Sunday, November 28, 2021

கார்த்திகை மாத சோம விரதம் ரகசியம்

🔥கார்த்திகைசோமவாரச்சிறப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.

 
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.
 
கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.

 
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 
சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.
 
சோம வார விரத மகிமைகள்:
 
தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். 

 
தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.
 
‘இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.

 
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும். 
 
இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதுமாகவே அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடித்து நலம் பெறலாம்.

Monday, November 8, 2021

கந்த சஷ்டி ஸ்பெஷல் பதிவு

*கந்த சஷ்டி ஸ்பெஷல்*
🕉️🌷🕉️🌷🕉️🌷🕉️🌷🕉️

*சந்தான பாக்கியம் தரும் சஷ்டி விரதம்!*

சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் ‘சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

சஷ்டி விரதம் என்றால் மாதாமாதம் வரக்கூடிய திதி நாளா அல்லது ஐப்பசி மாதம் தீபாவளியன்று வரும் கந்த சஷ்டியா?

ஐப்பசி மாத கந்த சஷ்டியின்போது விரதம் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஐப்பசி வரை காத்திருக்காமல் ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதத்தைக் கடைபிடிக்கலாம். 

முருகன் அருளால் கர்ப்பப்பையில் கரு வளர, உடனே அந்த விரதத்தை மேற்கொள்வதும் சரிதானே?

சூரபத்மன் மிகக் கொடுமையான ஓர் அரக்கன். மூவுலகத்தோரையும் மிரட்டி, உருட்டி, அதட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கு பயந்து ஒதுங்கிப் பணிந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து அப்படி பணிந்துகொண்டேயிருக்க, அவர்களுடைய பலவீனத்தைத் தன்னோட வெற்றியாக நினைத்து குரூரமாக சந்தோஷப்பட்டான் சூரபத்மன். மேலும் மேலும் அவர்களைத் துன்புறுத்தி மகிழ்ந்தான். 

அவனுடைய அக்கிரமத்தையும், அதனால் அவன் அடையும் அல்ப சந்தோஷத்தையும் பார்த்த பிற அரக்கர்கள், தாமும் ஏன் அவனைப்போலவே நடந்துகொள்ளக்கூடாது என்று யோசித்து அவர்களும் எதிர்ப்பட்ட முனிவர்களையும், பொது மக்களையும் கொடுமைப்படுத்தினர். 

அப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் ஜயந்தன். இவன் இந்திரனுடைய மகன். தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் மகனையே அரக்கர்கள் சிறைப்பிடித்துப் போனது கொடுமையின் உச்சம். 

அதோடு இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரட்ட, அவள், சூரபத்மனுக்கு பயந்து எங்கேயோ போய் ஒளிந்துகொண்டாள். தேவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தித் தன் சர்வாதிகார சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான் சூரபத்மன். 

அவன் செய்வதை தப்புன்னு சொல்றதுக்கோ, அவனை எதிர்ப்பதற்கோ யாருக்கும் தைரியமில்லை. 

அப்பாவிகளின் துயரத்தைப் போக்க வேல் முருகன் முன்வந்தார். அவன் தன் தவறுக்கு வருந்துகிறானா என்பதை அறிய, தன்னுடைய தளபதி வீரபாகுவை அவனிடம் தூது அனுப்பினார். 

சூரபத்மன் பிடித்துவைத்திருப்பவர்களையெல்லாம் அவன் விடுதலை செய்தானானால் சமாதானமாகப் போய்விடலாம் என்று சொல்லி அனுப்பினார். 

ஆனால், சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தப்போன வீரபாகுவை சூரபத்மனுடைய ஆட்கள் தடுத்தார்கள். அவன் சொல்ல வந்தது எதையும் கேட்காமல், அவனைத் தாக்க ஆரம்பித்தார்கள். 

ஆகவே தன்னைக் காத்துக்கொள்வதற்கும், சூரபத்மனிடம் நேரடியாக முருகன் சொல்லியனுப்பிய தகவலைச் சொல்வதற்கும் இடையூறாக இருந்த அரக்கர்கள் சிலரை அவன் திருப்பித்தாக்க வேண்டியதாயிற்று. 

அதனால், பல அரக்கர்கள் மடிந்தனர். ஆனால், சூரபத்மன் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. யாரையும் விடுவிக்க முடியாது, மன்னிப்பும் கேட்கமுடியாது என்று இறுமாப்பாகச் சொல்லிவிட்டான். ஜயந்தன் மட்டுமல்ல, இந்திரன், இந்திராணி இருவரையும் விரைவில் சிறைபிடிப்பேன் என்றும் கொக்கரித்தான். 

சாத்வீகமாகப் போனால் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று தெரிந்துகொண்ட வீரபாகு, முருகனிடம் வந்து விவரம் சொன்னான். 

இனிமேலும் பொறுப்பதில்லை என்று முருகன் தீர்மானித்தார். தன் வீரர்களை அழைத்துக்கொண்டு சூரபத்மனை பந்தாடப் போனார். 

ஆனால், முருகனைப் பார்த்தால் சண்டை போடும் குணமுடையவனாகவே தெரியமாட்டார். அழகான குழந்தை முகம், சாந்தமான அழகான புன்னகை. இந்த மலருக்கும் கோபம் வருமா என்றுதான் பார்ப்போருக்குத் தோன்றும். 

அக்கிரமங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக்கொண்டே போகும்போது பூக்களும் புயலாவதுதானே வழக்கம்? ஆனால், சூரபத்மனும், அவனைச் சேர்ந்தவர்களும் முருகனை ஒன்றும் தெரியாத பாலகன் என்றுதான் தவறாக மதிப்பிட்டார்கள். 

ஆனால், அவர்களுடைய நினைப்பெல்லாம் தவிடுபொடியாவதுபோல துர்க்குணன், தருமகோபன், சண்டன் ஆகிய அரக்கர்களையும், சூரபத்மனுடைய பிள்ளைகளான பானுகோபன், இரணியன் ஆகியோரையும், அவனுடைய தம்பிகளான அக்கினி முகன், சிங்கமுகாசுரன்னு என்று எல்லோரையும் முருகன் பந்தாடிக் கொன்றான்.

தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்தும் சூரபத்மனுக்கு முருகனின் பராக்கிரமம் புரியவில்லை. 

இன்னும் கோபம் அதிகமாயிற்று. முருகனைப் பார்த்து அலட்சியமாக சிரித்தான். இந்தப் பொடியனோடு சண்டை போடுவது தன்னுடைய பராக்கிரமத்துக்கே இழுக்கு என்று கர்வப்பட்டான். 

ஆனால், போகப்போக குமரனுடைய ஆற்றலைப் பார்த்த சூரபத்மன் திகைத்தான். அவரை எதிர்ப்பது தனக்குப் பேராபத்தாகத்தான் முடியும் என்பதை உணர்ந்த அவன் உடனே மாயமாக மறைந்துவிட்டான். 

தனக்குக் கிடைத்திருந்த அபூர்வ சக்தியால் யார் கண்ணிற்கும் தெரியாதபடி மறைந்தபடி போரிட்டான் அவன். ஆனால், எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி மாயப்போர் புரிய முடியும்? 

சக்கரவாகப்பட்சியாக, பெரிய பூமி உருண்டையாக, மும்மூர்த்திகளாக, தேவர்களாக, அசுரர்களாக, கூற்றுவனாக, இறந்த தன் பிள்ளைகள், தம்பிகள் என்று பலவாறாக மாய உருவம் கொண்டு முருகனை எதிர்த்தான். ஆனாலும் புன்னகை மாறாமல் அப்படி புதிதுபுதிதாகத் தோன்றிய சூரபத்மனுடைய எல்லா உருவங்களையும் அழித்து ஒழித்தான். 

