Monday, December 16, 2024

பிள்ளையாரைப் பற்றி 100 அரிய தகவல்கள்.

❣️விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். அந்த வகையில் விநா
யகர் பற்றிய 100 அரிய குறிப்புகளைளை தொகுத்து இன்றைய நாளில் சித்தர்களின் குரல்.  முக பக்கத்தில் பகிர்கிறேன்.....

(1) விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

(2) விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

(3) யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

(4) அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

(5) விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

(6) கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

(7) விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

(8) முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

(9) சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.

(10) விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

(11) விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

(12) விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

(13) புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

(14)  பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

(15)  ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

(16)  விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

(17)  தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

(18)  கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

(19)  சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

(20)  திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

(21) சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

(22)  தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

(23)  கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

(24)  வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

(25)  ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

(26) வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

(27)  திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

(28) கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

(29) விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

(30) பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

(31) ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

(32)  ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

(33)  சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.

(34)  முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

(35)  சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

(36)  வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

(37)  நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

(38)  அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

(39)கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

(40)  குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

(41)  திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

(42)  நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

(43)  ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

(44)  இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

(45)  வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

(46)  பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

(47)  தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

(48)  வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

(49)  அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.

(50)  "வி" என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

(51(  கணபதி எனும் சொல்லில் "க" என்பது ஞானத்தை குறிக்கிறது. "ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. "பதி" என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.

(52) விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

(53) விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

(54) சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

(55)  மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.

(56) தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

(57)  விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

(58) விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

(59) திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

(60) தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

(61) விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

(62)  மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

(63)  விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

(64) தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

(65) கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

(66) ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

(67)  வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

(68) புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

(69) திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

(70)  நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

(71) ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

(72)  ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

(73)  மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

(74) யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

(75) தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

(76)  கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

(77)  விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

(78)  கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள "நேத்ர கணபதி" எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

(79) அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் "தான்தோன்றி விநாயகர்" எனப்படுகிறார்.

(80) சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

(81)  திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

(82)  ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

(83)  திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

(84)  தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

(85)  நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

(86)  பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

(87)   திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.

(88)  விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.

(89)  சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

(90)  ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

(91)  நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

(92)  நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

(93)  திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

(94) ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

(95) நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(96) மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

(97)  திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

(98)  ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.

(99)  ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் களை தான் அவர் வணங்கி வந்தார்.

(100)  புண்ணியத் தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.

Wednesday, December 4, 2024

கார்த்திகை தீபம் சிறப்பு பதிவு

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்  !

திருக்கார்த்திகை தீபம் அன்று திரு ஜோதி ஏற்றுவது யார்?
அந்த உரிமை எப்படி கிடைத்தது? 
தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை
பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

திருவண்ணாமலை

.மெய்யுருக, விழியில் நீர்பெருக, உயிர் கசிந்துருக காணும் மெய்நிலையாம், அடி முடி காணாத அருட்பெரும் ஜோதியை தரிசிக்க முற்பிறவி பயன் வேண்டும். 

ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்!நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர். 

திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் அவர்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

இறைஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது?

பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்துகொள்வார்கள். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர்.

அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜனை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார். 

கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

தற்போது அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றும் பருவதராஜகுல மரபைச் சேர்ந்த அடியார் கூறியது திருவண்ணாமலை தாமரைக்குளம் பகுதியில் வசிக்கும்  5 வழிமரபை சேர்ந்த குடும்பத்தினர், சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை செய்கிறோம்.

தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் 5 பேர், ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருப்போம். தீபம் ஏற்றும் அடியார்க்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து,  மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் எங்களிடம் வழங்குவார்கள்.

மேளதாளம் முழங்க எங்களை மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டுசெல்வோம். மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இடுவோம். அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்போம்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிதருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே எங்கள் மரபைச் சேர்ந்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் நாங்கள் மகா தீபத்தை ஏற்றுவோம்.

