Saturday, July 31, 2021

மதுரை மீனாட்சி அம்மனின் தரிசனம் பின்னனால் இவ்வ்ளவு விஷயமா?

மதுரை மீனாட்சி அன்னையை தரிசநம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். 

அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.

சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். 

ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.

பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது. 

மதுரையில் மீனாட்சி தினமும் 
8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். 

இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. 

அவை ..

திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் – 

புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி

மத்யானத்தில் – சியாமளா

சாயரக்ஷையில் – மாதங்கி

அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். 

இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். 

அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.

*ஒரேநாளில் புவனேஷ்வரி,
கௌரி,சியாமளா,
மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்*

*வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை*!

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. 

இரவு அர்த்த ஜாமத்தில் 
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.

பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.

உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.

அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர்.

அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். 

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.

அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது.

(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த  பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும் 

பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். 

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

*மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்*

குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் கட்டாயம் காண வேண்டிய அன்னை மீனாட்சியின் தரிசனம்!

குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி  அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .

வியாபாரத்தில் நஷ்டம் தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் காண வேண்டிய தரிசனம்.

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம் 

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…

இவையெல்லாவற்றையும்  
விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை *புவனேஷ்வரி*,*கௌரி*,
*சியாமளா*,*மாதங்கி*,
*பஞ்சதசி*என எல்லா அலங்காரத்திலும்  தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!!

ஸ்ரீமீனாட்சி தாயே போற்றி!

Friday, July 30, 2021

ஆடி மாதத்தில் அம்மனுக்கும் கூழுக்கும் என்ன தொடர்பு

#ஆடியில்_கூழ்_வார்த்தலுக்கும் #அம்மனுக்கும் என்ன தொடர்பு?

ஆடி மாதம் வந்து விட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில் கூட கூழ் வார்த்தல் என்பது விமரிசையாக நடக்கும். 
கூழ் வார்த்தலுக்கும், அம்மனுக்கும் என்ன தொடர்பு? 

ஜமதக்னி முனிவரும் அவர் மனைவியான ரேணுகா தேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன் என நால்வர் பிறந்தார்கள். அதன்பின்...ஒருசமயம், கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகா தேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது, இந்திரன் வருணனை அழைத்து மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து போய், உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாதநிலையில் காட்டில் இருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இதுவே, அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவானவரலாறு. வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி, காட்டில் வாழ்ந்தவர்களிடம், ‘பசிக்கிறது’ என உணவு கேட்டாள்.அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று, “அம்மா! நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். நீயோ, அந்தணப் பெண்ணைப் போலத் தோற்றமளிக்கிறாய்.

உனக்கு எங்கள் உணவைத் தரக் கூடாது. அதற்குப் பதிலாக பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள்” என்று அளித்தனர். இந்த பச்சரிசிமாவையே திருநெல்வேலி மாவட்டகிராமங்களில் ‘துள்ளு மாவு’ என்கிறார்கள். 
உரலில் இட்டு இடிக்கும் போது துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசிமாவு கொண்டு ரேணுகா கூழ் காய்ச்சிக் குடித்து பசியாறினாள். அவர்கள் தந்ததைக் கொண்டு பசி யாறிக் கொண்ட ரேணுகாதேவி, சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள்.அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.சிவபெருமான் அவளுக்கு காட்சியளித்து,“ ரேணுகாதேவி! சக்தியின் அம்சம் நீ! மனித குலத்தை தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே, அந்த துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக் கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்கு!” என்று வரம் அளித்து மறைந்தார். 

அதன் பின், ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள்.இந்த நிகழ்ச்சி மழைக்காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பெண்கள் வேப்பிலை ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும், அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியை, புனிதமான ஆடி மாதத்தில்...
வேண்டுகிறேன்.....

Tuesday, July 27, 2021

மந்திரம் இப்படி ஜெபித்தால் பலிதமாகும் 100 % உறுதி.

எப்படி ஜபிக்க வேண்டும்?

ருத்திராட்சம், துளசி, ஸ்படிகம், மிளகு, தாமரை விதை ஆகியவற்றாலான ஜப மாலையைப் பயன்படுத்தி ஜபம் செய்வார்கள். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்தி நகர்த்தவேண்டும். 

* 108 மணிகள் கொண்ட மாலையைப் பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72,000 நாடிகள் இணைவதால், அந்தப் பகுதியைத் தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் என்பார்கள் பெரியோர்கள்.

*  ஜபிக்கும்போது, `கிருஷ்ண மணி' எனப்படும் 109-வது மணியைத் தாண்டக்கூடாது. மீண்டும் ஜபித்த வழியே மாலையைத் திருப்பி ஜபிக்கவேண்டும்.

*  வெறும் தரையில் அமர்ந்து ஜபம் செய்யக்கூடாது. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துண்டின் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து, அதன் மீது அமர்ந்து ஜபம் செய்யவும்.

*  ஜபிக்கும்போது, ஜப மாலை வெளியே தெரியாதபடி ஒரு துணியால் மூடியபடியோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து, அதன் உள்பகுதியிலோ வைத்து ஜபிக்கவேண்டும்.

*  மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் - அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்திடம் நிலைநிறுத்தி, உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.

*  தீட்சை பெற்ற மந்திரத்தைச் சத்தமாகச் சொல்லக்கூடாது. உதடுகள் அசையக்கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். 

*  குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தைச் சத்தமாக ஜபிப்பது, வெளிநபர்களுக்குக் கூறுவது, எழுதிவைப்பது ஆகியன,  மந்திர யோகத்துக்கு எதிரானவை.

*  வீட்டில் அமர்ந்து ஜபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜபம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜபித்தால் 1000 மடங்கும், மலை மீது அமர்ந்து ஜபித்தால் 10,000 மடங்கு பலனும் கிடைக்கும். 

*  திருக்கோயிலில் அமர்ந்து ஜபம் செய்தால், லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாதக்கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜபம் செய்தால், கோடி மடங்கு பலன் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

*  சந்தியா காலமாகிய சூரிய உதயம்  மற்றும் அஸ்தமன வேளையில் ஜபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். 

*  மந்திர ஜபம் செய்து வருபவர்கள், எளிமையாக ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், மெல்லிய ஆடைகளை அணிவதும் சிறப்பு.

*  மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஞான மந்திரங்களை வடக்கு நோக்கியும், இல்வாழ்வுக்கு உரியவற்றைக் கிழக்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. 

*  மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்கவேண்டும். வீட்டில் வைத்து ஜபிப்பதாக இருந்தால், பூஜையறையில் வைத்து ஜபிக்கலாம்.

 *  ஜபிக்கும்போது, அறையில் தூப மணம் நிறைந்திருப்பது சிறப்பு. சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷண சக்தி உள்ளதால், சாம்பிராணி தூபம் உபயோகிப்பது மிகவும் சிறப்பானது.

*  பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி ஆகிய தினங்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர ஜபத்துக்குச் சிறப்பான நாள்களாகும். அனுதினமும் ஜபிக்க இயலாத அன்பர்கள், இதுபோன்ற விசேஷ தினங்களில் இறை நாமங்களை ஜபித்து திருவருள் பெறலாம்.

*  மந்திர ஜபத்துக்குமுன், விநாயகரை தியானித்து வழிபட்டு, ஜப வழிபாட்டுக்கு எவ்விதத் தடங்கலும் நேராமல் காத்தருளும்படி வேண்டிக்கொண்டு, ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம். 

*  மந்திரத்துக்கு உரிய தெய்வத்துக்கு மலர், தூப-தீப, நைவேத்திய ஆராதனைகளைச் செய்தபிறகு, மந்திரங்களை உருக்கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். உரிய எண்ணிக்கையில் உருக் கொடுத்த (ஜபம் செய்த) பிறகு கற்பூர ஆரத்தி காட்டிப் பூஜையை நிறைவு செய்யவேண்டும். ஜபிக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக்கொள்ள, உரிய ஜப மாலையை உபயோகிக்கலாம். 

*  மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜபிப்பதே சிறப்பானதாகும். தகுந்த குருநாதரால் மட்டுமே, ஜபம், தியானம் குறித்துச் சரியான வழிகாட்டலை வழங்கமுடியும்.


 - 

Monday, July 26, 2021

இந்த படம் வீட்டில இருந்தால் போதும் செல்வம் கொழிக்கும்

🌹 🌿 இந்த படத்தை மட்டும் வீட்டில் மாட்டி வைத்தால் எப்பேர்ப்பட்ட தரித்திரமும் நீங்கி செல்வம் கொழிக்கும்! அது என்ன படம் என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?🌿🌹

🌹 ஒரு சில விசேஷமான படங்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும் சக்தி உண்டு. சிலவற்றிற்கு செல்வத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த படத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை மேலும் பெருக்கும். அந்த வகையில் எப்பேர்பட்ட பீடையும், தரித்திரமும் நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு உண்டாக செய்யக்கூடிய இந்த படம் எந்த வகையில் விசேஷமானது? அப்படி அது என்ன படம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். சுக்கிரனின் வாகனமாகவும், சூரியனின் வாகனமாகவும் இருப்பது வெள்ளை குதிரை தான். ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரிய பகவானும், வெள்ளை குதிரையில் சுக்கிர பகவானும் அருள் புரிகின்றார்கள். கஜமுக விநாயகருக்கு யானை விசேஷமானது போல வாழ்வில் செல்வம் செழிக்க வெள்ளை குதிரை மிகவும் விசேஷமானது. ஒருமுறை சுக்கிரனுடைய வாகனமாக இருக்கும் வெள்ளை குதிரையை மகாலட்சுமி தேவி தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாராம்

 அச்சமயத்தில் ஸ்ரீமன் நாராயணன் பேசிய வார்த்தைகள் எதுவும் மகாலட்சுமி தேவியின் செவிகளுக்கு விழவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மகாவிஷ்ணு மகாலட்சுமியை குதிரையாக போகக் கடவாய் என சபித்து விட்டாராம். இதனால் அழகிய வெள்ளை குதிரையாக பூலோகத்தில் மகாலட்சுமி தேவி பிறந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. எனவே குதிரையில் மகாலக்ஷ்மி தேவி வாசம் செய்கிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதங்களில் ஒய்யாரமாக வரும் சூரிய பகவான் நமக்கு சுபிட்சத்தை கொடுக்க கூடியவர்.

🌹 இல்லற வாழ்க்கையில் இனிமை காண சுக்கிரபகவான் உடைய அருள் வேண்டும். களத்திர காரனாக விளங்கும் சுக்கிரனுடைய அருளின்றி நல்ல மனைவியும், நல்ல கணவனும் ஒருவருக்கு அமைவது இல்லை. வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும், கன்னிப்பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த வரன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனையாள் அமையவும் சுக்கிர பகவானை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அதுபோல அவருடைய வாகனமாக விளங்கும் குதிரை படத்தை வீட்டில் மாட்டி வைப்பது இன்னும் சிறப்பு அம்சமாகும். ஏழு குதிரைகள் கொண்ட படங்கள் அதிர்ஷ்ட படங்களாக கூறப்படுகிறது. அது போல வெள்ளைக்குதிரை படத்தை மட்டுமே மாட்டி வைத்தாலும் அதிர்ஷ்டம் தான். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நம் உள்ளங்கையை பார்த்து எழுவது வழக்கம்.

🌹 உள்ளங்கையில் அஷ்டலட்சுமிகளும் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆகவே உள்ளங்கையை பார்த்துவிட்டு எழுவது அன்றைய நாளை அதிர்ஷ்டமாக மாற்றும். அதன் பிறகு நாம் இந்த ஏழு குதிரைகள் ஓடுவது போன்ற படம் அல்லது வெள்ளைக்குதிரை படத்தை பார்த்துவிட்டு அன்றாட வேலைகளை துவங்கினால் அன்றைய நாள் முழுவதும் வீட்டில் மகிழ்ச்சியும், வியாபாரம், தொழில் போன்றவற்றில் விருத்தியும் உண்டாகும் என்பது ஜோதிட நம்பிக்கை.

🌹 வீட்டின் வரவேற்பறையில் கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் எல்லோருடைய பார்வையும் தெரியும் படியாக குதிரை படத்தை மாட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை தரும். எப்பொழுதும் ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை வேட்டையாடுவது போன்ற படத்தை வீட்டில் மாட்டி வைக்க கூடாது. இவை கெட்ட அதிர்வலைகளை உண்டாக்கும்.

🌹 மகாலட்சுமி தேவியின், படம் வாத்தியக் கருவிகளின் படம், குதிரை படம், கழுதை படம், கோமாதா ஆகியவற்றின் படங்களை வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் காணும்படி மாற்றி வைப்பது எத்தகைய பீடை மற்றும் தரித்திரத்தையும் நீக்கிவிடும்.

(🌹 படித்ததை பகிர்ந்தேன் 🙏 )

Friday, July 23, 2021

உங்களுடைய பாவத்திற்கு அடுத்த பிறவி என்ன? அதற்குரிய தண்டனை என்ன? தெரியுமா?

நீங்கள் செய்யும் தவறுக்கு அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் தெரியுமா? - அழிவில்லா கர்மா

நாம் தற்போது செய்யும் பாவங்களை யாரும் அறிந்திருக்கவில்லை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். நாம் செய்யும் நல்லது கெட்டவற்றை மேலே உள்ளவன் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான். நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே கர்மாவானது செயல்படுகிறது. அவ்வாறு நாம் பாவம் செய்தால் அந்த கர்மாவானது எவ்வாறு செயல்படுகிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

கர்மாவின் சட்டங்கள்

1. உங்களின் தற்போதைய வாழ்க்கையில் செய்யும் நல்லவை மற்றும் பாவங்கள் உங்களின் அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது சில நேரங்களில் கர்மாவின் சட்டங்கள் நம்மை மிகவும் கடுமையாக தாக்குவதாய் இருக்கும், அவை அதன் அறிவுக் கூர்மைக்கு உட்பட்டு இருக்கின்றன. இந்துப் புராணங்களில் கர்மா எவ்வாறு செயல்படுகிறது மற்றும் பாதிக்கிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளன.
2. கர்மா அடுத்த பிறவியைப் பாதிக்கிறது நம்முடைய தற்போதைய வாழ்க்கையில் கர்மாவின் பலன்கள் செயல்பட வேண்டும் என்று நாம் எவ்வளவு விரும்பினாலும், அது அவ்வாறு செயல்படாது. நம்முடைய இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் நல்லது மற்றும் கெட்டதைப் பொறுத்து இந்த வாழ்நாளிலேயே அதற்கான நேர்மறையான பலன்களையும் எதிர்மறையான முடிவுகளையும் அனுபவித்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் அது எப்போதும் நடக்காது. இன்று நாம் செய்யும் எல்லாமே அடுத்த பிறவிக்கான சேமிப்பு கணக்கு தான். அந்த சேமிப்புக்கு வட்டியும் முதலுமாய் அடுத்த பிறவியில் அனுபவிப்போம். அதுவே கர்மா.

3. பண்டைய நூல்கள் இந்து மதத்தின் பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நமது வாழ்வானது தற்போதைய வாழ்க்கையில் நமது கர்மாவினால் முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், நமது கடந்த கால வாழ்க்கையில் இருந்தும் என்னென்ன செய்திருந்தோம் என்பதைக் கண்காணிக்கப்பதாகவும் அமைகிறது.
4. பிறக்கும் முறை பிறக்கும் முறை என்றால் மனிதனாகிய நாம் பிறப்பதற்குத் தயாராவதற்கு முன்பு நம்முடைய முந்தைய பிறப்பின் வாழ்க்கையில் நாம் செய்த நல்லது மற்றும் கெட்டவற்றைக் கணக்கிட்டு அதன் வினைகளாக இந்த கர்மாவானது செயல்படுகிறது. அந்த கர்மா தான் அடுத்த பிறவியில் ஒருவர் எப்படி பிறக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.

5. நல்ல கர்மா மற்றும் கெட்ட கர்மா நமது தற்போதைய வாழ்க்கை கடந்த கால கர்மாவின் நிழல்களின் கீழ் தொடர்ந்து இயங்குகிறது. இந்த வாழ்க்கையில் நாம் தொடர்ந்து கெட்டதைச் செய்தும், தீங்குகள் பெரிதாக நிகழாமல் நாம் இன்னும் மகிழ்ச்சியான கட்டங்களை அனுபவிக்கிறோம் என்றால் அது நம் முந்தைய வாழ்க்கையில் செய்த நல்ல செயல்களின் பயனாக நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல கர்மாவின் விளைவாக இருக்கலாம். தற்போது செய்யும் தீய வினைகளுக்கு அடுத்தப் பிறவியில் கொடிய வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும்.

