Thursday, September 28, 2023

October month prediction

28/9/2023

1) the rain is going to start very soon and intensity of rain will be very very severe

2) three states will have very severe rains that is Karnataka Andhra Pradesh and Maharashtra

3) here afterwards we will be witnessing very very severe hot sun ☀️☀️

4) even though there is lot of rain here afterwards they will be very severe draught

5) in Chennai also three places will be submerged in water

6) gold and silver prices will come down

7) till next month fifth the share markets will be in downward swing

8) suddenly the prices of several goods will come down and due to this the entire world economy will fall down

9) American dollar will go up

10) one very big ice mountain will fall down

11) in foreign countries we will witness very severe snowfall

12) at the same time in foreign countries the heat waves will be very very severe and cruel

13) starting from the month of November there will be very severe snowfall

14) one whole country will be submerged in water

15) in two countries the entire flight services will be stopped

16) American president will have health problems

17) China will witness very severe rain

18) China will witness very big landslide

19) China will witness several big big problems

20) there is going to be some problems in middle East countries

21) Muslim countries will witness severe price rice and due to this there will be lot of protests

22) entire North India with witness several protests 

23) one entire state will see lock down

24) in another state also there is going to be problems

25) in another state the military will be sent to bring peace in that place

26) due to public problem there is going to be protest in another state

27) in one country there is going to be big problems because of terrorist and due to this there will be visa problem

28) Bangalore and Mumbai will receive very high range and they will be lot of problems because of this

29) all the rivers will be flooded

30) in foreign countries where will be severe rain till 20th of next month

31) in Tamilnadu one woman politician will have very big problems

32) in Tamilnadu the political alliances will change.

28/9/2023

1) மழை வெகு சீக்கிரத்தில் ஆரம்பமாகும் இதுவரை யாரும் பார்க்காத அளவு மழை பெய்யும்.

2) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் மழையினால் மிகவும் பாதிப்புகள் அடையும் அது கர்நாடகா ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா 

3) இனிவரும் காலங்களில் இதுவரையில் பார்த்திராத அளவு வெயில் மிகவும் கொடுமையாக இருக்கும்

4) மழை பெய்தாலும் இனிமேல் எல்லா இடத்திலும் வறட்சித் தலைவிரித்தாடும்.

5) சென்னையில் மழையினால் மூன்று இடங்களில் பிரச்சனை ஆகும்

6) தங்கம் வெள்ளி விலை குறையும்

7) அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பங்கு சந்தைகள் மிகவும் வீழ்ச்சி அடையும்.

8)திடீரென்று சில பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். இதனால் உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்

9) அமெரிக்க டாலர் எதிர்பார்க்காத அளவு ஏறிவிடும்

10) மிகப்பெரிய பனிமலை ஒன்று உடைந்து விழும்

11) வெளிநாடுகளில் இதுவரை பார்க்காத அளவு பனி மழை பொழியும்.

12) அதே சமயம் வெளிநாடுகளில் வெப்ப சலனம் மிகவும் கொடுமையாக இருக்கும்

13) நவம்பர் மாதத்தில் இருந்து பனிமழைகள் மிகுதியாக ஆரம்பித்து விடும்

14) ஒரு நாடே தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது

15) இரண்டு நாடுகளில் விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்படும்

16) அமெரிக்க அதிபருக்கு உடல் ரீதியாக பிரச்சனை ஏற்படும்

17) சீனாவில் மிகப்பெரிய மழை பெய்யும்

18) சீனாவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும்

19) சீனாவில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்

20) மத்திய கிழக்கு நாடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படும்

21) முஸ்லிம் நாடுகளில் விலைவாசி பிரச்சனைகள் ஏற்படும் இதனால் அங்கு பலவிதமான போராட்டங்கள் நடக்கும்

22) வடமாநிலங்களில் பலவிதமான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் ஏற்படும்

23) ஒரு மாநிலம் முழுவதும் கடையடைப்பு ஏற்படும்

24) இன்னும் ஒரு மாநிலத்தில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்

25) இன்னும் ஒரு மாநிலத்தில் அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி அங்கு அமைதி கொண்டு வர முயற்சி செய்யும்

26) மக்களுடைய  பிரச்சனையினால் மற்றொரு மாநிலத்தில் பெரிய குழப்பங்கள் ஏற்படும்

27) ஒரு நாட்டில் தீவிரவாதிகளால் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படும். அதனால் அந்த நாட்டில் விசா பிரச்சனைகள் ஏற்படும்

28) மும்பை மற்றும் பெங்களூரில் மழையினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்.

29) எல்லா நதிகளும் நிரம்பி வழியும்

30) வெளிநாடுகளில் அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை மிகப்பெரிய மழைகள் பெய்யும்.

31) தமிழ்நாட்டில் அரசியலில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

32) தமிழ்நாடு அரசியல் கூட்டணியில் பெரிய மாற்றங்கள் வரும்

Tuesday, September 26, 2023

September and October prediction

23/9/2023

1) இன்னும் நான்கு நாட்களில் மழை ஆரம்பிக்கும் சென்னையில் இரவு நேரங்களில் மிக பலத்த மழை பெய்யும்

2) ஒரு வாரம் கழித்து இரண்டு புயல்கள் உருவாகும்.

3) கடலோரப் பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும் கோயம்புத்தூர் திருச்சி ஆகிய இடங்களில் மழை மிகவும் அதிகமாக இருக்கும்.

4) தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுப்பார்கள்.

5) சென்னையில் மூன்று இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்

6) வட இந்தியாவில் மறுபடியும் ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

7) மணிப்பூரில் மறுபடியும் ஒரு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

8) சென்னையில் அரசியல் குழப்பங்கள் ஏற்படும்

9) தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒரு பெரிய போராட்டத்தை நடத்துவார்கள்

10) ஆந்திரா முதலமைச்சருக்கு ஒரு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

11) ஆந்திராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

12) ஒரு பழம் பெரும் நடிகருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.ஒரு பெரிய ஊர்வலம் போல் போவார்கள் 

13) கர்நாடக அரசியலிலும் பெரிய குழப்பங்கள் வரும் அங்கு ஒரு அமைச்சருக்கு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

14) ஒரு வெள்ளையர் நாட்டில் மிகப்பெரிய வெள்ள அபாயங்கள் ஏற்படும்

15) மகாராஷ்டிராவில் மிகப் பெரிய அளவில் வெள்ள சேதங்கள் ஏற்படும்.

16) கர்நாடக எல்லையோர பகுதிகளில் மிகப்பெரிய வெள்ள அபாயங்கள் ஏற்படும்

17) ஒரு விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கும் பொழுது பிரச்சனைக்கு உள்ளாகும் மேலும் அதே விமானம் தரையிறங்கும் போதும் பிரச்சனைக்கு உள்ளாகும்

18) அமெரிக்க டாலரின் மதிப்பு மிகவும் அதிகமாகிவிடும்

19) தங்கம் வெள்ளி விலை இறங்கி ஏறும்

20) அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பங்குச் சந்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

21) அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை ஒன்று வரும்

22) உலக வங்கி ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்றை சொல்லும் இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்

23) ஒரு முஸ்லிம் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்.

24) பெட்ரோல் டீசல் விலை மிக மிக அதிகமாகிவிடும்

25) அடுத்த மாதம் பணக்கார பட்டியலில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரருக்கு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

26) இதன் மூலம் வட இந்தியாவில் ஒரு முக்கிய நடிகருக்கும் ஒரு முக்கிய நடிகைக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகும்

27) சீன அதிபருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும் அதை அவரே ஏற்படுத்திக் கொள்வார்

28) சில நாடுகள் சில குழப்பத்திற்கு ஆளாவார்கள் திடீரென்று அவர்கள் நாட்டின் பண மதிப்பு குறையும்

29) இந்தியாவிலும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்

30) ஒரு மாநிலம் முழுவதும் முழு அடைப்பு ஏற்படும்

31) இந்தியா கனடா இடையே உள்ள பிரச்சனைகள் இரண்டு மாதங்களில் சரியாகிவிடும்

32) வேறு ஒரு நாட்டில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் மற்றும் உள்ளே செல்லாத நிலையில் ஏற்படும்

33) தற்போது சந்திரனில் நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளில் மேலும் பல முக்கியமான முடிவுகள் நமக்கு கிடைக்கும்

34) சூரியனின் ஆராய்ச்சிகளிலும் மிகப்பெரிய உண்மைகள் நமக்கு கிடைக்கும்

35) சூரியனிலிருந்து இதுவரை பார்த்திராத மிகப் பிரமாண்டமான போட்டோக்களை நாம் பார்ப்போம்

36) பூமிக்கு சூரியனின் உதவி எந்த அளவுக்கு முக்கியமானது என்று நாம் உணரப்போகின்றோம்

37) இந்தியா மற்றும் ஒரு கிரகத்திற்கு தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடங்கும்

38) இந்தியாவுடன் இன்னும் இரண்டு நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்

39) இந்தியாவில் இரண்டு முக்கிய தலைநகரங்கள் பம்பாய் மற்றும் பெங்களூர் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது

40) அமெரிக்காவில் இரண்டு பெரிய வங்கிகள் மூடப்படும்

41) மத்திய அரசில் உள்ள ஒரு முக்கிய அமைச்சருக்கு மிகப்பெரிய உடல்நலக் குறைவு ஏற்படும்

42) இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று வரும் அவர் கைது செய்யப்படுவார்.

43) வட இந்தியாவில் ஒரு பக்கம் கலவரமும் மற்றொரு பக்கம் போலீஸ் பிரச்சனையும் ஏற்படும்

44) இரண்டு கல்லூரிகளிலும் பிரச்சனைகள் ஏற்படும்

45) ஒரு முக்கிய ஆலயத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும் இதனால் பெரிய குழப்பங்கள் ஏற்படும்

46) அமெரிக்காவில் ஒரு முக்கிய தலைவரே கொல்லும் அபாயம் உள்ளது இதனால் அங்கு ஒரு நகரமே மிகப்பெரிய பிரச்சனைக்கு உள்ளாகும்

47) சண்டை நடந்து கொண்டு இருக்கும் இடத்தில் அந்த நாட்டின் அதிபரையே கொல்ல சதி நடந்து கொண்டு இருக்கிறது

48) இனிவரும் காலங்களில் மிகப்பெரிய வரட்சி ஏற்படும்

49) மிகப்பெரிய பணத்தட்டுப்பாருகள் ஏற்படும்

50) எல்லா அத்யாவசிய பொருட்களையும் மிகவும் அதிகமாக விலை கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்

51) நமது நாட்டில் பண வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வருவார்கள்

52) சென்னையில் கடல் அலைகள் மிகவும் உயரமாக இருக்கும் மறுபடியும் கடல் உள்வாங்கும்

53) கமலா ஹேரீஸ் வெகுவிரைவில் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்பார்

Tuesday, September 19, 2023

மஹாலக்ஷ்மி தங்கும் 108 இடங்கள் உங்களுக்கு தெரியுமா?

சிவாயநம நமசிவாய 

மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்

விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 108 இடங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம்.

இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 108 இடங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம்.

வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக் சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங் கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு.

நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.

Friday, September 15, 2023

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு.

🌹 விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு... 

🔥🌿☂️கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்!

☂️🌿  1. பால கணபதி

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

☂️🌿 2.  பக்த கணபதி

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்   

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான  பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿3.  ஸக்தி கணபதி

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

☂️🌿4.  ஸித்தி கணபதி

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿5.  உச்சிஷ்ட கணபதி

நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்
தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:

சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்
கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

நீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.

நான்கு  கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.

☂️🌿6. க்ஷிப்ர கணபதி:

தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்
பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

தந்தம், கற்பகக் கொடி,  பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.

☂️🌿7.விக்ந ராஜ (விஜய) கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿8.ஸ்ருஷ்டி கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும்,  , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.

☂️🌿9.ருணமோசந கணபதி:

பாஸாங்குஸௌ  தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான  ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய  திருவயிறு, ஆகியவற்றை உடையவரும்,  பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

☂️🌿10.டுண்டி கணபதி

அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

☂️🌿11.த்விமுக கணபதி

ஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர:
ரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:

தந்தம், பாசம், அங்குசம், ரத்தின பாத்திரம் தாங்கியவரும் ஹரியைப் போல்  நீல‌நிறத் திருமேனியுடன் கூடியவரும்  செந்நிற ஆடை; ரத்ன கிரீடம் தரித்தவரும் ஆன‌த்விமுக கணபதியைத் எந்நேரமும் துதிக்கிறேன்.

☂️🌿12.யோக கணபதி

யோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய
பாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:

யோகாசனத்தில் யோகபட்டம் தரித்த திருக்கோலத்தில் அழகு மிகுந்த தோற்றத்தில், இளஞ்சூர்யனைப் போன்ற திருமேனியுடன் நீல நிற ஆடை அணிந்து, பாசம், கரும்பு, அக்ஷமாலை, யோகதண்டம் தரித்து, அனுதினமும் அருள் பாலிக்கும் யோக விக்நேச்வரரைத் துதிக்கின்றேன்.

☂️🌿13. ஏகதந்த கணபதி

லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம்
ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே

பெருவயிறுடன் கூடியவராக,; நீல நிற மேனியுடன் பரசு, அக்ஷமாலை, லட்டுகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்த ஏகதந்த கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿14. ஹேரம்ப கணபதி

அபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா
ஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா

முன்னிரு திருக்கரங்களில், அபய வரத முத்திரைகளைத் தரித்தவரும், மற்ற கரங்களில், பாசம், தந்தம், அக்ஷமாலை, உலக்கை, கோடரி, மலர், மோதகம், பழம் ஆகியவற்றைத் தாங்கியவரும், சிம்மத்தை வாகனமாகக் கொண்டவரும், ஐந்து திருமுகங்களைக் கொண்டவரும்  ஹேரம்பர் என்ற திருநாமத்தை உடையவருமான ஹேரம்ப கணபதி நம்மைக் காக்க வேண்டும்.

☂️🌿15. ந்ருத்த கணபதி

பாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம்
பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்
பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் தாங்கிய கரங்கள்: மோதிரம் போல் வளைந்த துதிக்கை, பொன்னிறத் திருமேனி ஆகியவற்றுடன் கூடி, கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் அருளும் நிருத்த கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿16. ஹரித்ரா கணபதி

ஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும்
பாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச
பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம்

பாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம்
ஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே

மஞ்சள் நிறத் திருமுகத்துடன் ஐச்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவரும், பாசம், அங்குசம், மோதகம், தந்தம் தாங்கிய மஞ்சள் ஒளி வீசும் நாற்கரங்களை உடையவரும்,  பக்தருக்கு அடைக்கலம் ஈந்து தடைகளை அகற்றுபவருமான  - ஹரித்ரா கணபதியைத் துதிக்கிறேன்.

பாசம், அங்குசம், மோதகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், பொன்மயமான ஆசனத்தை உடையவரும் மஞ்சள் நிறத் திருமேனியை உடைய முக்கண்ணரும் பொன்னிறத்தினாலான பீதாம்பரத்தை தரித்தவரும் ஆன‌ஹரித்ரா கணபதியை வணங்குகிறேன்.

☂️🌿17. தருண கணபதி

பாஸாங்குஸாபூப கபித்த ஜம்பூ
பலம்திலாந் வேணுமபி ஸ்வஹஸ்தை:
த்ருத: ஸதாயஸ் தருணாSருணாப:
பாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, கரும்புத் துண்டு, முறித்த‌தந்தம் ஆகியவற்றைத் தாங்கிய எட்டுத் திருக்கரங்களும், இளங்கதிரவன் போன்ற செந்நிற மேனியும் கொண்ட தருண கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿18. வீர கணபதி

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான‌ வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

☂️🌿19. த்வஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர்
நிவ்ருத்யமாந கரபூஷண மிந்துவர்ணம்
ஸ்தம்பேரமாநந சதுஷ்டய ஸோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே ஸ தந்ய:

புத்தகம், அக்கமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவை நான்கு திருக்கரங்களையும் ஆபரணங்களாக அலங்கரிக்க, சந்திரனின் வண்ணத்தில் (வெண்ணிறத்தில்) ஒளிரும் திருமேனியை உடைவரும், கம்பம் போல் திடமானதும், சோபிப்பதுமான நான்கு திருமுகங்கள் கொண்டவரும் ச்ரேஷ்டருமான, த்விஜ கணபதியைத் துதிப்பவர் புண்ணியம் செய்தவராவார்.

☂️🌿20. விக்ந (புவநேச) கணபதி

ஸங்கேக்ஷூசாப குஸூமேஷூ குடாரபாஸ
சக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை:
பாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ
விக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:

சங்கு, கரும்பு வில், மலரம்பு, கோடரி, பாசம், சக்ரம், அங்குசம், பூங்கொத்து ஆகியவை தாங்கிய எண்கரங்களை உடையவரும், விரும்பத் தக்க அலங்காரங்கள் சூழ சோபையுடன் விளங்குகிறவரும், பொன்னிறத் திருமேனியை உடையவரும் ஆன  விக்ந விநாயகரைத் துதிக்கிறேன்.

☂️🌿21. ஊர்த்வ கணபதி

கல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண
தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க:
ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா
தேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே

செங்கழுநீர்ப் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு; தந்தத்தில் தாங்கிய கதை முதலியவற்றைக் கரங்களில்  தரித்த‌, பொன் போல மின்னும் திருமேனியை உடையவரும்,  பச்சை நிற திருமேனியளான தேவியை ஆலிங்கனம் செய்தவாறு அருட்காட்சி  தருபவருமான‌ ஊர்த்வ கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿22. லக்ஷ்மீ கணபதி

பிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந்
பாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர:
ஸ்யாமேணாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே
கௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத்

தந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம்
த்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே

திருக்கரங்களில் இருக்கும், கிளி, செம்மாதுளம்பழம், தாமரை, மாணிக்கமயமான  கும்பம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, வாள் ஆகியவை, ஜோதிப் பிரகாசம் போல் ஒளி வீச பிரகாசமான திருமுகத்துடன், நீல வண்ண ஆம்பல் மலரைத் தாங்கிய, வெண்ணிறத் திருமேனியை உடைய இரு தேவியரை இரு புறமும் அருகில் அமர்த்திக் கொண்டு, பொன்னிறத் திருமேனியை உடையவராக வரம் தரும் (வரத முத்திரை) கரத்துடன் விளங்கும் லக்ஷ்மீ கணபதியைத் துதிக்கிறேன்.

தந்தம், அபயம், வரதம், சக்ரம் ஆகியவை தாங்கிய  கரங்களுடையவரும்,  துதிக்கையில் பொற்கலசம் ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும்,, செந்தாமரை ஏந்திய லக்ஷ்மீயுடன் கூடியவருமான, பொன்னிற மேனியை உடைய லக்ஷ்மீ கணபதியை வணங்குகிறேன்.

☂️🌿23. மஹா கணபதி

ஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத்
ஆஸ்லிஷ்டம் ப்ரியயா ஸ பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே

சிறந்த யானை முகத்தை உடையவரும், பிறைச்சந்திரனை மணிமுடியில் தரித்தவரும், சிவந்த மேனியை உடையவரும், முக்கண்ணரும், தாமரையைக் கரத்தில் தாங்கிய அன்புக்குரிய தேவியை மடி மீதில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம் முதலியவற்றைக் கரங்களில் தரித்தவரும், துதிக்கையில் ரத்ன கலசம் தாங்கியருளுபவருமான‌ மஹாகணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿24. ஏகாக்ஷர கணபதி

ரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக
குஸூமயுதஸ்தும் திலஸ் சந்த்ரமௌலி:
நேத்ரைர் யுக்தஸ்த்ரிபி: வாமநகர
சரணோ பீஜபூரம் ததாந:
ஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ
நாகவக்த்ரோSஹி பூஷோ
தேவ:பத்மாஸநஸ்தோ பவது ஸூககரோ
பூதயே விக்நராஜ:

சிவந்த நிறப் பட்டாடை அணிந்து, சிவப்பு நிற மலர் மாலையுடன், செந்நிறத் திருமேனியும், பிறை அணிந்த் திருமுடியும் கூடியவராக,  முக்கண்களும், சிறிய அளவிலான (குள்ளமான) கரங்கள்-கால்கள் உடையவராக‌, மாதுளம்பழம், அங்குசம், பாசம், வரதம் கைகளில், யானை முகம், நாகம் ஆபரணம் ஆகியவற்றையும், ஐஸ்வர்யத்தின் அறிகுறியாகக் கிளியையும் கரங்களில் தாங்கியவராக, பத்மாசனத்தில் அமர்ந்து அருளும், ஏகாக்ஷர கணபதியாம் விக்னராஜனைத் துதிக்கிறேன்.

☂️🌿25. வர கணபதி

ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
ஹஸ்தே ச பாஸங்குஸௌ
பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
ஸாத்விந்து மௌலிம் பஜே
புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
பத்மோல்லஸத்தஸ்தயா
தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
பாத்ரோலஸத் புஷ்கரம்

செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத்  தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில்  ஏந்தியவர்.

☂️🌿26. த்ரயாக்ஷர கணபதி

கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம்,   தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான  த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு  உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿28. உத்தண்ட கணபதி

கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
பாஸஞ்ச சக்ராந்விதம்
கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
உத்தண்ட விக்நேஸ்வர:

நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான  உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿29. த்ரிமுக கணபதி

ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
தக்ஷே ததாந: கரை:
பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
வாமே ததாநோ முதா
பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
ஸத்கர்ணிகா பாஸூரே
ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
நாகாநந: பாதுந:

கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச,  பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.

☂️🌿30. ஸிம்ஹ கணபதி

வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
தக்ஷே விதத்தே கரை:
வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம்
ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
ஸங்கேந்துகௌர: ஸூப:
தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
பாயாதபாயாத் ஸந:

வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.

☂️🌿31. துர்கா கணபதி

தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
தந்தம் தக்ஷேவஹந் கரை:
வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
ஜம்பூத்யதத் கரை:
ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
துர்கா கணபதிர் முதே

உருக்கிய  பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு,  ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.

☂️🌿32. ஸங்கடஹர கணபதி

பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்

பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க,  வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும்,  பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கிறேன்.

கஜமுக பாத நமஸ்தே!

Saturday, September 9, 2023

செப்டம்பர் மாதம் உலக மற்றும் உள்நாட்டு கணிப்பு

9/9/2023

1) one new kind of virus will start studying in white people country and because of this people will be very much confused

2) with in a week time the rain will start and it will be more Karnataka Kerala and Andhra Pradesh

3) two cyclones are waiting

4) there is going to be lot of damages in Bangalore due to this rain

5) in Chennai the wind will be very severe and the rain also will be very much

6) the sea tides will be very high people should be very careful

7) in a white peoples Muslim country there is going to be a very big earthquake

8) this earthquake will be very high in magnitude and it will have very very bad effects on the people

9) in Chennai in a prominent place there is going to be a new kind of big problem.

10) one incident is going to happen for a CHILD and because of this there will be lot of mental agony.

11) there is going to be to incidents happening at the same time and because of this there will be lot of confusions

12) in Himalayan region there is going to be a very big mountain slide

13) places like Arctic and Antarctic the ice mountains will meltdown and because of this there is going to be very big problems.

14) the mother earth as become very very hot and due to this there is going to be severe rain one forest and one state will see lot of damages

15) for another 4 years continuously the heat will be very very severe and cruel

16) in a particular white people country are a Muslim country there is going to be a big crack in the land

17) all of a sudden all the essential commodities prices will go very very high

18) it seems like some commodities prices will look like coming down but suddenly all prices will go very very high

19) one particular country's oil export will come down and due to this the prices for petrol and diesel will go high and at the same time there will be a big scarcity for petrol and diesel

20) the G20 conference will be a very good success but initially there will be little confusions and due to this India's respect and honour will go very very high

21) the price of gold and silver will come down

22) there is going to be a big demand for silver

23) this month 24th are 28 the share markets will see a historical drop in the shares

24) after that the share market will see a steady growth.

25) there is going to be a very big problem for the very rich man

9/9/2023

1) ஒரு புதுவிதமான வைரஸ் நோய் ஒன்று உருவாகும் அது அதிகமாக வெள்ளையர் நாடுகளில் பரவும் இதனால் மக்கள் மிகவும் பீதிக்கு உள்ளாவர்கள்.

2) இன்னும் ஒரு வாரத்திற்குள் மிக நல்ல மழை பெய்ய ஆரம்பிக்கும் இந்த மழை கர்நாடகம் கேரளம் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக பெய்யும்

3) இரண்டு புயல் காத்துக் கொண்டு இருக்கிறது

4) இந்த மழையினால் பெங்களூரில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்

5) சென்னையில் காற்று மிகவும் பலமாக வீசும் அதே போல் மழையும் அதிகமாக இருக்கும்

6) கடல் கொந்தளிப்பாக இருக்கும் அதையும் நாம் பார்ப்போம்

7) வெள்ளையர்கள் இருக்கக்கூடிய ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்

8) இந்த நிலநடுக்கம் ஆனது இதுவரை நாம் யாரும் பார்த்திராத அளவு மிகவும் கொடுமையாக இருக்கும்

9) சென்னையில் முக்கியமான இடத்தில் இதுவரை பார்த்திராத ஒரு புதிய பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.

10) ஒரு குழந்தையின் சம்பவம் ஒன்று நடக்கப் போகிறது இதனால் மிகப்பெரிய மனக்குழப்பங்கள் ஏற்படும்.

11) இரண்டு பிரச்சனைகள் நடக்கப் போகிறது இரண்டும் ஒரே நேரத்தில் வந்து பெரிய குழப்பங்களை ஏற்படுத்தும்.

12) இமயமலை பகுதிகளில் இதுவரை பார்த்திராத அளவு மிகப்பெரிய மலைச்சரிவு ஏற்படும்

13) ஆர்டிக் மட்டும் அட்லாண்டிக் ஆகிய பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்.

14) பூமி மிகவும் வெப்பம் அதிகமாக உள்ளது இதனால் மழை வெள்ளம் வந்து ஒரு காடு ஒரு ஊரே அடித்து செல்லும் நிலை உள்ளது.

15) இன்னும் நான்கு வருட காலங்களுக்கு வெப்பம் மிகவும் கொடுமையாக இருக்கும்.

16) ஒரு வெள்ளையர் நாட்டில் அல்லது ஒரு முஸ்லிம் நாட்டில் பூமியில் மிகப்பெரிய பிளவு ஏற்படும்.

17) எல்லா பொருட்களின் விலைவாசிகளும் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மிக மிக அதிகமாக ஆகிவிடும்.

18) ஒரு சில பொருட்களின் விலை இறங்குவதைப் போல் இருக்கும் ஆனால் மறுபடியும் மிக மிக அதிகமாக சென்று விடும்

19) ஒரு நாட்டின் எண்ணெய் வர்த்தகம் மிகவும் குறைந்து அதனால் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடுகள் ஏற்படும்

20) ஜி 20 மாநாடு மிகவும் சிறப்பாக நடக்கும் ஆரம்பத்தில் ஒரு சிறிய சலசலப்பு இருக்கும். இதனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்

21) தங்கம் வெள்ளி விலை குறையும் அதன் பின்னர் தங்கம் வெள்ளி விலை மிகவும் அதிகமாக ஆகிவிடும்.