மகா தீபத்தை ஏற்றும் அந்த நொடிப்பொழுது, நாங்கள் இறைவனின் திருவடியை பற்றியிருப்பதைப்போல உணர்வோம். எங்களுடய கண்களிலும் உணர்வுகளிலும் தீபம் மட்டுமே நிறைந்திருக்கும். ‘‘மகா தீபத்தை ஏற்றும் சுடரை, சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றுச்செல்லும் நாங்கள், மலை மீது ஏறுவதற்கு முன்பு பாவ பிராயச்சித்தம் வேண்டுதல் நடத்துவது வழக்கம். 

திருவண்ணாமலையே இறைவன். எனவே, மலை மீது கால் வைத்து ஏறிச்செல்வது பெரிய பாவம். ஆகவே, மலையடிவாரத்தில் உள்ள குகை நமசிவாயர் கோயில் அருகில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருப்பாதத்தின் முன்பு ‘மூவுலகை காக்கும் ஈசனே, உமது திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது பயணிக்கிறோம். எங்களை மலை மீது அனுமதியும்’ என்று உளமாற பிரார்த்தித்துக்கொண்ட பிறகே எங்கள் பயணம் தொடரும்.

தீபம் ஏற்றும் போது, எங்கள் மரபைச் சேர்ந்தவர்கள் சிவபுராணம் பாடிக்கொண்டிருப்போம். சிவனுக்கு உகந்ததான சங்கொலி முழங்குவோம். மகா தீபம் மலை மீது தொடர்ந்து
11 நாட்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு நாளும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான கற்பூரம் மற்றும் திரியை நாங்கள் பெற்றுச்செல்வோம்.”

மகா தீபம் ஏற்றும்போது
மலை உச்சியில் முழங்கும் பாடல்
பருவத ராஜகுல மரபினர் மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது,
 அவர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றி, 
விண்ணதிர முழங்கும் பாடல் வரிகள்:

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஜோதியாய்
மலைமீது நிற்கும் அண்ணாமலை போற்றி..!
உண்ணாமுலை அம்பிகைக்கு இடபாகம் அளித்து

அர்த்தநாரீஸ்வரராய் நிற்கும் அண்ணாமலை போற்றி..!

எங்கும் எப்போதும் எல்லோரையும் கைவிடாமல்
காத்து அருள்புரியும் அண்ணாமலை போற்றி..!

ஞான தபோதனரை வாவென்று அழைத்து
வாழ்வளித்து காக்கும் அண்ணாமலை போற்றி..!

எங்கிருந்து நினைத்தாலும் நினைத்தபோதே

முக்திஅருளும் அண்ணாமலை போற்றி..!

மாலும் நான்முகனும் முயன்றும் அடி முடி
அறியாமல் நின்ற அண்ணாமலை போற்றி..!

ஓங்கி வளர்ந்து ஒளியாய் காட்சியளித்து
காத்தருள் புரியும் அண்ணாமலை போற்றி..!

வள்ளால ராஜாவுக்கு மகனாய் தோன்றி அண்ணலும்

அம்மையுமாய் காட்சி அளிக்கும் அண்ணாமலை போற்றி..!

புண்ணியம் ஒன்று செய்தால் பலவாக வெளிபட்டு
அருள்மழை பொழியும் அண்ணாமலை போற்றி..!

விட்டிடில் கஷ்டமாம் விட்டிடாது உனை

உயிர் விட்டிட அருள்புரி அண்ணாமலை போற்றி..!

தேவரும், அடியாரும் தொழும்போது
துணையாகும் அண்ணாமலை போற்றி..!

மலையாய் வடிவுகொண்ட மகேசன்
தீபமாய் எழுந்தருளும் அண்ணாமலை போற்றி..!

மலையுருவாய் சிவவுருவாய் எழுந்தருளி
எளியார்க்கு காட்சிதரும் அண்ணாமலை போற்றி..!

அண்ணாமலையாருக்கு அரோகரா !

Friday, November 29, 2024

வீட்டில் கடிகாரம் மாற்றுவது இவ்வளவு இருக்கிறதா.

*எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும். உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.* 🛑🛑

கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாகவும் மாறுவதற்கு கூட, இந்த கடிகாரம் ஒரு காரணமாக இருக்கின்றது. இது நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. நம் வீட்டில் வரக்கூடிய கஷ்டத்திற்கு நாம் கடிகாரம் மாட்டியிருக்கும் திசையும், கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் வீட்டில் வறுமை நீங்கும். குறிப்பாக அது எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும், எந்த வடிவத்தில் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட பல குழப்பங்களுக்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சுழல்கின்ற காலச்சக்கரத்தை நமக்கு வலியுறுத்துவதே இந்த கடிகாரம் தான். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைக்க வில்லை. வானத்தை பார்த்து, வானத்திலுள்ள சூரியனைப் பார்த்து தான் நேரத்தை கணித்தார்கள். அவர்களுடைய முன்னேற்றம் தடைபடாமல் இருந்ததற்கு வீட்டில் கடிகாரம் இல்லாததும் ஒரு காரணம். சரி, இப்போது நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க என்ன செய்வது?

முதலில் உங்களுடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசை. வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்த வாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. பொருளாதார சூழ்நிலை உயர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு திசை சுவற்றில் மாட்டப்படும் கடிகாரம் வட்ட வடிவில் இருப்பது நமக்கு இன்னும் அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் நோய்நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். குடும்பத் தலைவனின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். அப்போது கடிகாரம் மேற்கே பார்த்தவாறு இருக்கும். கிழக்குப்பக்கம் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது.

கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம். சிலபேரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சத்தம் எழுப்பும் கடிகாரம் இருக்கும் அல்லவா? அந்த கடிகாரம் இருந்தால் அதை கிழக்குப்பக்கம் மாட்டி வையுங்கள். உங்களுடை ய வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்களால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை. வடக்குப் பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாற்ற முடியவில்லை, என்றால் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் தெற்குப் பக்கத்தில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதற்கு என்ன காரணம்? கடிகாரத்தில் எப்போதுமே முள் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் போது அதில் ஒரு விதமான சத்தம் எழும். பொதுவாக அது நம்முடைய காதுகளுக்குக் கேட்காது. சில சமயங்களில் அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் நமக்கு அந்த சத்தம் கேட்கும் அல்லவா? தெற்கு என்பது எமதர்ம ராஜாவுக்கும், நம்முடைய முன்னோர்களுக்கும் சொந்தமான திசை. ஆகவே அவர்களை தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பும் இந்த கடிகாரத்தை அந்த இடத்தில் மாற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய வீட்டில், நேரம் பார்ப்பதற்காக அடிக்கடி பார்க்கக்கூடிய பொருள் கடிகாரம். இந்த கடிகார கண்ணாடியில் நிச்சயம் விரிசலும் அல்லது உடைந்து இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை ஆற்றல் நமக்கு உண்டாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய கால நேரத்தை குறித்து, நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. ஆகவே, இந்த கடிகாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மெதுவாக ஓட விடக்கூடாது. அதாவது கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தில் தான் இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஒரு நிமிடம் கூட நம்முடைய கடிகாரம் பின்னோக்கி ஓடக் கூடாது. என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஓடாத கடிகாரத்தை சுவற்றில் மாட்டி வைக்காதீர்கள். உங்களுடைய வீட்டில் நிறைய கடிகாரம் இருக்கின்றது என்பதானால் ஆங்காங்கே எல்லா இடங்களிலும் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. குறிப்பாக நில வாசலுக்கு வெளியில் கடிகாரம் இருக்கவே கூடாது. சிலபேர் பால்கனியில் எல்லாம் கடிகாரம் மாட்டி வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறு. ஒரு கடிகாரத்திற்கு வாஸ்துப்படி எத்தனை விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன! நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

செல்வம் நிலைக்க ஆன்மீக ரகசியங்கள்

‪45 ஆன்மீக‬ ‪‎சூட்சமங்கள் - ‎சகல‬ ‪‎செல்வங்கள்‬ ‪‎நிலைக்க‬
------------------
நீங்கள பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். கோயிலுக்கு போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி., இதை முதலில் படியுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும் வியாதி போகும்., திருமணம் நடைபெறும் அன்பர்களே.
‪#‎சகல‬ ‪#‎செல்வங்கள்‬ ‪#‎நிலைக்க‬*
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது
.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும
32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது
33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும
37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,
38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான
39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும். ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,
அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண
்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்



தங்க நகைகள் அடமானம் வைக்க கூடாது இந்த நாட்கள்.

