"நீறில்லா நெற்றி பாழ்"எந்த
நாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் நெற்றியில் திருநீற்றுடன் பிரகாசிக்கும் பிரக்யானந்தா🔥
அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிபோட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்த்தி தகுதிபெற்றுள்ளார்
பிரக்யானந்தாவின் வயது 17, இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த அவர் உலக அரங்கில் புகழ்பெற்ற செஸ் ஆட்டக்காரராக சுயமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்..
இன்று இறுதிபோட்டியில் அவர் நார்வேவின் 32 வயதான அந்த மேக்னஸ் கார்லெஸை சந்திக்கின்றார், கார்லெஸ் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் பெற்ற்வவர்
ஆனால் அவர் இதர ஆட்டங்களில் இதே பிரக்ஞானந்தாவிடம் 3 முறை தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ...
மிக இளம் வயதிலே உலக சாம்பியனை மும்முறை வென்றவர் பிரக்யானந்தா என்பதால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு பிரகாசமான வாய்ப்பு அதிகம் உண்டு...
பிர்க்யானந்தா எப்போதும் திருநீறு அணிந்திருப்பார், எந்த நாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் அவர் நெற்றியில் திருநீறு பிரகாசிக்கும்...
இது உலக நாட்டின் மேடைகளில் புதிது
எங்கு சென்றாலும் எவ்வளவு பெரிய அரங்கம் ஆட்டம் என்றாலும் நெற்றியில் திருநீறோடு நிற்கும் அந்த இந்து திருமகனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்...
இந்தியாவின் இந்துக்கள் பெரும் அடையாளத்தில் இருந்தும் பெரும் இடங்களில் திருநீறு பூசுவதில்லை
இந்திய கிரிக்கெட் ஆட்டகாரர்கள் பிரசித்தியாக இருந்தாலும் களத்திலோ அரங்கிலோ திருநீறு பூசியாரும் கண்டதில்லை.
ஆனால் இந்த சிறுவன் அதை செய்கின்றான், சரியாக தான் ஒரு சிவமைந்தன் என்பதில் கவனமாக இருக்கின்றான், பெற்றோர் அப்படி வளர்த்திருக்கின்றார்கள்.
விவேகானந்தருக்கு பின் சர்வதேச அரங்கில் திருநீறு அந்த சிறுவன் நெற்றியில்தான் அரங்கேறியிருக்கின்றது, அதை காணும் உலகம் அவன் ஒரு இந்த, இது இந்துக்களின் அடையாளம் என உற்று பார்க்கின்றது.
இந்து பாரம்பரியம் அறியா பல உலகத்தார் அந்த திருநீற்றை உற்றுபார்த்து, இது என்ன? இந்துக்கள் ஏன் இப்படி பூசிகொள்கின்றார்கள் என கேட்கின்றார்கள்.
கடைசியில் சாம்பலே மிஞ்சும் வாழ்விது, இங்கு எதுவும் நிரந்தரமில்லை, எல்லோர் வாழ்வும் பிடி சாம்பலிலே முடிகின்றது அதனால் அகங்காரமும் ஆணவமும் கொண்டு ஆடகூடாது என்பதற்காக அனுதினமும் நெற்றியில் சாம்பலை வைத்து வாழ்வின் நிலையற்ற தன்மையினை நினைந்துகொண்டே இருப்பார்கள் அது அவர்கள் மத ஏற்பாடு என பதிலும் கிடைக்கின்றது.
எவ்வளவு அருமையான தத்துவம் கொண்ட மதம் இந்துமதம் என அதனை புதிய நோக்கில் ஏராளமானோர் உற்று பார்க்கின்றார்கள்.
இந்திய அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் விளையாட்டு வீரர்களும், சினிமாக்காரர்களும் நாகரீகம் என கருதி மறைத்த பெருமையினை கொஞ்சமும் தயங்காமல் ஒரு இந்துவுக்கு இதுதான் அடையாளம் என விவேகானந்தருக்கு அடுத்து கம்பீரமாக நிற்கின்றான் அந்த ஞானசிறுவன்.
அவன் சதுரங்கத்தில் மட்டும் தனிவழி காட்டவில்லை, உலக இந்துக்களுக்கெல்லாம் ஒரு உதாரணத்தை காட்டியிருக்கின்றான், அவனை அந்த பரமசிவனும் பார்வதியும் இன்னொரு நாயன்மாராக வழிநடத்தி வரட்டும்.
"அர்ஜூனா உயர்ந்த இடத்தில் இருப்போரை உலகத்தார் உற்றுபார்பார்கள், அதனால் நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் பல்லாயிரம் பேருக்கு வழிகாட்டலும் பாடமுமாக அமையும், கர்மத்தை சரியாக செய்" என கண்ணன் கீதையில் சொன்ன வரிக்கு சரியாக நிற்கின்றான் அந்த சதுரங்க அர்ஜூனன்.
இந்து அடையாளத்தை தாங்கி, தான் ஒரு இந்து என செல்லும் பக்திமிக்கவர் அவர், அப்படித்தான் எல்லா மேடைகளிலும் அமர்ந்திருப்பார்.
அசர்பைஜானிலும் அப்படித்தான் அமர்ந்திருக்கின்றார்.
இது உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது.
செஸ் எனப்து அறிவால் கணக்கிட்டு விளையாடும் கணித விளையாட்டு, அது விளையாட கணிப்பிடும் திறனும் கணக்கீடும் அவசியம், மூளை பலத்தால் விளையாடும் விளையாட்டு அது, மனோசக்தி அதிகம் வேண்டும்.
நாணயகணேசன்
அவருக்கு எல்லா பலத்தையும் அருளையும் வாய்ப்பையும் அந்த ஈசனின் திருநீறு கொடுக்கட்டும்..
"காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே"
என்பார் சம்பந்த பெருமான்.
உலகம் வாழ் இந்துக்களின் அடையாளமாக விளங்கும் அந்த விபூதி சம்பந்தர் வாக்குபடி அவருக்கு பெருமையும் அறிவும் ஞானமும் வெற்றியும் அருளட்டும்💐🔥
Ganesa Moopanar Public Welfare Trust
No comments:
Post a Comment