Showing posts with label வீடு அமைய தெய்வீக பரிகாரம். Show all posts
Showing posts with label வீடு அமைய தெய்வீக பரிகாரம். Show all posts

Tuesday, May 12, 2020

வீடு அமைய தெய்வீக பரிகாரம்

உண்ண  உணவு உடுக்க உடை இருக்க இடம் இதுதான் மனிதனின் அடிப்படை தேவைகள், அதிலே மனிதனுக்கு வசிப்பதற்கு ஒரு வீடு அமையாதா என்ற ஏக்கம் இந்த பூமியில் இருக்கும் வரை அவனுக்கு இருக்கும் அதை பூர்த்தி செய்ய ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கிறதா  என்று ஏங்காத உள்ளமே இல்லை எதைத் தின்னால் பித்தம் தீரும் என்ற நிலைக்கு மனிதன் சென்று இவ்வளவு பெரிய பூமியிலே தனக்கு என்று ஒரு சில சதுரங்கள் கூட மனை இல்லையே வீடு கட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் பாடாய்படுத்தி அவனை நடைப்பிணமாக ஆக்கிவிடும் அதனால் நம் முன்னோர்கள் நம் ஜாதகத்திலே செவ்வாய் பலமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பூமி யோகம்  நிலம் வாங்கும் யோகம் அமையும் சுக்கிரன் நல்லபடியாக இருந்தால் கட்டிடம் கட்டும் அமைப்பும் உண்டாகும், அப்படி இல்லை என்றால் என்ன செய்வது வாடகை வீட்டிலேயே இருந்து உயிரை விட்டுவிடுவதா  என்ற எண்ணம் அவனுடைய மனதை  வாட்டும், அப்பொழுது எந்த கடவுளை வணங்கினால் நமக்கு வீடு கிடைக்கும் அல்லது வீடு கட்டுவதற்கு நிலம் கிடைக்கும்,  கடவுளை தேடுவான் ஓடுவான் நாடுவான் அப்பொழுது நம் முன்னோர்கள் நமக்கு ஒரு அருமையான  தெய்வீக பரிகாரத்தை சொல்லிவிட்டு சென்றார்கள், அது வேறொன்றுமில்லை செங்குன்றம் அருகாமையில் இருக்கின்ற சென்னையிலிருந்து சுமார்  40 கிலோ மீட்டரில் உள்ள சிறுவாபுரி முருகனின் ஆலயத்திற்கு உரிச் செவ்வாயன்று சென்று  தொடர்ந்து 9 செவ்வாய் கள்  தேர்ந்தெடுத்து ஆலயத்திற்கு சென்றார் கைமேல் பலன் வீடு கட்டாதவர்கள் வீடு கட்டுவார்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்கள் அதிலே லாபம் பார்ப்பார்கள் நிலம் வாங்காதவர்கள் அதற்கு உரிய தகுதியைப் பெறுவார்கள் இது முருகனின் அற்புதம். நாம் ஏன் இந்த ஆலயத்திற்கு சென்று நமது பொருத்தமான ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடாது, முருகனை வணங்குவோம் வீடு கட்டுவோம் எல்லாம் வல்ல முருகப்பெருமானின் கருணையை நீங்கள் பெற வேண்டும் வாழ்க வளமுடன்.