6. முனிவர் வியாசர் பண்டைய முனிவர் மகரிஷி வேத வியாசர் மனிதர்களுக்கு உயரிய அறிவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேதங்களையும் புராணங்களையும் இயற்றி அருளினார். அவருடைய போதனைகள் நமக்கு எப்போதும் அறிவொளி அளித்த வண்ணம் உள்ளன. இன்று நாம் பிறப்பு மற்றும் அவதாரங்களைப் பற்றிய அறிவைப் பெற்று ஆராய்வதற்கு அவரே காரணம்.

உயிரினங்கள் பிறக்கும் விதி கர்மா

7. 84000 மறுபிறப்புகள் ஒரு ஆத்மா மனிதனாகப் பிறப்பதற்கு 84000 பிறப்புகளைச் சிறிய செல்களின் மூலமாக பூச்சிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வழியாக பிறக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக அறியப்படுகிறது.
8. இந்து மதத்தில் பிறப்பின் வகைகள் ஒரு ஆன்மா மனிதனாக பிறந்த பிறகு அவர்களின் நல்ல கர்மா மற்றும் தீய பாவங்களின் அடிப்படையில் தன்னுடைய அடுத்த பிறப்பானது தீர்மானிக்கப்படுகிறது என்று முனிவர் வியாசர் விளக்குகிறார். இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் தான் நீங்கள் ஒரு பூச்சியாகவோ, விலங்காகவோ அல்லது மனிதனாகவோ மறுபிறவி எடுக்கும் முறை தீர்மானிக்கப்படுகிறது.

9. கருட புராணம் கருட புராணத்தில் ஒரு ஆத்மா மனிதனாகப் பிறக்க அனுமதிக்கப்பட்டவுடன் கருப்பையில் தங்கி இருக்கும் ஒன்பது மாதங்களும் இந்த கர்மாவின் அருளை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து கடவுளுக்கு சேவை செய்வதாக அந்த ஆன்மா உறுதியளிக்கிறது. ஆனால் பிறந்த பிறகு மனிதன் மறந்து பாவங்களைச் செய்கிறான்.

10. உலகில் குற்றங்கள் கொள்ளை, மோசடி, துரோகம், கொலை மற்றும் ஒருவரை காயப்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றங்களைப் பற்றி முனிவர் வியாசர் விளக்குகிறார். ஆன்மாவின் தலையெழுத்து இந்த பாவங்களைப் பொறுத்து அமைகிறது. எந்த பாவம் எந்த பிறப்பில் பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

11. பாவம் 1 ஒரு பெண்ணுடன் வலுக்கட்டாயமாக உறவை மேற்கொள்ளும் எவரும் நரகத்தில் பயங்கரமான தண்டனைகளின் விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த பிறவியில் அவர்கள் ஓநாயாகவும், பின்னர் அதற்கு அடுத்த பிறவியில் குள்ளநரியாகவும், பின்னர் அதற்கு அடுத்த பிறவியில் கழுகாகவும், அதற்கு அடுத்த பிறவியில் பாம்பாகவும் இறுதியாக ஒரு ஹெரான் கொக்காகவும் பிறந்து துன்பங்களை அனுபவிப்பர்.

புராணங்களில் மன்னிக்க முடியாத பாவங்கள்

பாவம் 2
குடும்பத்தில் உள்ள பெரியவர்களையோ அல்லது வெளி உலகில் உள்ள பெரியவர்களையோ அவமதிப்பதும் அவர்களை சங்கடப்படுத்துவதும் மற்றும் பொது வெளியில் அவர்களை தாழ்த்துவதுமாக செய்பவர்கள் அடுத்த பிறவியில் காகமாகப் பிறப்பார்கள். குறைந்தது 10 ஆண்டுகளாவது இந்த பிறப்பில் அவர்கள் வாழ வேண்டியிருக்கும்.

பாவம் 3
தங்கத்தைத் திருடுவது புராணங்களில் மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. ஒரு நபர் அந்த பாவத்தைச் செய்தால் அதன் கடுமையான விளைவை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்பவர் தனது அடுத்த பிறவியில் ஒரு பூச்சியாக பிறப்பார் என்று முனிவர் வியாசர் கூறுகிறார். மேலும் வெள்ளியைத் திருடும் ஒருவர் அடுத்த பிறவியில் புறாவாகப் பிறப்பார்.

பாவம் 4
ஒருவர் திருடுவதோ மற்றவரின் துணிகளைப் பறிப்பதோ அல்லது ஒருவரைத் சீர்குலைப்பதோ செய்பவராக இருந்தால் அந்த பாவங்கள் கடுமையான தண்டனைக்களுக்குக் காரணமாகின்றன. அவர்கள் அடுத்த பிறவியில் கிளியாகப் பிறப்பார்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கூண்டு வழியாக வாழும் கூண்டு கிளியாகவே வாழ வேண்டியிருக்கும்.

