Showing posts with label தீபாவளி லட்சுமி பூஜை. Show all posts
Showing posts with label தீபாவளி லட்சுமி பூஜை. Show all posts

Thursday, November 12, 2020

தீபாவளி லட்சுமி பூஜை

தீபாவளியன்று “லட்சுமி பூஜை 
செய்வதற்கான நேரம் மற்றும் முறைகள்”

*******************

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. தீபாவளி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு, நல்ல விருந்து தான். ஆனால், எதற்காக நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோம். அந்த நாள் எப்படி அனுசரிக்கப்படுகிறது என்று தெரியுமா? தீபாவளி பண்டிகையன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பு. தீபாவளி பண்டிகையின் வரலாறு மற்றும் பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகையின் வரலாறு :
-----------------

ராமர், பதினான்கு வருடம் வனவாசம் சென்றுவிட்டு அயோத்திக்கு திரும்பியதே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சில பகுதிகளில் விஷ்ணு, தேவியின் திருமண நாளாக தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம் . 

தீபாவளிக்கு “தீபஒளி திருநாள்” என்றும் பெயர் உண்டு. இருளின் மீது ஒளியின் வெற்றியை குறிக்கும் நாள் மற்றும் தீமையை விலக்கும் நாள் என்று தீபாவளிக்கு ஒரு பெரிய மகத்துவம் உண்டு. தீபாவளிக்கென, வீடுகளை சுத்தம் செய்து கவலைகளையெல்லாம் மறந்து தீப ஒளியோடு புது வாழ்க்கையை தொடங்க வேண்டும்.

தீபாவளி திருநாள் லட்சுமி பூஜை முறை :
_________________

தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, செல்வங்களின் தெய்வமாக கருதப்படும் லட்சுமிதேவிக்கு பூஜை செய்ய வேண்டும். பூஜைநேரம் அதிகாலை 5.1 முதல் 7.43 வரை . 

வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட எதாவது ஒரு இனிப்பை லக்ஷ்மிதேவிக்கு படைக்க வேண்டும். (கடவுளுக்கு படைக்கப்படும் மலர்கள் வாசனை உள்ளவையாக இருக்க வேண்டும். வாசனையுள்ள மலர்களை மட்டும் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்)

லட்சுமிதேவி படத்திற்கு மாலை அணுவித்து, இரண்டு அல்லது ஐந்து நெய் தீபம் ஏற்றி ஒரு வெண்கல அல்லது பூஜை செய்வதற்கு ஏற்ற பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். ஐந்து வகையான பழங்கள், இனிப்புகள், மலர்களை வைத்து லஷ்மிதேவிக்கு உண்டான மந்திரத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு, தீபாவளியன்று பூஜை , செய்தால் கஷ்டங்கள் விலகி தீபஒளியை போல் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

தீபாவளியன்று ஸ்ரீ லட்சுமி பூஜை
செய்வதற்கான நேரம் மற்றும் காலம் :
_________________

லட்சுமி பூஜைக்கான நேரம் : 
அதிகாலை 5.1 முதல் 7.43 வரை 
காலம்: 1 மணி 56 நிமிடங்கள்

பிரதோஷ காலம் : 
மாலை 5.28 முதல்  8.7 வரை
விருஷப காலம்: 5.28 முதல்  7.24 வரை

அம்மாவாசை திதி தொடங்குகிறது 
நவம்பர் 14, 2020 பிற்பகல் 02.17 மணி

அம்மாவாசை திதி முடிவடைகிறது – 
நவம்பர் 15, 2020 அன்று காலை 10.36 மணி

#ஸர்வம்_கிருஷ்ணார்ப்பணம்.