Tuesday, April 27, 2021

சந்தனம் குங்குமம் விபூதி இவைகளின் பயன் என்ன?

*சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்காக..? 

#இந்து மதம் அற்புதம்  !!!*

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

திருநீறு அணியும் காரணம்
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.
திருநீர்
---------
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும்தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

*குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் :*
-------------------------- -------------------------- ------------------------
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும் ,சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது அவசியம். 

நம் முன்னோர்கள் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் .மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு , ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் .இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும் ,மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது. அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .அதனால் காலையும் மாலையும் 
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது வழக்கமாக்க பட்டது .

அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். 

*அணியும் முறை*
-----------------------
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போதுதிருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

*திருநீறு அணியும் இடங்கள்*
-------------------------- ------------
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

*பலன்கள்*
-------------
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

*திருநீறு (விபூதி):-*

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.

*திருநீறு வகைகள்*

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்

1.கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4.அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம்

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். 

மும்மலங்களையும்சாம்பலாக்கி  அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

*இது தற்பொழுது உள்ள குறிப்பு.*

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

*நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.*

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம்

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் 
செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவஎன்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

*திருநீறு:-*

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்.

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

3. தீட்டுக் கழிக்கும்.

4. உடலைச் சுத்தம் செய்யும்.

5. வியாதிகளைப் போக்கும்.

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

7. முகத்திற்கு அழகைத் தரும்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

9. புத்திக் கூர்மையைத் தரும்.

10. ஞானத்தை உண்டாக்கும்.

11. பாவத்தைப் போக்கும்.

12. பரக்தியைத் தரும்.

*குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக.....*

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

*குங்குமம்..!*

மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும் சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள் கடுதாசி, மஞ்சள் பத்திரிக்கை முதலியவற்றைக் கூறினேன்.

மஞ்சள் பொடியில் அர்ச்சனை செய்வதும் உண்டு. ஹரித்ரா சூர்ணம் என்பதே மஞ்சள் பொடி. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதை ஹரித்ரா குங்குமம் என்று கூறுகின்றோம். உண்மையிலேயே குங்குமம் என்பது ஆரம்பகாலத்தில் குங்குமப்பூவைக் குறித்தது. குங்குமப்பூ என்பது ஒரு தனிப் பொருள். இதைக் கடைகளில் வாங்கலாம். மெல்லிய இழைகளாக - குங்கும வர்ணத்தில் கிடைக்கு. மெல்லிய-ஆனால் நீண்ட தூரம் பரவும் நறுமணம் உடையது. இது ஒருவகைச் செடியின் மலரின் காயவைக்கப்பட்ட மகரந்தக் காம்புகள். காஷ்மீர், துருக்கி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 

"குங்குமப்பூவே! கொஞ்சும் புறாவே!" என்று பாடல் சிறப்புப் பெற்ற குங்குமப்பூ இதுதான்.

மிகவும் கிராக்கியான பொருள். ஆகவே அதிகக் கலப்படத்துக்கு ஆளாகிறது. தேங்காய்ப்பூவில் கலரைச் சேர்த்து குங்கும எஸென்ஸைச் சேர்த்து அதைக் குங்குமப்பூ என்று விற்பார்கள். 'எடைக்கு எடைத் தங்கம்' என்பார்கள். அது குங்குமப்பூவுக்குப் பொருந்தும். 

குங்குமப்பூவைப் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பன்னீருடன் உரசுகல்லில் உரசி எடுப்பார்கள். இதுதான் குங்குமப்பூச்சு; அல்லது குங்குமக்குழம்பு. இதைத்தான் அம்பிகைக்குத் திலகமாக இட்டு, பூச்சாகவும் பூசுவது. பழங்காலத்தில் வசதி மிக்க அரச வர்க்கத்துப் பெண்கள், பணக்காரப் பெண்கள் முதலியோர் குங்குமப் பூச்சு, குழம்பு ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். 

குங்குமம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் 'ஹரித்ரா குங்குமம்' என்பது குண்டு மஞ்சள், எலுமிச்சைச் சாறு, சீனாக்காரம், படிக்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றிலிருந்து செய்யப்படும். வைணவர்கள் ஸ்ரீசூர்ணம் என்னும் பொடியை நாமமாக அணிந்து கொள்கிறார்கள்

*தருப்பைப்புல்*

 புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது 

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment