Thursday, October 10, 2024

நமக்கு ஏன் கஷ்டங்கள் வருகிறது.

✍️கேள்வி..
நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனக்கு என்ன சந்தேகம் என்றால் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பலனை சென்ற ஜென்மத்திலேயே அனுபவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 
சென்ற ஜென்ம ஞாபகம் துளியும் இல்லாத போது நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை சென்ற ஜென்மத்தில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று கூறும் போது அதனை மனது ஏற்க மறுக்கிறது. 
....
பதில்..
போனஜன்மத்தின் ஞாபகத்தோடு ஒருவர் பிறப்பதாக வைத்துக்கொள்வோம்,அப்போது என்ன நடக்கும்?
குழந்தை பிறந்து பேச கற்றுக்கொண்டவுடனேயே போனஜன்மத்து ஞானங்கள் அதன் மனதில் தோன்றும்,
அது இந்த ஜன்மத்து அப்பா அம்மாவை விட்டு விட்டு போன ஜன்மத்து அம்மா அப்பாவை தேடி அலையும்.
போன ஜன்மத்தில் தன்னுடைய மனைவியை தேடி அலையும்.
ஒருவேளை போன ஜன்மத்தில் யாராவது இவனை கொலை செய்திருந்தால்,பழி தீர்ப்பதற்காக அலைவான்.
அத்தோடு அதற்கு முந்திய பல பிறவி ஞாபகங்களும் வரும்,
இது மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி அவனை பைத்தியமாக்கிவிடும்
..
அதேநேரத்தில் போன ஜன்மங்களின் நினைவுகள் முற்றிலும் அழியவில்லை. நாம் விரும்பினால் அவைகளை நியாபகத்தில் கொண்டுவர முடியும்.
அதற்கு தனியாக மனத்தை பக்குவப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பிறரது முந்தைய பிறவிகளை நியாபகத்தில் கொண்டுவரும் மனஇயல் வல்லுனர்கள் இருக்கிறார்கள்.
எனவே  பழைய நியாபகங்கள் எதுவும் அழியவில்லை.அவைகள் அப்படியே பாதுகாப்பாக உள்ளது.
இதை நமது வாழ்நாளிலேயே பார்க்கலாம்.
..
சிலர் ஒரு இடத்தில் நீண்டகாலம் பணியாற்றிக்கொண்டிருப்பார். திடீரென்று பணி மாறுதல் ஏற்பட்டு வெளிநாடு சென்றுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது ஏற்கனவே வாழ்ந்த பழையஇடத்தின் நினைவுகள் படிப்படியாக ஆழ்மனதிற்குள் செல்ல ஆரம்பிக்கும். புதிய இடத்தின் நினைவுகள் மேலோங்கியிருக்கும்.காலம் செல்ல செல்ல பழைய இடங்களின் நினைவுகளில் பல அழிந்துபோனதுபோல தோன்றும்.
ஒருவேளை பல ஆண்டுகளுக்குப்பிறகு பழைய நண்பர் ஒருவர் நம்மைக்காண வந்தால்கூட,இவரை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று தோன்றும்,அவரைப்பற்றிய முழு விபரங்களுடன் உடனே நம்மனதில் தோன்றுவதில்லை.
உதாரணமாக நாம் சிறுவயதில் வாழ்ந்த அத்தனை நாட்களையும் நினைவில் கொண்டுவர முடியாது.சிறுவயது நண்பர்களின் முகம்கூட அழிந்துபோயிருக்கும்.ஏனென்றால் அந்த நினைவுகள்  ஆழ்மனதிற்குள் சென்றுவிட்டன.
..
இந்த பிறவியிலேயே சிறுவயது வாழ்க்கையைக்கூட நம்மால் நியாபகத்தில் கொண்டுர முடிவதில்லை.
மரணத்திற்கு பிறகு பழைய நியாபகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக ஒருவனிடமே இருக்கிறது.அவைகள் அழிவதில்லை.
அந்த ஞாபகம் இருப்பதால்தான் இறந்தவரின் ஆவி தனது சொந்தக்காரர்களை அடையாளம் காண்கிறது.
..
நமது உடல் தூல மற்றும் சூட்சம உடலால் ஆனது. நினைவுகள் அனைத்தும் சூட்சும உடலில்தான் பதியப்பட்டிருக்கும்.
தூலஉடல் அழிந்தாலும் சூட்சும உடல் அழியாது.நினைவுகள் அப்படியே இருக்கும்.
தான் செய்த தவறுகளை நினைத்து இறந்த ஆவி வருத்தப்படும்.
..
வயது முதிர்த்த காலத்தில் ஒருவர் படுத்தபடுக்கையாக கிடக்கிறார்.உடல் கிட்டதட்ட அசைவற்றுவிடுகிறது. அந்த நேரத்தில் மனம் மிகவும் வலிமையாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.பல்வேறு நினைவுகள் மனத்தை சூழ்ந்துகொண்டெ இருக்கும். சிறுவயது ஞாபகங்கள் அப்போது எழும். அத்துடன் முந்தைய பிறவி ஞாபகங்கள்கூட வரலாம்.சிலநேரம் அவர்கள் அழுவார்கள் சிலநேரம் சிரிப்பார்கள்.
அந்த நிலையிலேயே அவர் உடலைவிட்டுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போதும் அவரது மனதில் அந்தபிறவி மற்றும் முந்தைய பிறவிகளின் சிந்தனைகள் எழுந்துகொண்டே இருக்கும்.
..
ஆத்மா சாந்தி அடைதல் என்றால் என்ன?
அப்படி பல்வேறு சிந்தனைகளுடன் ஒருவர் இறந்துபோன பிறகும் அவரது ஜீவாத்மா குழப்பத்துடனேயே இருக்கும்.
அந்த நிலையில் ஞானத்தை ஊட்டும் பாடல்களைப் பாடுவார்கள்.
ஞானப்பாடல்களை பாடும் ஞானிகளை அழைத்துவருவார்கள்.
பக்திபாடல்களைப் பாடுவார்கள்.அப்போது அந்த ஜீவாத்மாவிற்கு வைராக்கியம் ஏற்படும்.உலகத்தின்மீதும்,சொந்தங்களின்மீதும் உள்ள பற்று விலகும்.
உலகத்தின்மீது தீவிர வைராக்கியம் ஏற்படும்போது,ஏற்கனவே பலமுறை பிறந்துபிறந்து இறந்துவிட்டோம்,மீண்டும் இந்த உலக வாழ்க்கை வேண்டாம் என்று தோன்றும்.
அப்போது ஆத்மா சாந்தி அடைகிறது. மனதின் சமநிலையை அடைகிறது.நிலைத்த அமைதியை அடைகிறது.
..
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்னமும் முடியவில்லை.
..
ஒருவேளை ஒவ்வொருவரும் அந்த பிறவியில் செய்த பாவங்களை அந்த பிறவியிலேயே அனுபவித்து முடித்தாக வேண்டும் என்று விதி இருந்தால் என்னவாகும்?
சிலர் தெரிந்தே பாவகாரியங்களை செய்வார்கள். அந்த பாவத்தின் பலனை அனுபவித்து முடிக்கும்வரை அவனுக்கு மரணம் ஏற்படாதே! எனவே தொடந்து பாவங்களை செய்துகொண்டே மரணமில்லாமல் வாழ்ந்து வருவார்கள். அவனைப்பின்பற்றி அனைவரும் அதேபோல வாழ முயற்சிசெய்வார்கள்.உலகத்தில் பிறப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.ஆனால் மரணம் ஏற்படவே செய்யாது.
இது உலக அழிவிற்கு வழிவகுக்கும் அசுரர்கள் இவ்வாறே வாழ முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார்கள். அவர்கள் எல்லா பாவங்களையும் செய்வார்கள் அதேநேரம் சாகவரம் வேண்டும் என்று கேட்பார்கள்..அது நடக்காது...
..
முற்பிறவி அனுபவங்களை யாருமே மறைக்கவில்லை..
இறப்பதற்கு முன்பு ஒருவருக்கு என்ன நினைவு இருக்குமோ அதுதான் இறந்தபிறகும் இருக்கும்.
அதன்பிறகு அவர் புதிய உடலுக்குள் செல்லும்போது பழையவை அனைத்தும் மறந்துவிடுகிறது.
அதற்கு காரணம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றுவிடுகிறது.
அந்த உறக்கம் என்பது தினமும் உறங்கும் ஒரு இரவு உறக்கம் அல்ல. பல மாதங்கள் தொடந்து உறங்கும் ஆனந்தஉறக்கம்.
அது பழைய நினைவுகள் அத்தனையும் மறந்துவிடுகிறது.
ஆனந்தம்மேலிடும்போது ஒருவர் அனைத்தையும் மறந்துவிடுகிறார்.அதேபோன்ற நிலை.
..
பழைய நியாபங்களுடன் பிறந்தால் பிறக்கும்போதே அதன் துன்பங்களும் தொடங்கிவிடும்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. தாய்,தந்தை மற்றும் குருவின் வழிகாட்டுதலால் எப்படிப்பட்ட கெட்ட குழந்தையும் நல்லவனாக மாறமுடியும்.
குந்தையின் சிறுவயது வாழ்க்கை ஆனந்தமாக கழிகிறது.
பழைய நியாபகங்கம் எதுவும் இல்லாததால்தான் குழந்தையின் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கிறது.
ஞானியும் அனைத்தையும் மறக்கிறான்.அவனது வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கிறது.
..
இந்த பிறவியில் நான் தவறு செய்யவில்லை. ஆனாலும் முற்பிறவியின் பலனால்தான் துன்பப்படுகிறேன் என்பதை ஒருவன் நம்பினால் அவனுக்கு மனகுழப்பம் ஏற்படுவதில்லை. இந்த துன்பங்களை அனுபவித்து முடித்துவிட்டு மீண்டும் பிறப்பற்ற நிலையை அடைவோம் என்றுதான் அவன் யோசிப்பான்.
..
ஒரு கடவுள் எங்கேயோ அமர்ந்துகொண்டு நமது முந்தைய பிறவிகளின் அனுபவத்தை மறைத்துவைப்பதில்லை.
சில ஞானிகள் பிறக்கும்போதே முற்பிறவி ஞாபகத்துடன் பிறக்கிறார்கள். சிறு வயதிலேயே வீட்டைத்துவந்து தவம்இயற்ற சென்றுவிடுகிறார்கள்.
மிருகங்களுக்கு மனம் இல்லை. எனவே முற்பிறவிகள் எதுவும் அதற்கு தெரியாது.
மனிதமனம் பக்குவம் அடைய அடைய பல பிறவிகளை அறியும் சக்திபெறுகிறது.
...🕉️

No comments:

Post a Comment