பாவம் 5
ஒருவரின் வாழ்வைப் பறிப்பது மற்றும் ஒருவரைக் கொலை செய்வது மிக கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த நபர் அவரின் அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறப்பார் என்று முனிவர் வியாசர் கூறுகிறார். அந்த விலங்கு தன் வாழ்நாள் முழுவதும் அதன் உரிமையாளரின் சுமைகளைத் தாங்கி, இரவும் பகலும் அதிக எடையைச் சுமந்து வாழ வேண்டியிருக்கும்.🙏

Monday, July 19, 2021

பல நோய்கள் தீர்க்கும் அற்புத ஒரே ஒரு மந்திரம்

#பல #நோய்களை #தீர்க்கும் #ஒரே #மந்திரம் #கூறிய #அகத்தியப் #பெருமான்!

மனிதர்களுக்கு வரும் நோய்கள் குறித்தும், மனித உடல் பாகத்தை மையமாக வைத்து எத்தனை நோய்கள் வரும் என்பதையும் அகத்தியர் மிக அழகாக கூறியுள்ளார். அதன்படி நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் கூறியுள்ளார்.
ஆனால் அகத்தியர் கூறிய பல்வேறு மருந்துவ முறைகள் பாதுகாக்கப்படாமல் விட்டப்படியால் இன்னும் அவை பற்றிய குறிப்புகள் கிடைக்காமல் உள்ளது. தற்போது பல குறிப்புகளில் ஒரு சில மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கில் உள்ளது.
கிடைத்த குறிப்புகளில் ஒரு சில மருத்துவக் குறிப்பு நெற்றியில் அணியும் திருநீரை மந்திர உரு ஏற்றினால் ஒரு சில நோய்கள் விலகும் என்று கூறியுள்ளார்.
அகத்தியர் அருளிய உடல்நோய்கள் அனைத் தையும் முற்றிலும் நீக்கும் இம்மந்திரத்தினை ஜெபித்து நோய்களினின்றும் விடுதலைப் பெற்று மகிழ்வுடன்வாழ்வோமே....... .

கணபதி மந்திரம் .
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற .
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு .
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று .
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று .
தாமப்பா நடனகண பதிதானொன்று .
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று .
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க் கேளு .
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே. .
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று .
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று .
நன்றான மூலகண பதிதானொன்று .
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க் .
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக் .
குறிப்புடனே சொல்லுகிறேன் .
குணமாய்க்கேளு .
நின்றாடு மூலமடா ஆதிமூலம் .
நிலையறிந்து .

 *ஓம்கிலி அங்உங்* 

208
கெண்ணே .

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந் திரம் இருக்கிறது. அது .

 *"ஓம் கிலி அங் உங்"* .

என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார். .

எண்ணமுடன் இடதுகையால் விபூதி வைத்து ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து சுத்தமுடன் ஓம்கிலி அங்உங் கென்று தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத் (208) தான் செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால் முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே. .
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும் .
கெடியான குன்மமுடன் காசந்தீரும் .
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும் .
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும் .
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம் .
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் .
வாங்கிப்போகும் .
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று .
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே. .
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான "உ" என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். .
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

Friday, July 16, 2021

ஆடி மாதம் சிறப்பு பதிவு கண்டிப்பாக பார்க்க.

நாளை ஆடி தமிழ் மாதம் பிறக்கிறது...17.07.2021 சிறப்பு பதிவு...🙏🙏🙏

அம்மனுக்கு வெற்றிலையால் முழுவதும் அலங்காரம்... காண கண் கோடி வேண்டும் நண்பர்களே 🙏🙏🙏

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஓம் சக்தி ! பராசக்தி !🙇🍁🍂

Wednesday, July 14, 2021

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

சுமங்கலி பூஜை!

சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது?
அதன் நன்மைகள் என்னென்ன?

சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. 'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். அம்பிகையின் திவ்ய நாமங்களைச் சொல்லி வழிபடும் ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள 'சுவாஷினி' என்னும் பெயரில் இருந்துதான் 'சுமங்கலி' என்னும் பெயரானது உருவானது.

திருமணமான பெண்களை 'சுமங்கலி' என்று அழைப்பது வழக்கம். பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.

எந்தெந்த தினங்களில் சுமங்கலி பூஜை நடத்தலாம் ?

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடத்தலாம். இந்த தினங்களில் யோகம், திதி போன்றவற்றை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரிநாளில் நடத்தக்கூடாது. ராகுகாலம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நவராத்திரி நாட்களில் நடத்துவது மேலும் சிறப்பாக அமையும்.

சுமங்கலி பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? 

பூஜை செய்வோர் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் உள்ளேயும், வாசலிலும் அழகாக மாக்கோலம் இட வேண்டும்.மாவிலைத் தோரணங்களால் வீட்டை அழகுபடுத்த வேண்டும். 

பூஜை செய்வோர் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து நடத்துவது அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்.பூஜைக்கு அழைக்கப்படும் பெண்களை சக்தியின் வடிவமாகக் கருதி சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.

பின்பு, அவர்களை அழகாக கோலமிடப்பட்ட பலகையில் அமரவைக்க வேண்டும். அவர்களது பாதங்களைத் தாம்பூலத் தட்டில் வைத்து, பூஜை நடத்தும் இல்லத்தின் தலைவி அவர்களுக்கு, பாதபூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக குங்குமம், சந்தனம் பூசி, அவர்கள் தலையில் சூடிக் கொள்ள மலர்களும் கொடுக்க வேண்டும்.

தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு புடவை அல்லது ஜாக்கெட் துணியுடன் , மஞ்சள், குங்குமம், மருதாணி (குலவிருத்திக்காக) மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்.

விழாவுக்கு வந்த பெண்களுக்கு குடிப்பதற்குப் பாலும், பழமும் கொடுக்க வேண்டும். அவர்களை ஶ்ரீதேவியாக நினைத்துத் தீபாராதனை செய்ய வேண்டும். தீபாராதனை முடிந்த பின்பு 'பஞ்சாங்க நமஸ்காரம்' மேற்கொள்ள வேண்டும்,

அடுத்ததாக, பூஜைக்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு அறுசுவை உணவளித்து, விழாவுக்கு வந்தவர்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை மரியாதையோடு வழி அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.

சுமங்கலி பூஜை செய்வதால், உண்டாகும் நன்மைகள்:

இல்லத்தில் செல்வம் பெருகும்.
துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.
தோஷங்கள் நீங்கும்.
குலவிருத்தி உண்டாகும்.
களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும்.

சுமங்கலி பூஜையை மிகவும் பிரமாண்டமாகத்தான் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு செய்யலாம். முழுமையான இறைபக்தியோடு செய்தால், போதுமானது. பூஜை நடத்துபவர்களின் இல்லங்கள் மட்டுமின்றி, பங்கேற்பவர்களின் இல்லங்களிலும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

Monday, July 5, 2021

கணவன் மற்றும் மனைவி ஒற்றுமை சக்திவாய்ந்த மந்திரம்

கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்
மந்திரம்  1:

ஓம் காம் காமமாலினி  பதிம் மே வசமானய ட்டஹ  ட்டஹ ||

சூர்ய அல்லது சந்திர கிரகண நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.

அதன் பின்னர் குங்குமம் கஸ்தூரி கோரோசனை மூன்றையும் சேர்த்து அரைத்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்தபின் கிழக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து வலது கைப் பெருவிரலில் அந்தக்  கலவையைத் தொட்டு  இம்மந்திரத்தை 7 தடவை ஜெபித்து நெற்றியில் அல்லது புருவ நடுவில் வைத்து வரத் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் பிரியமும் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------

மந்திரம் 2 :-

ஓம் ஹும் ஜும்  ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா

இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.(மாதவிலக்கு நாட்கள் தவிர இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்கவும்).

-------------------------------------------------------------------------

மந்திரம் 3 :-
 ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம ..............வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||

குறிப்பு :
கணவன் ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பத்னி என்ற வார்த்தையும் ,

மனைவி ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பதி  என்ற வார்த்தையும்
சேர்த்து ஜெபிக்கவும்.

இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 27 தடவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இன்று அல்லது அமர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.

Sunday, July 4, 2021

எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் சரி இதோ ஒரு சூப்பர் பரிகாரம்.

கடுமையான கடன் நெருக்கடிகள் தீர #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉ஓம் நமசிவாய #🙏ஓம் நமச்சிவாய 🙏 

⚘⚘🌿🌿⚘⚘🌿::::::::::::::::🌿⚘⚘🌿🌿⚘⚘

கடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவிக்கும் ஆன்மீக உபதேசம்!!!

முற்பிறப்பு கர்மாக்கள் அல்லது கவனக்குறைவு அல்லது ஏழரைச்சனி/அஷ்டமச்சனி அல்லது அளவற்ற கருணையால் தவறான ஆட்களுக்கு ஜாமீன் ஏற்றல்,குடும்பப் பொறுப்பை தன் மீது சுமத்திக் கொள்ளுதல் போன்றவற்றாலும்,

வேறு பல சொல்லமுடியாத காரணங்களாலும் தனி மனிதர்கள் கடன் என்ற மோகினியிடம் சிக்கிக் கொள்கின்றனர்;

பலவிதமான பரிகாரங்கள்,வழிபாடுகள் செய்தாலும் கடன் குறைவதற்கான வழிகளே தெரியவில்லை; என்றும் தெரிவிக்கின்றனர்;

ருணவிமோசன வழிபாடுகள் செய்தும் தீரவில்லை எனில் கடுமையான கர்மவினையால் இந்தக் கடன்கள் நமக்கு உருவாகியிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பைரவ பரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் முதலில் அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;

ஏனெனில்,தினமும் மது அருந்துபவர்களின் ஜாதகம் இயங்காது;அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்களின் இறைவழிபாடு அவர்களுக்கே பலன்கள் தருவதில்லை;

யாருக்கு கடன் இருக்கிறதோ அவர்கள் தமது பழைய பனியன்/வேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்;(கணவனின் கடன் தீர மனைவி இந்த வழிபாட்டைச் செய்யலாம்;

அப்பா சார்பாக மகளோ,சகோதரன் சார்பாக சகோதரியோ இதைச் செய்யக் கூடாது.

நண்பனுக்காக பெண் தோழியோ இதைச் செய்யக் கூடாது;தனித்து வாழும் ஆண்கள் தாமாகவே செய்ய வேண்டும்)

.நீண்டகாலமாக பயன்படுத்திய பனியன்/வேட்டியை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்;(துவைத்து காய வைத்தப்பின்னர் இதைச் செயல்படுத்தவும்) பத்து செண்டிமீட்டர் நீளமும் பத்து செண்டிமீட்டர் அகலமும் உடைய 16 சம சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்;

கூடவே,கறுப்பு நூல்கண்டு ஒன்றும் கொஞ்சம் மிளகும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்;(சமையலறையில் இருக்கும் மிளகைப் பயன்படுத்தக்கூடாது; தனியாக கடையில் வாங்கிக் கொள்வது அவசியம்)

ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த 16 சம சதுரத் துண்டுகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்;

