Showing posts with label சிவலிங்க பூஜையின் நன்மைகள். Show all posts
Showing posts with label சிவலிங்க பூஜையின் நன்மைகள். Show all posts

Thursday, October 8, 2020

சிவலிங்க பூஜையின் நன்மைகள்

சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை  பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் !

1. சிவலிங்கத்தை பூஜை செய்பவன்  சித்தம்
சுத்தமாகும் . சித்த ரிஷிகளாகவே மாறுகிறான்

2. சிவலிங்க  பூஜை செய்பவன் முடிவில் 
சிவமாகவே ஆகிவிடுகிறான்.

3. சிவலிங்கத்தின்  பிம்ப தரிசனம்
 கொலை செய்தவனின்  பாபத்தையும் கூட  போக்கும்.

4. சிவலிங்கத்தை  நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல
பாபங்கள் கழன்று ஓடும் .

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல்  திடீரென பூஜை செய்ய  நேர்ந்தாலும் முக்தி உண்டு .

6.சிவபூஜை  பூஜை செய்பவனுக்கு
 எமபயமில்லை .

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் , வேள்விகள் செய்து  இப்பூஜையினை செய்பவர்கள்
 சிவலோகத்தில்  அனந்தகாலம்  வாழ்வார்கள் .

8. சிவலிங்கத்தை  பக்தியுடன் நமஸ்கரித்தவன்  தேவனாகிறான் ...!
அதன் பின்  அவன் சாதாரண  மனிதன்  அல்லன் ...!

9. சிவலிங்கம்  - சிவன்  இருக்குமிடம் .
சர்வ பாபங்களையும் நாசம் செய்யவல்லது .

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சிவலிங்க  பூஜையினால் பரகதி அடைகிறார்கள்.
பக்தியோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள் .

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல,  சிவலிங்கத்தின்  சிவன் இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட சிவன்  சிவலிங்கத்தின்  மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

12. சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் கோதானமும் செய்த பலன்.

13. அஸ்வமேத  யாகம் ஆயரம் செய்தாலும்,
ஒரு நாள் சிவலிங்கத்தை  பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

14. சிவராத்திரி வேளையில் லிங்கோற்பவ காலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன்
ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சிவலிங்க  பூஜையினால் முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சிவலிங்க  பூஜயினால் முக்தியடைவான்.

17. சிவலிங்கத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சிவலிங்கத்தின் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர்.

19. ருத்ர  பாராயணம் செய்துகொண்டே சிவலிங்க பூஜை செய்பவன் சிவகதி  அடைகிறான்.

20.சிவலங்கம்  இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சிவலிங்க  தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சிவலிங்க அபிஷேக  தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.
அனைத்துஅன்புள்ளங்களும்வாழ்க வளமுடன்சிவகாலையாவருக்கும் சுபம்நல்கட்டும்
           சிவாயநம சிவாயநம
யாவும் அவனருளாலேசிவாயநம
தென்கயிலையான் சிவ கல்யாணகுமாா்
         திருச்சிற்றம்பலம்