர்மம் புண்ணியம் மட்டுமே.*

*இதைச் செய்யாது விட்டோர், பின் விளைவு கண்டு வருந்துவர்.*
*இருப்பினும்,*
*பிறவாமையைப் பெற்றுக் கொள்வதுதான், கடைசி வழி.*
*நம் செயலும், சிந்தனையும் நல்லதாக இருக்க வேண்டுமென்றால், நாம் சிவநெறிக்குள்ளாக பயணிக்க வேண்டும்.*
*பிறந்தோம், வாழ்கிறோம் என இருந்திடல் கூடாது.*
*இனி இறப்பென்று ஒன்று நமக்கு வருமே?*
*நமக்கு, பிறவா நிலையொன்று ஒன்று வேண்டுமே!, அது முக்கியமல்லவா?*
*இந்த எண்ணம் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உயிருக்கும் வர வேண்டும்.*
*இப்பிறப்பில், கர்ம வினைப் பயன்கள் இனி தொடராதிருந்து, பிறவிப்பயனை முடித்து, மீண்டும் பிறவாமையை பெற வேண்டுமே?*
*அதனால்தான்,*
*பிறப்பை வெறுத்து, பிறவாமைக்கு முற்பட வேண்டுவது.*
*சிவன் இல்லையேல் இப் புவனம் இல்லை*
*சிவன் இல்லையேல் சலனம் இல்லை!*
*சிவன் இல்லையேல் பயணம் இல்லை!*
*சிவன் இல்லையேல் எதுவும் இல்லை!*
*சிவன் இல்லையேல் சக்தி இல்லை!*
*அந்தச் சிவன் இல்லையேல் எந்த ஜீவன் இல்லை!*
*சிவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை!*
*என்றும் எதற்கும், எல்லையே இல்லாதவை சிவனே!!*
*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*
*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*

Friday, October 11, 2024

கலியுகம் பற்றி 5000 ஆண்டுகள் முன்பு வேதா வியாசர் கணித்து சொன்னது.

5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
     
    1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
     [பாகவத புராணம் 12.2.1]

    2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
     மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
     மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
     [பாகவத புராணம் 12.2.2]

    3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
     தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். 
     [பாகவத புராணம் 12.2.36)

    4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
     கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
     வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
     [பாகவத புராணம் 12.2.4]

    5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
     குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
     [பாகவத புராணம் 12.2.5]

    6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
     முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். 
    வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். 
    பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.6]

    7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். 
    தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். 
    [பாகவத புராணம் 12.2.7]

    8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
    இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
    (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.9]

    9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
     இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.10]

    10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
    [பாகவத புராணம் 12.2.11]

    11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். 
   [பாகவத புராணம் 12.3.42]

    12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
     நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
     [பாகவத புராணம் 12.3.41]

    13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
     தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
     தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். 
    [பாகவத புராணம் 12.3.38]

    14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
     இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
     நன்றிகடன் மறக்கப்படும். 
    [பாகவத புராணம் 12.3.36]

  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
       அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். 
     போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

ராமேஸ்வரத்தை பற்றி சில தேவரகசியங்கள்

சிவகாலை வணக்கம்  🙏
இராமேஸவரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்: 

ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி 
பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் 
கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த
மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது

இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய
பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும்.

மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் 
உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.

பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட  உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. 

ஒரு முறை சிலர்,ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். 

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. 

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
 
மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம்பேருக்கு  தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில்சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
 அவனது குழந்தை பாக்கியம் 
இல்லா குறையைத் தீர்க்க  மகாலட்சுமியையே 
அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். 

அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக 
அருளுகிறார். 

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி 
தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவரகள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன்பெறுங்கள்.

Thursday, October 10, 2024

உங்கள் வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் வற்றாத செல்வம் இருக்கும்

உங்க வீட்டு ஹாலில் இந்த 5 பொருட்கள் இருந்தால் அள்ள அள்ள குறையாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்குமாம் தெரியுமா?

பொதுவாக ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது என்பது சாஸ்திர ரீதியான நம்பிக்கையாகும். ஒவ்வொரு பொருட்களுக்கும் சில அதிர்வலைகள் உண்டு. குறிப்பாக உயிருள்ள பொருள்களுக்கு அதிகம் அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி உண்டு. இப்படி நம் வீட்டு ஹாலில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் மூலம் நமக்கு செல்வ செழிப்பும் உண்டாக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? அந்த வகையில் இந்த 5 பொருட்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

அதிர்ஷ்டம் தரும் பொருட்களில் முதல் வகையாக இருப்பது குபேர பொம்மை. வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், இந்திய நாட்டில் கூட குபேர பொம்மை விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இந்த பொம்மையை வாங்கி வைத்தால் அதிர்ஷ்டம் வருமா? என்றெல்லாம் தெரியாது. ஆனால் இதனைப் பார்க்கும் பொழுது நமக்குள் மறைந்திருக்கும் புன்னகையும், புத்துணர்வும் தானாகவே வெளியில் வருவதை நம்மால் உணர முடிகிறது. இந்த குபேர பொம்மையை வடக்குத் திசையாக வைத்து அதன் வயிற்றில் தினமும் தடவி வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு பணத்தை சேகரிக்கும் உண்டியல் குபேர பொம்மையாக பார்த்து வாங்கி கொடுப்பது இன்னும் சிறப்பு.


இரண்டாவதாக உயிருள்ள செடிகள் வீட்டில், ஹாலில் இருப்பது அவ்வளவு விசேஷமான பலன்களைக் கொடுக்கும். மணி பிளான்ட், கற்றாழை, வாஸ்து ரீதியான செடிகள் போன்ற வீட்டிற்குள் வளர்க்க முடிந்த செடிகளை உங்களால் முடிந்த ஒன்றிரண்டு செடிகளை வளர்த்தால் கூட அதிலிருந்து வரும் ஆற்றல் நமக்கு நேர்மறை சக்தியை கொடுக்கும். தினமும் நாம் அதிக நேரம் ஹாலில் தான் புழங்கிக் கொண்டிருப்போம். இங்கு பசுமையான அந்த நிறத்தை கண்கள் வழியாக உள்வாங்கி, மூளைக்கு சென்று நம்மிடம் இருக்கும் நேர்மறை ஆற்றலைத் தூண்டி விடும். வீட்டிற்குள் இருக்கும் அசுத்த காற்றை நீக்கி ஆக்சிஜனை கொடுக்கக் கூடிய இந்த உயிர் உள்ள செடிகள் அதிர்ஷ்டம் தரும் பொருளாகக் காணப்படுகின்றது.


இந்த வகையில் திருஷ்டி கழிக்க கண்ணாடி டம்ளருக்குள் எலுமிச்சையை போட்டு வைப்பது இன்னும் விசேஷம். ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை முக்கால்வாசி நிரப்பிக் கொண்டு அதனுள் புள்ளிகள் அற்ற சுத்தமான எலுமிச்சை ஒன்றை போட்டு கொள்ள வேண்டும். இதனை வீட்டிற்கு வரும் அனைவரின் கண்களில் படும்படி ஒரு இடத்தில் தொந்தரவு தராமல் வைத்து விடுங்கள். எலுமிச்சையை வாரம் ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். இதுவும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றலை நிலை பெறச் செய்து செல்வ செழிப்பை உண்டாக்கும் ஒரு பரிகாரமாகும். அதனால் தான் பெரிய பெரிய கடைகள் முதல் தொழில் செய்யும் இடங்கள் வரை அனைத்து இடங்களிலும் இவ்வாறு செய்து வைக்கப்படுகின்றன.

ஒரு கண்ணாடி பௌலில் கொஞ்சம் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கிராம்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஜாதிக்காய், கடுக்காய், பச்சைகற்பூரம் ஆகியவற்றை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை வீட்டின் ஹாலுக்கு நடுப் பகுதியில் இருக்கும் மேஜையில் வைக்கலாம் அல்லது எல்லோரும் பார்க்கும் ஒரு பொது இடத்தில் வைக்கலாம். இதிலிருந்து பரவும் தெய்வீக வாசம் வீடு முழுவதும் பரவும். இதனால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டின் செல்வ நிலை உயரும் என்பது எளிய சூட்சம பரிகாரங்கள் ஆகும்.