அதில் ஒவ்வொன்றிலும் 27 மிளகுகளை வைத்து கறுப்பு நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்;ஒரு தேங்காய் வாங்கி,அதை உடைத்துவிட்டு,உள்பகுதியில் ஈரமில்லாமல் துடைத்து வைத்துக் கொண்டு தேங்காயின் உள்பகுதியில் இந்த 27மிளகுகளைக் கொண்ட கறுப்புநூலால் கட்டப்பட்ட சிறுபொட்டலத்தை வைக்க வேண்டும்;

ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தேங்காய் மூடியினுள்(உள்ளே தேங்காய் இருக்கவேண்டும்) வைத்து,அந்த தேங்காயில் சுத்தமான நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

பைரவப் பெருமானின் சன்னிதியில்,இந்த தேங்காய்த் துண்டுகளை பைரவப்பெருமானின் முன்பாக வைக்க வேண்டும்;(சில கோவில்களில் பைரவரின் முன்பாக வைக்க அனுமதிப்பதில்லை;

அவர் இருக்கும் பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்)வைக்கும்போது அங்கே இருக்கும் காலியான அகல்விளக்கின்(இல்லாவிட்டால் கடையில் வாங்கி வரவும்) மீது தேங்காயின் கூர்மையான கீழ்ப்பகுதி இருப்பது போல நிலைநிறுத்திவைக்க வேண்டும்;

பைரவப் பெருமானிடம் மனப்பூர்வமாக தனது கடன்கள் விரைவாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த இரண்டு தேங்காய்களிலும் இருக்கும் மிளகுப்பொட்டலத்தின் மீதும் தீபமேற்ற வேண்டும்.

இது போல தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டும்.தீட்டு,வேலைப்பளு போன்ற காரணங்களால் தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்ய முடியாத நிலை வந்தாலும்,விட்டுவிட்டாவது எட்டே எட்டு சனிக்கிழமைகள் மட்டும் இம்மாதிரியான வழிபாடு செய்ய வேண்டும்.

எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்தது முதல் 90 நாட்களுக்குள் எவ்வளவு பெரிய கடன் தொகையாக இருந்தாலும் அவை தீர எதிர்பாராத உதவியை பைரவப் பெருமான் அருளுவார்;

கடந்த 25 ஆண்டுகளாக இந்த சுயபரிகாரமுறையைப் பின்பற்றி ஏராளமானவர்கள் தமது கடன்களில் இருந்து மீண்டிருக்கின்றனர்.

தனித்து வாழ்ந்து வரும் பெண்கள் தமது சக்திக்கு மீறிய கடன்களில் சிக்கியிருந்தால் கடையில் கிடைக்கும் கைத்தறி காடாத் துணியை வாங்கி அதில் மேலே கூறியது போல 27 மிளகு வைத்து வழிபாடு செய்ய கடன்கள் தீரும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ⚘🌿

நன்றி:-

Saturday, July 3, 2021

ஆஞ்சநேயர் சிரஞ்சீவி ஆன கதை..

.Hare Krishna.....

ஆஞ்சநேயர் சிரஞ்சீவி ஆன கதை.....!!!

சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர் - சீதா தேவி கொடுத்த வரம்

ஆஞ்சநேயரின் கனவில், அவருடைய மூதாதையர் மிகுந்த வருத்தத்துடன் காட்சியளித்தார்கள். ஆஞ்சநேயருக்கு இந்த கனவிற்கான காரணம் புரியவில்லை. 

அவா் வசிஷ்டரின் மகனிடம் போய், கனவைச் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு வசிஷ்டரின் மகன், "ஆஞ்சநேயா! உன் முன்னோர்களுக்குப் பசி எடுத்திருக்கும். ஆகையால், உன் முன்னோர்களுக்கு நினைவுக்கடன் செலுத்தி, அவர்களுக்கு ஏதாவது கொடு!" என்றார்.

ஆஞ்சநேயரும் அதன்படியே செய்தார். ஆனால், முன்னோர்கள் மறுபடியும் கனவில் வந்து வருத்தமுடன் காட்சி தந்தனர்.

இந்த முறை ஆஞ்சநேயர் உண்மையை உணர்ந்து கொண்டார். "ஆஞ்சநேயா! நீ பொறுப்பாக எங்களுக்குப் பிண்டம் அளிக்கிறாய். ஆனால், உனக்குப்பின் இவ்வாறு, எங்களுக்கு யார் செய்வார்கள்?" என அவர்கள் வருந்துவதாக ஆஞ்சநேயருக்குப் புலப்பட்டது.

அவருடைய கவலையையும் அதற்கான காரணத்தையும் அறிந்த அன்னை சீதாதேவி, "ஆஞ்சநேயா வருந்தாதே. கிஷ்கிந்தைக்குச் செல். பெண் பார்த்து அழைத்து வா. நான் திருமணம் செய்து வைக்கிறேன். அப்புறம் என்ன? உன் சந்ததியால், முன்னோர்களுக்கு உண்டான சிரார்த்த கடமைகளை செய்வார்கள் என்றார்.

அதன்படியே கிஷ்கிந்தைக்குச் சென்ற அனுமன், சுக்ரீவனிடம் விவரத்தைச் சொன்னார். சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு தெற்கே உள்ள கீச்சட் என்ற நாட்டின் அரசகுமாரியான சிலிம்பா என்பவளைப் பற்றிக் கூறி, அவளை மணம் முடிக்க முயற்சி செய்யும்படி அறிவுறுத்தினார்.

அனுமனும் உடனே அந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை சிலிம்பாவிடம் அழைத்துச் சென்றார்கள் அரண்மனைக் காவலர்கள். அனுமன் அவளிடம் தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த சிலிம்பா, அவரைப்பற்றிய தகவல்களையெல்லாம் அவர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொண்டாள். பின்னர், "காதல் தத்துவத்தைப் பற்றி எவ்வளவு தெரியும்? ஒரு முத்து மாலைக்கு நான் ஆசைப் பட்டால், அதை எப்படிக் கொண்டு வந்து கொடுப்பீர்கள்? கோபம் கொண்டு நான் சாப்பிட மறுத்தால், என்ன செய்வீர்கள்?" என்றெல்லாம், கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள்.

ஆஞ்சநேயர் இந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் .''காதல் தத்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அதை சுக்ரீவனிடத்தில் கேட்டால், அவன் காதல் தத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து விடுவான். அடுத்து முத்துமாலை வேண்டுமென்றால், அன்னை சீதா தேவியிடம் கேட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன். மூன்றாவதாக, நீ கோபப்பட்டு உண்ணாமல் இருந்தால், நானே இரும்பு போன்ற என் விரல்களால் உனக்கு ஊட்டிவிடுவேன். ஆகையால் கால தாமதம் செய்யாதே! அயோத்தியில் சீதாதேவி உன்னை வரவேற்கத் தயாராக இருக்கிறார் என்றார். 

சிலிம்பாவோ ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, "உனக்குக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரிய வில்லை. போய் சுக்கிரீவனை அனுப்பு!"என அவமானப்படுத்தினாள்.

அதனால் கோபம் கொண்ட அனுமன், ஆவேசத்துடன் சிலிம்பாவை நோக்கி முன்னேறினார். அதற்குள்ளாக, சிலிம்பாவின் வீரர்கள் அனுமனைப் பிடித்து கட்டிப்போட்டார்கள்.

"இந்தக் குரங்கைச் சும்மா விடக்கூடாது. இதன் வாலில் பன்னிரண்டு அங்குலம் மட்டும் வெட்டிவிட்டு, தூக்கியெறிந்துவிடுங்கள்!" என உத்தரவிட்டாள் சிலிம்பா.அதே விநாடியில் அனுமன் ராமனைத் தியானிக்க, அவரைக் கட்டியிருந்த கட்டுக்கள் தளர்ந்தன; உடம்பு இமயம் போல் பிரம்மாண்டமாக வளர்ந்தது. அப்படியே தாவிய அனுமன் சிலிம்பாவின் தலைமுடியைப் பற்றியபடி, ஆகாயத்தில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த நேரம், "அட! ஆஞ்சநேயரின் பிரம்மசர்ய விரதம் முடியப் போகிறது" என்று பேசியபடியே அஷ்டதிக் பாலர்கள், ஆஞ்சநேயரை நெருங்கி, " ஆஞ்சநேயா நீங்கள் கொண்டுசெல்லும் பெண்ணைப் பார்க்க விரும்புகிறோம் நாங்கள்" என்று கூறினார்கள்.
பெருங்குரல் எடுத்து ஆஞ்சநேயர் ஒரு முழக்கமிட, அனைவருமாகப் பயந்து மேகக் கூட்டங்களில் போய் மறைந்தார்கள். 

சிலிம்பா கெஞ்சினாள். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள். ஆஞ்சநேயரின் பிடி தளரவே இல்லை. அதிவேகமாக ஆஞ்சநேயர் போய்க் கொண்டிருந்த போது, கீழே துங்க பத்ரா நதியில் சுக்ரீவன் தன் மனைவிகளுடன் நீராடிக் கொண்டிருந்தது, ஆஞ்சநேயரின் பார்வையில் பட்டது. அவ்வளவுதான். சிலிம்பாவை ஆகாயத்திலிருந்து சுக்ரீவனின் தோள்களில் விழும்படியாக உதறிவிட்டு, முன்பைவிட வேகமாகப் பறந்து போகத் தொடங்கினார். 

அயோத்திக்கு வெறுங்கையுடன் திரும்பிய அனுமனைப் பார்த்து சீதாதேவி வியந்தார். "குழந்தாய்! ஆஞ்சநேயா! என்ன ஆயிற்று? பெண் எங்கே?" எனக் கேட்டார்.

ஆஞ்சநேயர் தலையைக் குனிந்தபடியே, "தாயே! அவள் என்னை ஏற்கவில்லை. அதனால் அவளைத் தூக்கி வந்து, சுக்ரீவனுக்கு கொடுத்துவிட்டேன். பரந்து விரிந்த உலகில் தெய்வம் எனக்கு மட்டும் மிகவும் குறுகிய இதயத்தைக் கொடுத்திருக்கிறது. 
அதில் நீங்களும் ராமசந்திரமூர்த்தியும் 
முழுவதுமாக நிறைந்து இருக்கிறீர்கள். அங்கே வேறு யாரும் இருக்க இடமில்லை" எனக் கூறியவர், அன்னையை வணங்கி ஒரு வரம் கேட்டார்:

"அன்னையே! பித்ருக்களின் கடனை அடைப்பதற்காக, நான் எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்ந்து, முன்னோர்களுக்கு உண்டான சிரார்த்தாதி கர்மாக்களை செய்யும்படி, தாங்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும்".

சீதாதேவி புன்முறுவல் பூத்து, "ஆஞ்சநேயா! உன் விருப்பப்படியே நடக்கும்"என ஆசி வழங்கினார். அதைக் கேட்டு மகிழ்ந்த ஆஞ்சநேயா் கைகளை உயரே தூக்கியபடி "ஜெய் சீதாராம்" என முழங்கினார்..

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

Friday, July 2, 2021

பிறந்த ஒரு வருடத்துக்குள் மொட்டை அடிப்பது ஏன்?

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. 

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். 

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். 

.......