இறுதியாக சூரபத்மன் மாமரமாக மாறி கடலிலிருந்து பிரமாண்டமாக எழுந்து, முருகவேளை எதிர்த்தான். அவனை தன் முயற்சிகளால் மட்டும் வெல்ல முடியாது என்று தோன்றியது முருகனுக்கு. உடனே, (இப்போதைய நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள) சிக்கல் என்ற தலத்துக்குப் போய் அங்கே கோயில் கொண்டிருந்த தன் தாயான அம்பிகையிடமிருந்து ஒரு வேலை வாங்கி வந்தார். 

இன்றைக்கும் சிக்கல் தலத்தில் உற்சவத்தின்போது, தாயிடமிருந்து வேல்வாங்கும் முருகன் விக்கிரகத்தின் முகத்தில் வியர்வை அரும்புவதைப் பரவசத்துடன் காணலாம்! அந்த சூரசம்ஹார உற்சவத்தின்போது அப்படி முருகன் விக்கிரகத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வையைத் துடைத்துவிடுவதற்கென்றே ஒரு அர்ச்சகர் துணியோட காத்திருப்பார்!

தாயாரிடமிருந்து வாங்கி வந்த சக்தி வேலை எடுத்து சூரபத்மனை நோக்கி எறிந்தார் முருகன். அது அசுரனை நேரடியாகத் தாக்கி அவனை இருகூறுகளாகப் பிளந்தது. மாய்ந்து வீழ்ந்தான் அரக்கன். ஆனால், அந்தக் கொடிய அரக்கனுக்கும் நற்கதி தந்தார், முருகன். 

மாமரமாகத் தோன்றிய அவனை இருகூறுகளாகப் பிளந்து, அவற்றில் ஒன்றைத் தன் சேவற்கொடியாகவும், இன்னொன்றை மயில் வாகனமாகவும் மாற்றித் தன்னுடனேயே இருத்திக் கொண்டார். 

இந்த சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூரில். இப்போதும் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இந்த சூரசம்ஹார சம்பவத்தை நடத்திக் காட்டுகிறார்கள். 

பொதுவாகவே இந்த சூரசம்ஹார வைபவம் உலகத்திலுள்ள எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப் படுகிறது.

*சரி, கந்த சஷ்டி விரதத்தை எப்படி மேற்கொள்வது?*

ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்தே விரதத்தை ஆரம்பிக்கலாம். கந்த சஷ்டி முடிவில், சூரசம்ஹார தினத்தன்று விரதத்தை முடித்துவிடலாம். மொத்தம் ஆறு நாட்கள். 

ஆறுமுகன் விரதத்துக்கு ஆறு நாட்கள்! அந்த ஆறு நாட்களும் ஆறுமுகனைத் துதித்து உபவாசம் மேற்கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பால், பழம் என்று மட்டும் உட்கொண்டு, ஆறாம் நாள் முழு உபவாசம் இருக்கலாம். 

இந்த காலத்தில் பொதுவாக இப்படி உபவாசம் இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆகவே ஆறாம் நாள், சூரசம்ஹாரம் அன்றாவது முழு உபவாசம் இருப்பது நல்லது. 

ஆனால், கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்து அதாவது, வளர்பிறை பிரதமை திதியிலிருந்து தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு மூச்சிழையாக முருகன் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருப்பது நல்லது. 

இந்த ஆறு நாட்களும் தினமும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்குப் போய்வரலாம். தினமும் வீட்டு பூஜையறையில் முடிந்த உணவுப் பொருட்களை முருகனுக்கு நைவேத்யமாகப் படைக்கலாம். 

அதேபோல் பக்கத்து முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகன் அருளைப் பெறலாம்...’’ சிலர் இந்த கந்த சஷ்டி நாட்களில் சில பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதும் உண்டு. 

குறிப்பிட்ட ஒரு முருகன் கோயிலுக்கு போவதற்கும், அங்கே காவடி எடுக்கவும், மொட்டை போட்டுக்கொள்வதாகவும் வேண்டிக்கொண்டு அப்படியே செய்வார்கள். இன்னொன்றையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். 

அதாவது, இந்த ஆறு நாட்களும் தினமும் அதிகாலையில் குளித்து முடித்தபிறகு, பூஜையறையில் அறுகோண கோலம் வரைந்து, ஒவ்வொரு முனையிலேயும் ‘ச-ர-வ-ண-ப-வ’என்ற சடாட்சர மந்திர எழுத்துகளை எழுதி பிரார்த்தனை செய்யலாம்.

அறுகோண கோலம் என்பது ஆறு முனை கொண்ட நட்சத்திரக் கோலம். நடுவில் ஒரு வட்டம் போட்டு, அதிலிருந்து ஆறு கூம்புகள் வெளியே நீட்டியிருப்பதுபோல வரைந்துகொள்ளலாம். 

பொதுவாக இதை அவரவர் குடும்ப வழக்கப்படி வரைந்துகொள்வது நல்லது அல்லது ஆன்மிகப் புத்தகக் கடைகளில் பூஜையறைக் கோலங்கள் என்றே புத்தகம் கிடைக்கும். அதைப் பார்த்தும் வரையலாம்.

முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இந்த விரதம் சிறப்பானது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அதாவது மழையும், குளிருமாக இருக்கக்கூடிய காலத்தில் இப்படி உபவாசம் இருந்து முருகன் நாமத்தையே உள்ளார்ந்த பக்தியோடு ஜபித்துக்கொண்டிருந்தால் அந்த ஒலியலைகளும் சேர்ந்து ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்யும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. 

தம்பதி சமேதராக இந்த விரதத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது, ஏக்கம் தீர்ந்து குழந்தை பாக்கியமும் கிடைத்ததென்றால் அடுத்த கந்த சஷ்டியின்போது மறுபடி உபவாசம் இருந்து முருகனுக்கு நன்றி தெரிவிக்க மறக்கக்கூடாது! கந்த சஷ்டி மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு மாத சஷ்டி திதியன்றும் இவ்வாறு உபவாசமும் விரதமும் மேற்கொள்ளலாம், பயன் பெறலாம்.

கீழ்க்காணும் துதியை கந்தசஷ்டி ஆறுநாட்களிலும், ஒவ்வொரு மாத சஷ்டி நாளன்றும் பாராயணம் செய்தால் முருகப்பெருமானின் திருவருள் முழுமையாகக் கிட்டும். 

*மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்*
*மனோஹாரி தேஹம் மஹத்சித்தகேஹம்*
*மஹீதேவதேவம் மஹாவேதபாவம்*
*மஹாதேவபாலம் பஜே லோகபாலம்*

*பொதுப்பொருள்*: 

மயில் வாகனத்தில் ஆரோகணித்திருப்பவரே, ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளானவரே, மனதைக் கவரும் வண்ணம் ஒளிபொருந்திய தேகம் கொண்டவரே, சுப்ரமண்யா, நமஸ்காரம். மகான்களின் இதயத்தை வீடாகக் கொண்டவரே, பூதேவர்களான வேதவித்துக்களால் உபாசிக்கப்படுபவரே, உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும் ஆனவரே, உலகங்களைக் காப்பவரே, சுப்ரமண்யா, நமஸ்காரம். முடிந்தால் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். இயலாதவர்கள் பக்கத்துக் கோயிலில் முருகனை வழிபடலாம்.

Friday, November 5, 2021

நீங்க சுமந்து வந்த கர்மாக்களை கழிக்க இந்த தானங்கள் செய்யுங்கள்.

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்..... 

 உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 
(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்தர்வர்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புன்னிய காரியங்களுக்கு உதவுதல். 

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு 
(2)கோயில் காகத்திற்கு 
(3)கோயில் சேவல்களுக்கு 
(4)கோயில் யானைகளுக்கு 
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 
(6)கோயில் பூசாரி 
(7)பிராமனர்களுக்கு உணவு 
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 
(10)அன்னதானத்திற்கு உதவுதல் 
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 
(12)கோயில் விளக்கிற்கு எண்ணை கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை 
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க 
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து  செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

      - அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து......