22) வெள்ளிக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு வந்துவிடும்

23) இந்த மாதம் 24 ஆம் தேதி அல்லது 28ஆம் தேதி வரலாறு காணாத அளவு பங்கு சந்தைகளில் மிகப்பெரிய வீழ்ச்சிகள் அடையும்

24) அதன்பின்னர் பங்கு சந்தைகள் ஏற்றத்தை காணும்

25) மிகப்பெரிய பணக்கார ஒருவருக்கு பிரச்சினைகள்  ஏற்படும்.

Thursday, September 7, 2023

புண்ணிய புரட்டாசியில் சிறப்பு அம்மாவாசை பதிவு.

#புரட்டாசியில்_வரும் 

அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. 

புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். 

அதாவது புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வருகின்ற பௌர்ணமிக்கு மறுநாள் ஆன ப்ரதமை திதி முதல் இந்த மஹாளய பட்சம் என்பது துவங்கும். 

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காணவரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.

இந்த 15 நாட்களும் சுப நிகழ்வுகளைத் தவிர்த்து முன்னோர்களின் நினைவாக அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. 

15 நாட்களும் செய்ய இயலவில்லை என்றாலும், அமாவாசை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். 

இதற்கு மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.

தானதர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலைமலையாகக் கிடைத்ததாம். 

ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் இதுதான் - அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் பெற்றவர்கள் யார் என்று அறிந்திராத காரணத்தால் தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களைத் தீர்க்கும் வகையில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாசை அதற்கு மறுநாள் ஆன ப்ரதமையையும் சேர்த்து மொத்தம் 16 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

மஹாளய பட்சத்தின் எல்லா நாட்களிலும் சிராத்தம், தர்ப்பணம் செய்வோரும் உண்டு. அவ்வாறு செய்பவர்கள் பிரதமை முதல் துவங்கி அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை வரை 16 நாட்கள் கடைபிடிப்பார்கள். 

அதாவது நமது இல்லத்திற்கு வந்து அமாவாசை நாள் வரை தங்கியிருந்த பித்ருக்களை அதற்கு மறுநாள் ஆன பிரதமை நாள் அன்று சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து பித்ருலோகத்திற்கு வழியனுப்பி வைப்பதாக ஐதீகம்.

இந்த மஹாளய பட்சத்தின் எல்லா நாட்களுமே பித்ருக்களுக்கு உகந்தவை என்றாலும் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களும் உண்டு. மஹாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, ஸன்யஸ்த மஹாளயம், கஜச்சாயை, சஸ்திரஹத மஹாளயம் என்று ஒருசில நாட்களை பஞ்சாங்கத்தில் பளிச்சென்று குறிப்பிட்டிருப்பார்கள். 

பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதை எமதர்மராஜன்.

பித்ரு லோகத்திற்கு அதிபதி ஆகிய எமதர்மராஜனின் ஜென்ம நட்சத்திரம் மஹாளய பட்சத்தில் இணைகின்ற நாள் மஹாபரணி என்று அழைக்கப்படுகிறது. 

அந்த நாளில் சிராத்தம் செய்யும் போது பித்ருலோகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடைகின்றன. 

பரம்பரையில் எவரேனும் சந்நியாசம் போயிருந்தால் அவர்களுக்கு உரிய நாள் ஆக ஸன்யஸ்த மஹாளயம் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

இது த்வாதசி திதி அன்று வரும். அன்றைய தினம் சிராத்தம் செய்யும்போது சந்யாசிகள் த்ருப்தி அடைகிறார்கள். 

ஆயுதத்தால் மரணம், விபத்தினால் மரணம் அல்லது தற்கொலை முதலான துர்மரணத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சதுர்த்தசி திதி அன்று வருகின்ற சஸ்திரஹத மஹாளய நாள் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது.

‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இந்த வாக்கியத்தை பலரும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். 

அதாவது தனது தாய் அல்லது தந்தைக்கு பிரதி வருடந்தோறும் வருகின்ற சிராத்தத்தை செய்யாமல் மறந்து போனவர்கள் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டால் போதும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறு, 

பெற்றோர்களுக்கு வருடந்தோறும் அவர்கள் இறந்த திதி அன்று கண்டிப்பாக சிராத்தம் செய்ய வேண்டும்.

மஹாளய பட்ச நாட்களில் இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, தகப்பனின் மற்றொரு மனைவியான ஸபத்னீ மாதா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன் (தாயின் சகோதரர்), மாமி (தாயின் சகோதரனின் மனைவி), தகப்பனின் சகோதரியான அத்தை, அவரது கணவர், தாயின் சகோதரியான சித்தி, அவரது கணவர், தன்னுடன் பிறந்த சகோதரன், அவரது மனைவி, உடன்பிறந்த சகோதரி, அவளது கணவர், தனது மனைவி, அவளது குடும்பத்தினரான மாமனார், மாமியார், மச்சினன், தான் பெற்ற பிள்ளை, மருமகள், தான் பெற்ற பெண், மாப்பிள்ளை, ஆசிரியர், சிஷ்யன், தன்னுடைய முதலாளி ஆகிய எஜமானன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இவர்களை காருணீக பித்ருக்கள் என்று அழைப்பார்கள். 

இந்த காருணீக பித்ருக்களின் வீட்டில் ஒரு நாள் அல்லது ஒரு வேளையாவது அவர்கள் கையினால் உணவு உண்டிருப்போம். 

ஒருவாய் தண்ணீராவது வாங்கிக் குடித்திருப்போம். 

இவர்களை நாம் பெரும்பாலும் மறந்துபோய்விடுகிறோம். 

இவர்களையும் நினைத்து சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வதையே மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு என்ற முதுமொழிக்கான உண்மையான பொருள் ஆகும்.

