Friday, August 30, 2024

செவ்வாய்க்கிழமைகளில் இவைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது.

*செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?*
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள்.
இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். 
ஆனால் நம்மில் பலர் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருகிறோம்.
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. 
இந்நாளில் செலவு செய்யவோ,கடன் கொடுக்கவோ கூடாது .
செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். 
இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள். வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் .
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். 
இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
 செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. 
இதற்கு   ஜோதிடகாரணத்தின் படி... இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.
செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறார். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும். 
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளாக மற்றொரு ஜோதிட குறிப்பு கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாககூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்
 இந்த ஜோதிட குறிப்புகள்  பற்றி  ஆராய்ச்சி செய்து நிரூபிக்கபட்டுள்ள விபரம் எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருவதால் நாமும் இதை பின்பற்றலாமே!
நண்பர்களுக்காக செவ்வாய் கிழமை சிறப்பை பற்றிய  கூடுதல் தகவல்:
பெயர், புகழ், செல்வம் மேம்பட  செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய புனித நூல்கள் கூறும்
எளிய ரகசிய பரிகாரம்
இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் காரியங்களும் நன்மையாகவே அமையும்.

Thursday, August 29, 2024

எம தீபாவளி என்றால் என்ன? அதைப் பற்றி தெரிந்துகொள்ளுவோம்

தீபாவளி ...!!.. எம தீபாவளி...!!

தீபாவளிக்கு முந்தய நாள் எம தீபாவளி.

இந்த பண்டிகை நமக்கு மட்டும் அல்ல...எம தர்ம ராஜனுக்கும் மிகவும் பிடித்த பண்டிகை என இதிகாசங்கள் சொல்கிறது.

சூரியனின் புத்திரன் யம தர்ம ராஜன் 

சனியின் மூத்தவர் மட்டுமல்ல சனிக்கு அதிதேவதையும் கூட.

யமதர்ம ராஜனை வழிபடுபவர்களை சனி பாதிப்பதில்லை..

யமுனா தேவியின் சகோதரம் மற்றும்  ஞானத்தின் திறவு கோல் இவரே!

தர்மத்தை நிலை நாட்டி மோட்சத்துக்கு வழி காட்டுபவர்.

நம் கர்மவினைகள் தெரிந்தவரும் அதை அழிப்பவரும் ஆவார்.

எளிதில் நம்மை வீழ்த்துபவர், நம் நிழல் போல் நம்முடன் பயணம் செய்பவர்,

நம் முன்னோர்களுக்கு வழிகாட்டி..!!

 இதை மனதில் இருத்திக் கொண்டு மேலே படியுங்கள்...!

தமிழ் நாட்டில் தீபாவளி திருநாள் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

ஆனால் வட மாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாள் பண்டிகையாகக்  கொண்டாடுகிறார்கள்.
 

திரயோதசி திருநாள்:   தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று  நம்  வீட்டுக்கு மகா லட்சுமி வருவதாக ஐதீகம். 

அவளை, வரவேற்கும் விதமா வீடுகளில் தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம்.

 இந்தத் திருநாளை ஒரிசாவில், 'தன திரயோ தசி' என்ற பெயரில் ஆராதிக்கிறார்கள்.

 திரயோதசி தினத்தன்று  தங்களது வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.

 மஹாளய பட்ச நாட்களில்  பித்ரு லோகத்தில்   இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லி நமக்கு தெரியும்.

அப்படி வருபவர்கள்  தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு மீண்டும் திரும்பி செல்வதாகவும் சாஸ்திரம் உரைக்கிறது.

அப்படி திரும்பி போகின்ற பித்ருக்களுக்கு  வழி தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்  தீபம் ஏற்ற சொல்லி இதிகாசங்கள் உரைக்கின்றன .

 இந்த தீபத்தை வீட்டின் உயரமான இடங்களில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. 

வீட்டில் வழக்கமாக விளக்கோடு சேர்த்து ஒரு அகல்தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றினாலே போதுமானது. 

 அதுவே, எம தீபம்.....!!..

 இதை உங்கள் வீட்டிலும் , உங்கள் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் ஏற்றலாம்.

 இப்படி தீபம் ஏற்றுவதினால்  விபத்துகள், திடீர் மரணங்கள் சம்பவிக்காது. நோய் நொடி அண்டாது என்பது நமது இந்து சாஸ்திர நம்பிக்கை.

