Wednesday, April 7, 2021

மனித வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம்.

*மனிதர்கள்*

1) உலகில் வெற்றி பெற்ற  மனிதர்களை உற்று நோக்கினால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. அவர்களும் தோல்விகளை  சந்தித்தவர்கள்  தான். 

2) எத்தனை தோல்விகள் வந்தாலும்,  கஷ்டங்கள் துன்பங்கள்  வந்தாலும்,  அவமானங்கள் வந்தாலும்,  அதை கண்டு  அவர்கள் துவண்டு விடவில்லை,   பயப்படவில்லை,  பின்  வாங்கவில்ல. அதை எதிர் கொண்டார்கள். சமாளித்தார்கள். முறியடித்தார்கள். முன்னேறினார்கள். அது தான் அவர்கள் உயர்வுக்கு காரணம்.

3) வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற  வைராக்கியம்,  அதற்கான  விடா  முயற்சி,  தொடர் உழைப்பு ஆகிய நற்பண்புகள்  தான் அவர்களை சிகரத்திற்கு கொண்டு சென்று விட்டது. அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால் நாம் கூட அந்த நிலையை அசாத்தியமாக  அடையலாம். 

4) சிதைக்க முயலும்  சோதனைகளுக்கு  இடையே நம்மை நாமே  செதுக்கி உயரும் சாதனை தான் வாழ்க்கை.

நல்லதே நடக்கும் 
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment