Showing posts with label கடன் அடைக்கும் நரசிம்ம வழிபாடு. Show all posts
Showing posts with label கடன் அடைக்கும் நரசிம்ம வழிபாடு. Show all posts
Tuesday, May 5, 2020
கடன் அடைக்கும் நரசிம்ம வழிபாடு
கடன் தொல்லையை படிப்படியாக அழிக்க ஒரு அற்புதமான பரிகாரம் என்னவென்றால் ஒரு செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுத்து நேர்கோட்டில் இருக்கின்ற நரசிம்மரை முறைபடி வழிபாடு செய்ய உங்களுடைய கடன் தொல்லை மாயமாக மறையும் அது என்னவென்றால் கடலூர் மாவட்டத்தில் மஞ்சகுப்பம் அருகாமையிலேயே அபிஷேகபக்கம் என்ற உக்கிர நரசிம்மரை முதலில் வழிபாடு செய்யவும் அதற்குப் பிறகு பூவரசன்குப்பம் உள்ள நரசிம்மரை இரண்டாவது தரிசனம் செய்யவும் மீண்டும் பரிக்கல் நரசிம்மரை வழிபாடு செய்யவும் இறுதியாக அந்திலி என்று சொல்லப்பட்ட திருக்கோயிலை ஒட்டிய பகுதியிலே இருக்கின்ற நரசிம்மர் வழிபாடு செவ்வாயன்று செய்து முடித்தால், உங்களுடைய கடன் தொல்லை நீரில் இட்ட உப்பு போல கரைந்து கொண்டே போகும். நாளை என்ற வார்த்தை நரசிம்மர் இடம் இல்லை ஆகையால் நம்பிக்கை வைத்து இந்தப் பரிகாரத்தை செய்தால் தொல்லை மாயமாகும், இடைக்காட்டு சித்தர் கலியுகத்திலே அற்புதமான கடவுள் இந்த இளிச்சவாயன் கடவுள்தான் அது வேறொன்றுமில்லை சிரித்த முகமாகக் காட்சி கொடுக்கும் நரசிம்மரை குறிக்கும். நேரம் கிடைக்கும் பொழுது இந்த அற்புதமான பரிகாரத்தை செய்து பலனடையுவும்.
Subscribe to:
Posts (Atom)