இரண்டாவது நாள் தீபாவளித் திருநாள்.

 இந்த நாளில், வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து, அதிகாலை நீராடி, புத்தாடைகள் அணிந்து தங்கள் குல வழக்கப்படி பூஜைகள் செய்வர். 

சிலருக்கு இது விரத நாட்களும் கூட...

 மூன்றாம் நாளில் விநாயகர், சரஸ்வதிதேவி மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன், வணிகர்கள் புதுக்கணக்கும் எழுதுவர். 

சில இடங்களில், கேதார கௌரி விரதமும் லட்சுமி குபேர பூஜையும் செய்வர். 

நான்காம் நாளில் இந்திரன் பெய்வித்த பேய் மழையிலிருந்து கோகுலவாசிகளை, பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக கொண்டாடப்படுகிறது.

சிலர் இந்த தினத்தை, புதுவருடப் பிறப்பாகவும் கொண்டாடுவர். 

ஐந்தாம் நாளில் 'எம துவிதா'வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். 

 'பால்பிஜி' ன்னும், 'பையாதுஜ்'ன்னும் போற்றப்படுது இந்தத் திருநாள். 

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை திதி அன்றைக்கு  தன் சகோதரி 'எமி'யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். 

அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூட்டி, திலகமிட்டு அன்புடன் வரவேற்றாள் சகோதரி எமி.

 இருவரும், ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் பாசத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

 அப்பொழுது  எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால்  திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாது’’ என்று  வரம் தந்தாராம்!

 அதனால்தான்,  எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவது வழக்கம். 

 சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என புராணங்கள் சொல்கின்றது.

அதனால், தீபாவளியை மட்டுமல்லாமல்  அதோடு சேர்த்து  எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய நாட்களிலும் தீபம் ஏத்தலாம்.

கீழே உள்ள யம தர்ம ராஜாவுக்கு உண்டான மந்திரத்தை இந்த ஐந்து நாட்களும் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

ஸ்ரீ யமாய நம:

யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

1. பரணி, மகம், சதயம் நக்ஷத்திரங்களில் பிறந்தவவர்கள் யம தீபம் ஏற்றுவது அதிக சிறப்பு. 

2. யமனை அதிதேவதையாக கொண்ட சனைஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள் மற்றும் சனி தசா நடப்பில் உள்ளவர்கள் / கோச்சார சனியால் பாதிப்புக்கு உண்டானவர்கள் யம தீபம் ஏற்றுவது நல்ல பலன்களை தர வல்லது.

3. ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள் / ஜனன ஜாதகத்தில் சனி வக்கிரம் பெற்றவர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சுய ஜாதகத்தில் சூரியன் + சனி சேர்க்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

6. ஜனன கால ஜாதகத்தில் அஸ்வினி , மகம் , மூலம், திருவாதிரை , சுவாதி , சதயம் நட்சத்திரங்களில் சனி நிற்க பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றுவது மிகவும் உன்னதம். 

அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம்.

எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

முன்னோர் ஆசிகள் முழுமையாக கிடைக்கப் பெருவீர்கள்.

செய்தொழில் முன்னேற்றம் காணும்.

திருமணத் தடைகள் விலகும், 

சொத்துகள் சேரும். 

லஷ்மி கடாட்ஷம் பெருகும்.

வாழ்வில் அனைத்து  தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

முக்கியமாக இந்த ஐந்து நாட்களும் அசைவம் தவிர்ப்பது சகல சௌபாக்கியங்களையும் உங்கள் இல்லம் கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்த்துக்கள்...!!!

Tuesday, August 27, 2024

வில்வத்தை எப்படி சிவபெருமானுக்கு பயன்படுத்த வேண்டும்.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாத பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி , அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் விவாதப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பசைக்கு தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

பழத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூசை செய்யும். உயர்ந்த வில்லம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யும்.

அவ்வளவு புனிதமானது, சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது

நம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் (திருவமுது செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்கள் வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்

இம் மரத்தின் காற்றை பகிர்ந்தால் நல்லது அதன் நிழல் நமது சரேத்தில் பட்டாலோ அதிக சக்தி கிடைக்கும்.

