Showing posts with label குரு தோஷம் நீங்க பயன்படுத்துகின்ற தாந்த்ரீக பரிகாரம். Show all posts
Showing posts with label குரு தோஷம் நீங்க பயன்படுத்துகின்ற தாந்த்ரீக பரிகாரம். Show all posts

Sunday, May 17, 2020

குரு தோஷம் நீங்க பயன்படுத்துகின்ற தாந்த்ரீக பரிகாரம்

இன்று நாம் காணவிருப்பது வியாழனுக்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்களாகும்.

குருவின் சமித்தான அரசமர புல்லுருவி பூஜை செய்து தாயத்தாக அணியவும்.

குருதசையிலே தனதான்ய விருத்தி புத்திர சுகம், இறையருள், குரு அருள் கிடைக்கும். குருவின் மூலிகையான செங்கழுநீர்செடி வேரை பூஜை செய்து தாயத்தில் அடைத்து அணிய தொட்டதெல்லாம் பொன்னாகும்.

வண்டி, வீடு, நல்ல ஆசான் அமைவர். சித்ரா பௌர்ணமியன்று முல்லைச்செடியின் வேரை காப்பு கட்டி பூஜை செய்து தாயத்தாக அணிய குருவின் தசை முழுவதும் வெற்றி கிட்டும்.

குருவின் புத்தியும், அந்தரமும் நல்ல பலன் தரும். சகல சாஸ்திரங்கள் தெரிந்த நல்ல குருவை வியாழக்கிழமை வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு உணவு, வஸ்திரம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கவும். குரு தசை முழுவது, நல்ல பலன இந்த அற்புதமான தாந்த்ரீக பரிகாரம் உங்களுக்கு பூர்த்தி செய்யும்.

குழந்தைகளின் நிலை உயரும். வளம் சேரும், நல்ல அறிவாளிகளின் நட்பு கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும்.

வியாழன் காலை 6 மணி முதல் 7 மணி வரை தலை வாழை இலையில் கொண்டைக் கடலை பரப்பி, கலசம் அமைத்து முல்லைப் பூமாலை அணிவித்து, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, வியாழனன்று வியாழன் காயத்ரி மந்திரத்தை 108 நாமாவளியின் மூலம் முல்லைப் பூவால் ஜெபிக்கவும். பின்னர் தீபதூபம் காண்பித்து பூஜையை முடிக்கும்

இறுதியாக கலசத்தினை 16 முறை வலம் வந்து, கலச நீரை வீட்டில் தெளித்துக் கொள்வதோடு மற்ற அத்தனை பேரின் மீதும் தெளித்துக் கொள்வது, குரு தசை பலனை அளிக்கும்.

வியாழன் காலையில் பூரண கலசம் வைத்து ஹோம குண்டம் வளர்த்து அரசகுச்சியால் நெய்யை தொட்டு 1008 நாமாவளியை ஜெபிக்க உயர்பதவி கிட்டும், வராத கடன்கள் வரும், கொடுக்கல், வாங்கல் சீரடையும், குழந்தைகள் தங்களின் நலனில் அக்கறை கொள்வார்கள், புத்திர பாக்யம் உண்டாகும்.

நவ கோள்களில் வியாழன் அமைந்துள்ள பகுதி வடக்கு பகுதியாகும். அப்பகுதியில் பெரிய தலைவாழை இலையை போட்டு கொண்டைக் கடலையைப் பரப்பி, தீபம் ஏற்றி, தீபதூபம் காட்டி கற்பூரம் ஏற்றி, 16 விளக்குகள் ஏற்றி 16 முறை வலம் வந்து வேண்டவும்.இது போன்று 16 வியாழக்கிழமைகள் செய்ய முழு வெற்றி கிடைக்கும்.

சிறிது கொண்டைக் கடலையுடன் 9 வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை ஒரு தாளில் மடித்து வியாழக்கிழமை இரவு தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.

மறுநாள் ஓர் பெட்டியில் சேர்க்கவும்.

இவ்வாறு 16 வாரம் தொடர்ந்து செய்து 17

வது வாரம் அவற்றைச் சேர்த்து காலை 6-7 மணி குரு ஹோரையில் ஓடும் நீரில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதால் எண்ணற்ற பலன்கள் உங்களை வந்து சேரும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்