Wednesday, November 3, 2021

இந்த இடம் போனால் நம் தலையெழுத்து மாறும்.

திருப்பட்டூர்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே ‘விதி இருப்பின்’ மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மையாகும்.
திருப்பட்டூர் வரலாறு:
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.
படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன் ”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.
படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.
மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
”என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
திருவிழா: இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.
சிறப்பு :
பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.
சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம்.
இந்த அமைப்பு மிக விசேஷமானது.
திறக்கும் நேரம் : காலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை 6- மதியம் 12.30 மணி.
பொது தகவல் : இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது. பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.
சங்க காலப் பாடல்களில் இத்திருக்கோயில் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நக்கீரனார் தம்முடைய 395வது புறநானூறு பாடலில் இக்கோயிலில் உறையும் சாஸ்தாவைப் புகழ்கிறார். சேக்கிழார் பெருமான் பெரிய புராண பாடலை தில்லையம்பலத்தில் தொடங்கி திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூரில் முடித்ததாக வரலாறு.
அமைப்பு:
இக்கோயிலின் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள மற்ற அய்யனார் கோயில்களிலிருந்து மாறுபட்டு உள்ளது. ராஜகோபுர வாசலிலிருந்து கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் தென்படுவது பலி பீடமும், கல் யானையும்.
கல் யானைக்கு இடது புறமும், வலது புறமும் அதாவது தெற்கிலும் வடக்கிலும் கோயிலின் உள்ளே செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்க்கில் வடக்கு பார்த்து காளியம்மன் என்கிற நருவிழியம்பாள் எனும் வன மாதா மகா மண்டபத்தில் விதானம் யந்த்ர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு உடலில் புதிய ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் வழியில் பிரதட்சிண மண்டபம் அமைந்துள்ளது.
பூர்ண புஷ்கலா தேவியரோடு அய்யனார் இடது கையில் ஓலை சுவடியும். வலது கையை முழங்கால் மீது வைத்தும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அய்யனார் சிரசிலும் மார்பிலும் மணிக்கட்டிலும் ருத்ராட்சம் அணிந்து சிவ ஸ்வரூபமாக உள்ளார்.
புராண வரலாறு: திருக்கயிலாயத்தில் சேரமான் பெருமாள் நாயனாரால் சிவபெருமானைப் போற்றி ”ஞான உலா எனும் பாடல் பாடப்பட்டது. அதை பூவுலகிற்கு தந்தருள்வதற்காக அய்யனார் திருவுளங்கொண்டு எழுந்தருளிய திருத்தலம் இது. எனவே அரங்கேற்ற அய்யனார் என்ற பெயர் பெற்றார். ”ஞான உலா பாடல் அரங்கேறிய 18 கால் கல் மண்டபம் இன்றும் உள்ளது.
ஏழாம் தேதி பிறந்தவரா?
ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.
சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன் ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.
ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
பிரார்த்தனை:
குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம், மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குரு பெயர்ச்சி அன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
நேர்த்திக்கடன்
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு :
வித்தியாசமான அமைப்பு:
”குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு;
குருர் தேவோ மகேச்வர;
குரு சாக்ஷ?த் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ’
என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
முருகன் வணங்கிய சிவன்:
முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் ‘திருப்படையூர்’ எனப்பட்ட தலம் ‘திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.
எல்லாமே மஞ்சள் நிறம்
பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால் பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.
பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர் கந்தபுரீஸ்வரர் பாதாள ஈஸ்வரர் தாயுமானவர் மண்டூகநாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாசலேஸ்வரர் கைலாசநாதர் ஜம்புகேஸ்வரர் காளத்தீஸ்வரர் சப்தரிஷீஸ்வரர் தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.
பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா.
எனவே வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள். என்பது ஐதீகம்.அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.
உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும்.
பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.
முகவரி: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்-
பின்...621 105. திருச்சி மாவட்டம்.