பிரதி மாதம் வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும். 

பிதுர்காரகன் சூரியனும், மாதுர்காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும் போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. 

பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.

ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். 

மஹாளய பட்சத்தில் வருகின்ற இந்த 15 நாட்களில் சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வதோடு ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதால் பித்ருலோகத்தில் உள்ளோர் த்ருப்தி அடைகின்றனர். 

பித்ருக்கள் த்ருப்தி அடைவதால் பூரண ஆயுள், நல்ல ஆரோக்யம், தர்மசிந்தனையுள்ள சந்ததி, அள்ள அள்ளக் குறையாத செல்வம், பூரணமான மன நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்று சாஸ்திரம் அறுதியிட்டுக் கூறுகிறது.

#திருச்சிற்றம்பலம்

Wednesday, September 6, 2023

நம் நாட்டின் சாதனைகள்

*🔺முதல் சாதனை :-* உலகின் சக்தி வாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியானது,,, இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது, அமெரிக்கா, ரஷ்யா நம்மை விட முன்னணியில் உள்ளன.

*🔺 இரண்டாவது சாதனை :-*
,,, ஜிஎஸ்டியின் மாதாந்திர வரி வசூல் 1.4- 1.5 லட்சம் கோடிகளைத் தாண்டியது,,,,, இதுதான்! ஒரு தேநீர் விற்பனையாளரின் பொருளாதாரம்

*🔺 மூன்றாவது சாதனை :-* புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில், அமெரிக்கா மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்தை அடைந்தது,,,,

*🔺 நான்காவது சாதனை :-*
2017-18ல் சூரிய சக்தி உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது, சீனாவும் அமெரிக்காவும் திகைத்து நிற்கின்றன

*🔺 ஐந்தாவது சாதனை :-*
,,, இந்தியாவின் வானம் தொடுகிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,,, இந்தியாவின் ஜிடிபி 8.2%, சீனாவின் 6.7% மற்றும் அமெரிக்காவின் 4.2%! இந்தியாவின் மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் என்று இப்போதும் சொல்வார்கள்.

*🔺 ஆறாவது சாதனை :-* ,
  நீர், நிலம் மற்றும் வானம்; மூன்று பகுதிகளிலிருந்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவிய உலகின் முதல் நாடு இந்தியா

*🔺 ஏழாவது சாதனை :-*
70 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஏழையாக காணப்படவில்லை, ஆனால் மோடி ஜி வந்தவுடன் பாகிஸ்தான் ஏழையாகிவிட்டது ,,,

*🔺 எட்டாவது சாதனை :-*
இதையும் படியுங்கள் ,,,,, ஒன்று புரியவில்லை,,, 2014ல் காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் ஏ. ஆஃப். ஆண்டனி, நாடு ஏழ்மையில் உள்ளது, ரஃபேலை விட, சிறிய ஜெட் கூட வாங்க முடியாது, ஆனால் மோடிஜி ஈரானின் கடனை அடைத்தார், ரஃபேல் ஒப்பந்தத்தை முடித்துவிட்டார், எஸ்-400 ஐயும் எடுக்கிறார்! எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் காலத்தில் நாட்டின் பணம் எங்கே போனது,,, ❓

*🔺 ஒன்பதாவது சாதனை :-* ,,,
ராணுவத்திற்கு குண்டு துளைக்காத ஸ்கார்பியோ பாதுகாப்பு கவசம் கிடைத்தது,,, ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோ கிடைத்துள்ளது.

*🔺 பத்தாவது சாதனை :-*
,,, இப்போது சொல்கிறேன், இந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி என்ன,,, பொருளாதாரத்தில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு தள்ளியது,,,

*🔺 பதினோராவது சாதனை :-* ,,, வாகன சந்தையில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி, 4வது இடத்தை பிடித்தது,,,

*🔺 பன்னிரண்டாவது சாதனை :-* ,,,, மின்சார உற்பத்தியில் ரஷ்யாவை பின்தள்ளி, 3வது இடத்தைப் பிடித்தது,,,

*🔺 பதின்மூன்றாவது சாதனை :-* ,,, *ஜவுளி உற்பத்தியில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தது,,,

*🔺 பதினான்காவது சாதனை :-* ,,, மொபைல் தயாரிப்பில் வியட்நாமை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது,,,

*🔺 பதினைந்தாவது சாதனை :-* ,,, எஃகு உற்பத்தியில் ஜப்பானை பின்தள்ளி, நம்பர் 2 ஆனது,,,

*🔺 பதினாறாவது சாதனை :-* ,,, சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது,,,

*🔺 பதினேழாவது :-* சாதனைகள்,,, எப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்த இந்துக்களிடையே தேசியவாதத்தை எழுப்பியது, உலகம் முழுவதும் உள்ள 125 கோடி இந்துக்கள் என்று ஒரு தேசம் இல்லை! இந்தப் பணியை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

*பயங்கரவாதிகள் ஒழிப்பு,,, 8 மாதங்களுக்குள், 230 பயங்கரவாதிகள் 72 மணிநேரத்திற்கு அருகில் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர்*
 
*தயவுசெய்து :--* 2 நிமிட நேரம் ஒதுக்கி, நாட்டின் நலன் கருதி இதைப் பகிரவும், *குறிப்பாக மோடி ஜி மீது நம்பிக்கையில்லாத மக்களுக்கு.

Tuesday, September 5, 2023

கடினமான எதிர் காலத்தை எதிர்கொள்ள இப்படி திட்டமிடலாம்.

*வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று*

*கொரானாவுக்கு பிறகு*

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள், அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

🚗 துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் - யு.ஏ.ஈ. ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

🚔 சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர்.

🚌 இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்க உள்ளார்கள்.

💰 எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும். 

💪 வேலை இழந்து வருபவர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான். 

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள். 

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் 

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன் பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாக வும் ஆகிவிடுவீர்கள். 

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான் .

12. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள் 

13. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

14. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள். 

15. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

*16. அவசியம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை  இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காசு கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் நமக்கு பிறகு நமது குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும்.*

17. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

18. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

19. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

20. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

21. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள்.
இதுவும் கடந்து போகும்.
கவனமாக இருக்கவேண்டும் . இது ஒரு சோதனைக்காலம்
சிக்கனமாக இருப்போம்
நாட்க்கள் கடந்து போகட்டும்.



...

Sunday, September 3, 2023

செப்டம்பர் மாத உள்நாட்டு, வெளிநாட்டு கணிப்புகள்.

1/9/2023
 
1) there is going to be a new kind of virus which is spread mainly in white people country

2) and because of this there is going to be a lot of confusion in two or three countries

3) there is going to be some announcement regarding this disease by next month

4) there is going to be a very big flood in a white people country. This flood will be very very severe

5) even in Tamilnadu there is going to be there very big rain and floods which we have never seen before

6) in Tamilnadu the rains will be full scattered but in one particular place there will be floods

7) places like Coimbatore Trichy and Ooty will receive heavy rains

8) the prices of vegetables will go very very high

9) one particular product price will go very very high

10) there is going to be very very scarcity for petrol and diesel

11) 2 or 3 very big companies manufacturing petrol and diesel will shutdown

12) starting from 10th of this month the problems in IT sector will increase

13) lakhs and lakhs of people working in IT sector will loose their jobs

14) there is going to be heavy damages in Karnataka and Kerala due to heavy rains

15) one important political leader will be admitted in hospital

16) one important film actor will suddenly die

17) one important temple chariot will be in a problem and due to the several people will be in problem

18) America will deploy a big bomb due to this there is going to be several problems

19) there is going to be problem near white House

20) several birds will die in a particular place

21) in Tamilnadu in three places where will be heavy damages due to rain and floods

22) starting from this month 20 there will be economic problems

23) we should be very careful in making investment in share markets till the end of this month

24) the new mission to the sun will reveal several new facts.and after this the government will send another rocket which will be a big success to us

25) all the scientist from world over will come to India including NASA

26) several politicians in Tamilnadu will have problems.


1/9/2023

1) உலகம் முழுவதும் ஒரு புதுவிதமான காய்ச்சல் உருவாகும் அது இரண்டு மூன்று வெள்ளையர் நாடுகளில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

2) இதனால் இரண்டு மூன்று நாடுகளில் பல குழப்பங்கள் ஏற்படும்

3) அடுத்த மாதம் இதைப் பற்றி விளக்கி கூறுவார்கள்

4) ஒரு வெள்ளையர் நாட்டில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும்

5) தமிழ் நாட்டில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும்

6) தமிழ்நாடு முழுவதும் பரவலாகவே மழை பெய்யும் ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மிகப்பெரிய மழை வெள்ளம் வரும்

7) கோவை திருச்சி ஊட்டி ஆகிய இடங்களில் மழை அதிகமாக இருக்கும்

8) இதுவரை பார்க்காத அளவு காய்கறிகள் விலை ஏறிவிடும்

9) ஒரு முக்கியமான பொருளின் விலை கிடுகிடுவென ஏறிவிடும்

10) பெட்ரோல் டீசலுக்கும் மிகப் பெரிய தட்டுப்பாடுகள் வரும்

11) உலகின் மிகப்பெரிய பெட்ரோல் டீசல்  தயாரிக்கும் இரண்டு மூன்று கம்பெனிகள் மூடிவிடும்

12) இந்த மாதம் பத்தாம் தேதியிலிருந்து ஐ.டி கம்பெனிகள் பிரச்சனை உள்ளாகும்

13) உலகம் முழுவதும் ஐ.டி கம்பெனியில் வேலை செய்பவர்கள் லட்சக்கணக்கில் வேலை இழப்பார்கள்

14) கர்நாடகா கேரளாவில் மழையினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்

15) ஒரு முக்கிய அரசியல் தலைவர் ஆஸ்பத்திரிக்கு செல்வார்

16) ஒரு முக்கிய நடிகர் எதிர்பாராத விதமாக இறப்பார்.

17) ஒரு முக்கிய கோவிலின் தேரில் பிரச்சனை ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள்.

18) அமெரிக்கா ஒரு பெரிய ஏவுகணை ஏவும் அதனால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்

19) அனைவருக்கும் பிரச்சினை ஏற்படும் அமெரிக்கா அதிபர் இருக்கும் இடத்திலேயே பிரச்சினைகள் உருவாகும்.

20) பல பறவைகள் ஒரே இடத்தில் இறப்பதை பார்ப்போம்

21) தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மழை வெள்ளம் ஏற்படும்.

22) இந்த மாதம் இருபதாம் தேதியிலிருந்து பணவீக்கம் ஏற்படும்

23) இந்த மாதம் கடைசி வரை பங்குச்சந்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

24) இப்போது சூரியனுக்கு அனுப்பும் ராக்கெட் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை வெளியிடும்.இதன் பின்னர் அனுப்பும் அடுத்த ராக்கெட் மிகப்பெரிய வெற்றியை அடைவோம் 

25) உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் இங்கே வருவார்கள் நாசா விஞ்ஞானிகள் இங்கு வருவார்கள்.

26) தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படும்