Showing posts with label காயத்ரி மந்திரத்தின் அற்புதப் பலன்கள்.. Show all posts
Showing posts with label காயத்ரி மந்திரத்தின் அற்புதப் பலன்கள்.. Show all posts

Thursday, August 6, 2020

காயத்ரி மந்திரத்தின் அற்புதப் பலன்கள்.

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்ப வனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். பிரம்மதேவன் புஷ்கரம்என்ற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போதுதன்னுடையசக்தியினால்ஸ்ரீகாயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்ரிசிகப்புநிறமாகத்தோற்றம் கொண்டவள், 5 திருமுகங்களையும், 10 திருக்கை களையும் கொண்டவள்.
மந்திரம்: ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்!
இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள்அகலும். சக்திகள் பெருகும்.வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.காயத்ரிஎன்றமந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள்உண்டு.இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும்ஜபிக்கப்படுகிறது.காயத்ரி மந்திரம்  ஜபிக்கப்பட்டபின்னரே மற்றமந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றனமந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். காலையில்கிழக்கு முகமாகசூரியனைப்பார்த்துநின்றுகொண்டுஇருகைகளையும் முகத்திற்குஎதிராகக்கூப்பிக்கொண்டும்,  மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக்கொண்டும்ஜபம்செய்ய வேண்டும். தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும்.