ஐந்தாவதாக வீட்டின் ஹாலில் மண் பொம்மைகள் இருப்பது அதிர்ஷ்டத்தை பெருக செய்யும். குதிரை பொம்மை, யானை பொம்மை, மயில் பொம்மை, விநாயகர் சிலை, மகாலட்சுமி சிலை அல்லது அதிர்ஷ்டம் தரும் மண் பொம்மைகளை, மண் சிலைகளை உங்களுக்கு விருப்பம் போல வாங்கி பெரிதாக வரவேற்பறையில் வைத்து விட்டால் போதும்! அள்ள அள்ள குறையாத செல்வம் மழை தான் பொழிய போகிறது. இதில் உங்களுக்கு பிடித்தமானதை, உங்களுக்கு முடிந்ததை நீங்கள் செய்து ஹாலில் வையுங்கள், பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்.

நமக்கு ஏன் கஷ்டங்கள் வருகிறது.

✍️கேள்வி..
நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனக்கு என்ன சந்தேகம் என்றால் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பலனை சென்ற ஜென்மத்திலேயே அனுபவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 
சென்ற ஜென்ம ஞாபகம் துளியும் இல்லாத போது நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை சென்ற ஜென்மத்தில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று கூறும் போது அதனை மனது ஏற்க மறுக்கிறது. 
....
பதில்..
போனஜன்மத்தின் ஞாபகத்தோடு ஒருவர் பிறப்பதாக வைத்துக்கொள்வோம்,அப்போது என்ன நடக்கும்?
குழந்தை பிறந்து பேச கற்றுக்கொண்டவுடனேயே போனஜன்மத்து ஞானங்கள் அதன் மனதில் தோன்றும்,
அது இந்த ஜன்மத்து அப்பா அம்மாவை விட்டு விட்டு போன ஜன்மத்து அம்மா அப்பாவை தேடி அலையும்.
போன ஜன்மத்தில் தன்னுடைய மனைவியை தேடி அலையும்.
ஒருவேளை போன ஜன்மத்தில் யாராவது இவனை கொலை செய்திருந்தால்,பழி தீர்ப்பதற்காக அலைவான்.
அத்தோடு அதற்கு முந்திய பல பிறவி ஞாபகங்களும் வரும்,
இது மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி அவனை பைத்தியமாக்கிவிடும்
..
அதேநேரத்தில் போன ஜன்மங்களின் நினைவுகள் முற்றிலும் அழியவில்லை. நாம் விரும்பினால் அவைகளை நியாபகத்தில் கொண்டுவர முடியும்.
அதற்கு தனியாக மனத்தை பக்குவப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பிறரது முந்தைய பிறவிகளை நியாபகத்தில் கொண்டுவரும் மனஇயல் வல்லுனர்கள் இருக்கிறார்கள்.
எனவே  பழைய நியாபகங்கள் எதுவும் அழியவில்லை.அவைகள் அப்படியே பாதுகாப்பாக உள்ளது.
இதை நமது வாழ்நாளிலேயே பார்க்கலாம்.
..
சிலர் ஒரு இடத்தில் நீண்டகாலம் பணியாற்றிக்கொண்டிருப்பார். திடீரென்று பணி மாறுதல் ஏற்பட்டு வெளிநாடு சென்றுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது ஏற்கனவே வாழ்ந்த பழையஇடத்தின் நினைவுகள் படிப்படியாக ஆழ்மனதிற்குள் செல்ல ஆரம்பிக்கும். புதிய இடத்தின் நினைவுகள் மேலோங்கியிருக்கும்.காலம் செல்ல செல்ல பழைய இடங்களின் நினைவுகளில் பல அழிந்துபோனதுபோல தோன்றும்.