சிவனுக்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் (சிவபெருமானின் திருவருளை கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வ மரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்,

வீட்டில் வில்வமரம் வைத்து பார்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எம பயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்பர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதி வைத்து பயன்படுத்துவது மேலான செய்வாகக் கொள்ளப்படுகிறது

வில்வம் பறிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், இவ்வாறு பறிக்கும் போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் (மானசீகமாக நினைத்து எண்ணிக் கொண்டு இந்த கலோகத்தைச் சொல்ல வேண்டும்

நமஸ்தே பில்வதரவே ப்ரீபலோதய ஹேதவே ஸ்வர்காபவர்க ரூபாய் நமோ மூர்த்தி தர யாத்மனே எம்--ரவிங் வைத்ய அம்பஸ்ய கருணாநிதே அர்சனார்த்தம் இபனாமி த்வாம் த்வத் பத்ர ததாமஸ்லா மகே

பொருள் விளக்கம்

போக மோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்கு காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

வில்வ மரம்! பிறப்பு இறப்பாகிற வியத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சாம்பசிவன் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளிாடுக்கிறேன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து

பிறகு இலையை பறிக்க வேண்டும்.

வில்ல இதழின் மருத்துவ குணங்கள்

வெற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை

"சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர்

வில்வ இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர் கண் பார்வை சிறப்பாக அமையும் மூக்கடைப்பு சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் பல்வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்றவற்றால் அங்தியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்

கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும் தோல் மீது பரிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை,

Sunday, August 25, 2024

காளிகாம்பாள் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீகாளிகாம்பாளை மனம் குளிர வணங்கி இன்றும் என்றும் நன்நாளாய் மாற்றிடுவோம்🙏 🌹 1677 ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வணங்கி வழிபட்டு சென்ற, சென்னை காளிகாம்பாள் கோயில் பற்றிய சில தகவல்கள்...

1.காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.

2. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.

3. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.

4. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.

5. காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.

6. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.

8. காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.

9. ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.

10. காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

11. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.

12. அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.

13. காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.

14. காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் “சொர்ணபுரி” என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

15. நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.

16. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

17. பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.

18. இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.

19. காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20. இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

21. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

22. இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

23. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.

24. இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.

25. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

26. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

27. இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

28. இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.

29. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.

30. இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது.

31. இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி.

32. காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

33. இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.

34. “உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.

35. இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.

36. வசந்த நவராத்திரியை முன்னிட்டு கடந்த 31.3.2014 முதல் 8.4.2014 வரை குங்கும லட்சார்ச்சனை நடந்தது. இந்த குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

37. காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

38. கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது.

39. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமாணவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

40. காளிகாம்பாலுக்கு “நெய்தல் நில காமாட்சி” என்றும் ஒரு பெயர் உண்டு.

41. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது.

42. இந்திரன், குபேரன், வருணன், வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கீரேசர், புலஸ்தியர், விராட புருஷன் விஸ்வகர்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

43. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

44. இத்தலத்துடன் தொடர்புடைய சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகள் கோவிலில் அதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

45. இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

46. சிவனுக்கும், பார்வதிக்கும் ஏற்பட்ட ஊடலை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் முடிந்து சிவன்-பார்வதி திரும்பி வரும்போது, ஊடல் உற்சவம் நடத்தப்படுகிறது.

47. விராட புருஷ விஸ்வகர்மா சன்னதியில் வழிபடும் போது “ஓம் தேவ தேவ மகா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம” என்று சொல்லி வழிபாடு செய்யலாம். 48. இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன.

49. இத்தலத்தில் மொத்தம் 33 பஞ்சலோக சிலைகள் உள்ளன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் இதை பதிவு செய்துள்ளனர்.

50. இந்த கோவில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும், எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை.

51. தினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

52. அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும்.

53. இத்தலத்தில் பக்தர்கள் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

54. சமீபத்தில் இத்தலத்துக்காக அருகில் உள்ள மூன்று மனைகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் வாங்கப்பட்டன. அந்த இடத்தில் தற்போது ஆலய விஸ்தரிப்புப் பணி நடந்து வருகிறது.

55. தினமும் இத்தலத்தில் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

56. மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் இத்தலத்தில் கோலாகல பூஜைகள் நடத்தப்படும். அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும்.

57. இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

58. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகிளல் இருந்தும் பலர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

59. காளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

60. சன்னதி முகவரி :
212 ,தம்புச்செட்டி தெரு, மண்ணடி, ப்ராட்வே, சென்னை-600001.
ஓம்🙏 ஸ்ரீகாளிகாம்பாலே🌹துணை