ஒருவேளை பல ஆண்டுகளுக்குப்பிறகு பழைய நண்பர் ஒருவர் நம்மைக்காண வந்தால்கூட,இவரை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று தோன்றும்,அவரைப்பற்றிய முழு விபரங்களுடன் உடனே நம்மனதில் தோன்றுவதில்லை.
உதாரணமாக நாம் சிறுவயதில் வாழ்ந்த அத்தனை நாட்களையும் நினைவில் கொண்டுவர முடியாது.சிறுவயது நண்பர்களின் முகம்கூட அழிந்துபோயிருக்கும்.ஏனென்றால் அந்த நினைவுகள்  ஆழ்மனதிற்குள் சென்றுவிட்டன.
..
இந்த பிறவியிலேயே சிறுவயது வாழ்க்கையைக்கூட நம்மால் நியாபகத்தில் கொண்டுர முடிவதில்லை.
மரணத்திற்கு பிறகு பழைய நியாபகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக ஒருவனிடமே இருக்கிறது.அவைகள் அழிவதில்லை.
அந்த ஞாபகம் இருப்பதால்தான் இறந்தவரின் ஆவி தனது சொந்தக்காரர்களை அடையாளம் காண்கிறது.
..
நமது உடல் தூல மற்றும் சூட்சம உடலால் ஆனது. நினைவுகள் அனைத்தும் சூட்சும உடலில்தான் பதியப்பட்டிருக்கும்.
தூலஉடல் அழிந்தாலும் சூட்சும உடல் அழியாது.நினைவுகள் அப்படியே இருக்கும்.
தான் செய்த தவறுகளை நினைத்து இறந்த ஆவி வருத்தப்படும்.
..
வயது முதிர்த்த காலத்தில் ஒருவர் படுத்தபடுக்கையாக கிடக்கிறார்.உடல் கிட்டதட்ட அசைவற்றுவிடுகிறது. அந்த நேரத்தில் மனம் மிகவும் வலிமையாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.பல்வேறு நினைவுகள் மனத்தை சூழ்ந்துகொண்டெ இருக்கும். சிறுவயது ஞாபகங்கள் அப்போது எழும். அத்துடன் முந்தைய பிறவி ஞாபகங்கள்கூட வரலாம்.சிலநேரம் அவர்கள் அழுவார்கள் சிலநேரம் சிரிப்பார்கள்.
அந்த நிலையிலேயே அவர் உடலைவிட்டுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போதும் அவரது மனதில் அந்தபிறவி மற்றும் முந்தைய பிறவிகளின் சிந்தனைகள் எழுந்துகொண்டே இருக்கும்.
..
ஆத்மா சாந்தி அடைதல் என்றால் என்ன?
அப்படி பல்வேறு சிந்தனைகளுடன் ஒருவர் இறந்துபோன பிறகும் அவரது ஜீவாத்மா குழப்பத்துடனேயே இருக்கும்.
அந்த நிலையில் ஞானத்தை ஊட்டும் பாடல்களைப் பாடுவார்கள்.
ஞானப்பாடல்களை பாடும் ஞானிகளை அழைத்துவருவார்கள்.
பக்திபாடல்களைப் பாடுவார்கள்.அப்போது அந்த ஜீவாத்மாவிற்கு வைராக்கியம் ஏற்படும்.உலகத்தின்மீதும்,சொந்தங்களின்மீதும் உள்ள பற்று விலகும்.
உலகத்தின்மீது தீவிர வைராக்கியம் ஏற்படும்போது,ஏற்கனவே பலமுறை பிறந்துபிறந்து இறந்துவிட்டோம்,மீண்டும் இந்த உலக வாழ்க்கை வேண்டாம் என்று தோன்றும்.
அப்போது ஆத்மா சாந்தி அடைகிறது. மனதின் சமநிலையை அடைகிறது.நிலைத்த அமைதியை அடைகிறது.
..
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்னமும் முடியவில்லை.
..
ஒருவேளை ஒவ்வொருவரும் அந்த பிறவியில் செய்த பாவங்களை அந்த பிறவியிலேயே அனுபவித்து முடித்தாக வேண்டும் என்று விதி இருந்தால் என்னவாகும்?
சிலர் தெரிந்தே பாவகாரியங்களை செய்வார்கள். அந்த பாவத்தின் பலனை அனுபவித்து முடிக்கும்வரை அவனுக்கு மரணம் ஏற்படாதே! எனவே தொடந்து பாவங்களை செய்துகொண்டே மரணமில்லாமல் வாழ்ந்து வருவார்கள். அவனைப்பின்பற்றி அனைவரும் அதேபோல வாழ முயற்சிசெய்வார்கள்.உலகத்தில் பிறப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.ஆனால் மரணம் ஏற்படவே செய்யாது.
இது உலக அழிவிற்கு வழிவகுக்கும் அசுரர்கள் இவ்வாறே வாழ முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார்கள். அவர்கள் எல்லா பாவங்களையும் செய்வார்கள் அதேநேரம் சாகவரம் வேண்டும் என்று கேட்பார்கள்..அது நடக்காது...
..
முற்பிறவி அனுபவங்களை யாருமே மறைக்கவில்லை..
இறப்பதற்கு முன்பு ஒருவருக்கு என்ன நினைவு இருக்குமோ அதுதான் இறந்தபிறகும் இருக்கும்.
அதன்பிறகு அவர் புதிய உடலுக்குள் செல்லும்போது பழையவை அனைத்தும் மறந்துவிடுகிறது.
அதற்கு காரணம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றுவிடுகிறது.
அந்த உறக்கம் என்பது தினமும் உறங்கும் ஒரு இரவு உறக்கம் அல்ல. பல மாதங்கள் தொடந்து உறங்கும் ஆனந்தஉறக்கம்.
அது பழைய நினைவுகள் அத்தனையும் மறந்துவிடுகிறது.
ஆனந்தம்மேலிடும்போது ஒருவர் அனைத்தையும் மறந்துவிடுகிறார்.அதேபோன்ற நிலை.
..
பழைய நியாபங்களுடன் பிறந்தால் பிறக்கும்போதே அதன் துன்பங்களும் தொடங்கிவிடும்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. தாய்,தந்தை மற்றும் குருவின் வழிகாட்டுதலால் எப்படிப்பட்ட கெட்ட குழந்தையும் நல்லவனாக மாறமுடியும்.
குந்தையின் சிறுவயது வாழ்க்கை ஆனந்தமாக கழிகிறது.
பழைய நியாபகங்கம் எதுவும் இல்லாததால்தான் குழந்தையின் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கிறது.
ஞானியும் அனைத்தையும் மறக்கிறான்.அவனது வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கிறது.
..
இந்த பிறவியில் நான் தவறு செய்யவில்லை. ஆனாலும் முற்பிறவியின் பலனால்தான் துன்பப்படுகிறேன் என்பதை ஒருவன் நம்பினால் அவனுக்கு மனகுழப்பம் ஏற்படுவதில்லை. இந்த துன்பங்களை அனுபவித்து முடித்துவிட்டு மீண்டும் பிறப்பற்ற நிலையை அடைவோம் என்றுதான் அவன் யோசிப்பான்.
..
ஒரு கடவுள் எங்கேயோ அமர்ந்துகொண்டு நமது முந்தைய பிறவிகளின் அனுபவத்தை மறைத்துவைப்பதில்லை.
சில ஞானிகள் பிறக்கும்போதே முற்பிறவி ஞாபகத்துடன் பிறக்கிறார்கள். சிறு வயதிலேயே வீட்டைத்துவந்து தவம்இயற்ற சென்றுவிடுகிறார்கள்.
மிருகங்களுக்கு மனம் இல்லை. எனவே முற்பிறவிகள் எதுவும் அதற்கு தெரியாது.
மனிதமனம் பக்குவம் அடைய அடைய பல பிறவிகளை அறியும் சக்திபெறுகிறது.
...🕉️

Wednesday, October 9, 2024

பரிகாரங்கள் என்பது நல்ல வரப்பிரசாதமாகும்

🌹 பரிகாரம் ஒரு வரம்🌹

🌹எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொண்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
🌹வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
🌹 இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ] இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
🌹குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.
🌹கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
🌹 ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
🌹வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.
🌹சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
🌹கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
🌹ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
🌹சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
🌹சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
🌹சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
🌹பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
🌹மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
🌹கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
🌹நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
🌹வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
🌹ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
🌹சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
🌹செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
🌹விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
🌹ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
🌹பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
🌹புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
🌹வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
🌹பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
🌹வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
🌹தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க , வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
🌹 எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
🌹வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
🌹உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள் - மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
🌹ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.
🌹இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள், தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
🌹அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர் ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம் செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை, மற்றும் லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
🌹சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

Tuesday, October 8, 2024

நவகிரக கோயில்கள் மற்றும் அதனுடைய சிறப்புகள்

🙏🕉🙏🕉🙏🕉🙏🕉நவகிரக_கோவில்களும் 
அதன்_சிறப்புக்களும்

ஆலங்குடி - குரு வியாழன்
திங்களூர் - சந்திரன்
திருநாகேஸ்வரம் - ராகு
சூரியனார் கோயில் - சூரியன்
கஞ்சனூர்:சுக்கிரன் - வெள்ளி
வைதீஸ்வரன் கோயில் - செவ்வாய்
திருவெங்காடு - புதன்
கீழ் பெரும்பள்ளம் - கேது
திருநள்ளார் - சனீஸ்வரன்

#சூரியன் 

நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 -ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னனால், கோவில்களின் சொர்க்கபூமி கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இந்த சூரியக்கடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக, வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப் படுகிறது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார் என்று கொள்ளப்படுகின்றது. மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்களாகக் கொண்டுள்ளன.

#ராகு 

திருநாகேஸ்வரம், ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் இந்த ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமஹாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருநள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த ராகுவே ஒருவரின் ஆற்றலை வலிமை படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் அதிதேவதை துர்காதேவி ஆகும். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

#செவ்வாய் 

கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் 'மார்ஸ்' (மார்ச்) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். ரோமானியர்களும் இவரைத் தங்களின் குருவாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். இவ்விடம் புள்-இருக்கு-வேலூர் என்றும் அழைக்கப் படுகிறது. ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை நாம் காணலாம்.

இந்த வைதீஸ்வரன் கோவில் எப்பொழுதும் பக்தகோடிகள் நிரம்பி காணப் படுகின்றது. இங்கு அங்காரகன் என்னும் செவ்வாய் -உடன் வைத்தியநாத சுவாமி (சிவா) தனது துனைவி தையல் நாயகி என்கின்ற வலம்பிகையுடன் எழுந்தருளி தனதருளால் பக்த கோடிகளுக்கு ஆரோக்கியத்தினையும் வளமான வாழ்க்கையினையும் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருக கடவுளுக்கு கிருத்திகையில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேக புலவர் ஆகியோர் இங்கு வந்து பல பாடல்களால் இத்தலத்தினையும் எழுத்தருளும் தெய்வங்களையும் வாழ்த்திப் பாடியுள்ளார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு வேறு எங்கும் காணாத சிறப்பிடமாக இத்தலம் கருதப் படுகின்றது.

#சந்திரன் 

திங்களூர், என்றழைக்கப்படும் இந்த தலம் எப்போது, யாரால் அமையப் பெற்றது என்று ஐயப்பாடு இருந்தாலும், வரலாற்று ஆசிரியர்கள், பக்தி மார்க்க காலம் ஆகிய , கி.மூ.ஏழாம் நூற்றாண்டிற்கு வெகுகாலம் முன்பே, ஆங்கிலத்தில் மூந் என்றும் சமஸ்கிருதத்தில் சந்திரன் என்றும் தமிழில் திங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கிரகத்துக்குரிய இத்தலம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். நீண்ட ஆயுளையும் வசதியான வாழ்க்கையையும் பெற இக்கிரகத்தினை ஆராதிக்கின்றனர். ஜோதிடத்தில், இந்த சந்திரன் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடிய கிரகமாக கூறப்படுகிறது. தேவி பார்வதி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

#சனி 

திருநள்ளார், கோவில்களின் சொர்க்க பூமியான கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் ஸ்யாடர்ந் என்றும் தமிழில் சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படும், இக்கிரகத்திற்கு அமைந்துள்ள ஒரே கோவிலாகும் இத்தலம். தனது வான வெளி சஞ்சாரத்தின் பொழுது, இத்தளத்தின் மீது தனது அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டுள்ள, இந்த சனி கிரகத்தை, புராணக் கதைகளில் புகழ்பெற்ற நலமஹாராஜா இங்குள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, ஆராதித்து, தனது பெரும்துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்ததை அக்காவியம் குறிப்பிடுகிறது. இத்தளத்தில் உள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, சனி பகவானை ஆராதித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் எல்லா வித துரதிருஷ்டங்களும், துன்பங்களும் கழுவப்பட்டு, நிவர்த்தி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந்த சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில், ஜனன காலத்திலும், சஞ்சார காலத்திலும் தனது இருப்பிடம் முகாந்திரமாக அந்த ஜாதகருக்கு துன்பங்களும், தொல்லைகளும், துயரங்களும் கொடுப்பவர் எனவும், அதேபோல் ஈடாக இவரை மனப்பூர்வமாக ஆராதிக்கும் பக்தர்களுக்கு நலம் பயக்கும் நல்லவராகவும் இருப்பார் என்றும் ஜோதிட குறிப்புக்கள் கூறுகின்றன. இந்த சனி கிரகத்தின் அதி தேவதை யமதர்மா ஆகும். நாச விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைக்கும் தகவல்களும் உண்டு. இத்தளத்தை கடக்கும் விண்வெளி கலங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் எந்த ஒரு சமிக்கையும் வழங்காமல் இருந்ததைக் கண்ட விஞ்ஞானிகள் அவ்விடம் இதுவென கண்டு பல ஆராய்ச்சிகளின் மத்தியில் ஒன்றும் அறியாமல் அதிசயப்பட்டுப் போனார்கள். இதனைப் பற்றிய குறிப்புக்களை தங்களின் பதிவேடுகளில் பதிவும் செய்துள்ளார்கள்.

#சுக்கிரன் 

கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் வீனூஸ் என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம் திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம் அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார்.

#கேது 

கீழ்பெரும்பள்ளம், கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராதன, வரலாறு கொண்ட சிவஸ்தலம் ஆகும். கேது என்னும் கிரகம் இக்கோவிலில் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக ஜோதிடக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப் படுகின்றன. இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவில் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர் என்று கூறப் படுகிறது. இக்கேதுவுக்கு அதி தேவதைகள் கணேசர் எனப்படும் விநாயகக் கடவுளும், இந்திரனும் ஆவார்கள்.

#குரு 

ஆலங்குடி, கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி மூலவராகக் கொண்ட இத்தலத்தில் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படும் குரு(வியாழன்) என்னும் இந்த கிரகம், கற்றுளியால் சுவற்றில் புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டு, காணப்படுவது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி எனப்படும் காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் பக்தகோடிகள். பார்வதி தேவியானவள் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, பின், சிவனுடன் இணைந்ததாக ஐதீகம். நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கொடுப்பதும், பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம் தருவதும், நீண்ட ஆயுள், வலிமை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல கல்வி வழங்குவதும் இக்குரு கிரகத்தின் ஆதிக்கமாகும். 'குரு பார்க்க கோடி புண்ணியம்' என்பது

#புதன் 

திருவெண்காடு, இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப் படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் என்றும் ஆங்கிலத்தில் மர்க்யுரீ என்றும் அழைக்கப் படும் இக்கிரகம் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப் படுகிறது. அதிமேதாவிதனத்தையும், அறிவுக் கூர்மையையும், செல்வ சம்பத்தையும் தனது பக்தர்களுக்கு வழங்குவதில் முதன்மை பெற்றது. இக்கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். சைவதிருமறைகளிலும், சாஸ்திரங்களிலும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு. அனைத்து கர்ம காரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் என்று தமிழிலும், மர்க்யுரீ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப் படும் இக்கிரகம் கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது.

Monday, October 7, 2024

தர்ப்பைப்புல் மகத்துவம்

தர்பை  புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.

இந்த புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அம்மாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.

தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.
தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம்.  

தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.

அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை.

ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.

நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விஷேஷ காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .

ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது; உடலிலும் பரவும். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும், 
தர்பை, உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்துக்கு, மின்சாரத்.ைதை கடத்தும் சக்தி உண்டு, அ.ேதே சக்தி, தர்.ைபைக்கும் உண்டு. எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் மோதிரம் முடியவேண்டும்.

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.

தர்பையில்  மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். 

இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.

சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.

தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.

Friday, October 4, 2024

ஐந்து அதிசயங்களை உள்ளடங்கிய ஆலயம்.

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய  ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று 
உள்ள‍து

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்....

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது...

இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்.....

*இறவாத "பனை", 

*"பிறவாத புளி," 

*"புழுக்காத சாணம்," 

*"எலும்பு கல்லாவது," 

*"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து." 

"இதுதான் அந்த அதிசயங்கள்....!!"

இறவாத பனை...!!

பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது....

இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்....

இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால்,

தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள்....

பிறவாத புளி...!!

அடுத்து "பிறவாதபுளி," என்றுபோற்ற‍ப்படும் "புளியமரம்" இங்கு இருக்கிறது...

இந்த "புளியமரத்தின்" கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்....

"புளியம்பழத்தின்" கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள்....

"முளைக்க‍வே இல்லை." 

இந்த "புளியமரம்" இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம்...

அதனால் "பிறவாத புளி "என்று அழைக்கிறார்கள்...

புழுக்காத சாணம்...!!

மூன்றாவதாக புழுக்காத "சாணம்," கோயில் இருக்கிற "பேரூர்" எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில்
ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் "சாணம் " 
மண்ணில் கிடந்தால்
எத்த‍னை நாட்கள் ஆனாலும அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்....

மனித எலும்புகள் கல்லாவது...!!

அடுத்து "மனித எலும்புகள்" கல்லாவது. 

இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை
இந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம்....

அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற "எலும்புகள் "சிறிது காலத்தில் "கற்களாக உருமாறி" கண்டெடுக்க‍ப்படுகிறதாம்....

என்ன‍அதிசயமாக 
இருக்கிறது அல்ல‍வா...!!

*அதுதான்" பட்டீஸ்வரரின்" திருவருவள்.

த‌மது வலது "காதை" மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து...!!

ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும்   இங்கு  இன்னமும்  நடந்து   கொண்டுதான் இருக்கின்றது.

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற "பட்டீஸ்வரர்....!!""

இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார்....

ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது....

முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.... 

அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும்...

அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்....

இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது "பட்டீஸ்வரர்."

**கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர்....

இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை...

மார்பில் பாம்பின் பூணூல்...

தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள்....

சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்...

இவைகளோடு " பட்டீஸ்ரர்" தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.....

இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்  திருக்கிறார்கள்...

இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன....

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் ""திப்பு சுல்தான்."" 

இந்தக் கோயில்
அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்....

ஆம் இறைவன் குடியிருக்கும் "சிவலிங்கம்" அடிக்க‍டி அசையும் என்று...

இதை நம்பாமல் 
"சிவாலயத்தின் " 
மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் "திப்பு சுல்தான்"

அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன....

நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்...

கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது 
நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது "பட்டீஸ்வரரிடம்" தன்னை 
மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்....

கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்....

இவனைப்போன்றே "ஹதர் அலியும் " நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன....

இக்கோயிலின் "ஸ்தல விருட்சம் அரச மரமாகும்...."

"பட்டீஸ்வரனின் "
சிறப்புக்களை எல்லாம் பார்த்தோம்....

இனி "தாயின் "
சிறப்புக்களைப் பார்போம்....

இங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் ""பச்சை நாயகியாகும்....."" 

""பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்" அன்னை எழில் ஓவியமாக 
எழுந்தருளியிருக்கிறாள்...

அன்னையின் அன்புமுகத் தைப்பார்த்து கொண்டேயி ருக்க‍லாம்....

அவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள்....

இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது.... 

அத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது....

கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள்
நிற்கின்றன....

அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவா க்க‍ப்பட்டுள்ள‍து....

ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை...

 நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்....

இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன....

குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது....

இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன....

சிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டகாணப்படுகிறது  அல்ல‍...

தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது....

மேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப்படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது....

என்ன‍ இப்போது உங்களுக்கு இந்த கோயிலுக்குப் போக வேண்டும்....

அந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வேண்டும்....

என்ற எண்ண‍ம் வந்திருக்குமே...

சரி, கோயிலுக்கு 
புறப்படுங்கள்....

ஆனால்...

ஒரு சின்ன‍ செய்தி அவனிடம் பணம் கேட்டுப்போகாதீர்கள்....

ஓடி ஒளிந்து  கொள்வான்...

அருள் வேண்டி போங்க... அவன் அருளை அள்ளித் தருவான்...

ஓம் நமசிவாய