தங்க நகையை அடமானம் வைக்க கூடாத நாட்கள்!

தங்கம் அடமானம் வைத்தால் சிலரால் திரும்ப மீட்க முடியாது அவைகள் எல்லாம் வட்டிக்கு மூழ்கிப்போய் தரித்திரம் அடைந்து விடுகிறார்கள் பரவலாக அவசரத்தேவை கொண்டு தங்கத்தை அடமானம் வைத்தாலும் அவைகள்

கிருத்திகை நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ஹஸ்தம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் சதயம்நட்சத்திரம்

ஆகிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் "தரித்தர நிலையை அடைகிறார்கள் "அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்கள் நிலையில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் மென்மேலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள்.

செய்வினை தோஷம் போக வழிபாடுகள்.

செய்வினை தோஷம் போக வழிபாடுகள்:

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை  போன்றவை  ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை  பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று  அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, 
நாட்டு வாழைப்பழம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, 
கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு  தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.

அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

முருகனருள் பெற்ற மகான்கள்.

முருகனருள் பெற்ற மகான்கள்

முருகப் பெருமானின் பேரருள் பெற்றவர்கள் பலர். யதார்த்த உலகில் பலருக்கும் அந்த இறை அனுபவம் கிட்டியிருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அவனருளுக்குப் பெரிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அந்தப் பெருமை பெற்ற சில மகான்களைப் பற்றி, இங்கே:

ஆதிசங்கரர் தீராத வயிற்றுவலியால் துடித்தபோது திருச்செந்தூர் முருகனின் மீது சுப்ரமண்ய புஜங்கம் என்ற அருமையான தோத்திரத்தைப் பாட, அவரின் வயிற்றுவலி முருகன் அருளால் நீங்கியது. கடல் சூழ்ந்திருந்த அந்த தலத்தை, அவர் பாடிய சுப்ரமண்ய புஜங்கம்தான் சுனாமிப் பேரழிவிலிருந்து காத்தது என்று அப்பகுதி பக்தர்கள் இன்றும் நினைத்து ஆதிசங்கரருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர், தமிழ் மீதும் தமிழ்க்கடவுள் முருகன் மீதும் பற்றுடையவர். அவர் வெப்பு நோயால் பெரும் துன்பப்பட்டபோது, முருகனை திருமுருகாற்றுப்படை எனும் துதியால் துதித்தார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு தரிசனம் தந்து திருக்காளத்திக்குச் செல்ல பணித்தான். அவரும் அதன்படி அங்கு சென்று பொன்முகலியாற்றில் மூழ்கி எழுந்து, தன் நோய் நீங்கப் பெற்றார்.

காஞ்சியம்பதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு கந்தபுராணத்தை எழுதுவதற்கு ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என அடி எடுத்துத் தந்தது முருகப்பெருமானே! இதைப் பலரும் நம்பாததால் முருகனே ஒரு புலவர் வேடத்தில் வந்து தன்னை மெய்ப்பித்து கச்சியப்பரின் புகழை உலகறியச் செய்தார்.

அருணகிரிநாதர் தீய வழியில் சென்று, அதன் விளைவுகளால் மனம் வருந்த, முருகன் அவரைத் தடுத்தாட்கொண்டு திருப்புகழ் பாடப்பணித்தார். அதுமட்டுமன்றி, ‘முத்து..’ என்ற முதற்சொல் கொடுத்து அவரைத் தொடரச் செய்தார். பகைவரின் சூழ்ச்சியால் கிளியாக மாறிய அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ததுடன் மதுரை மீனாட்சியம்மனுடைய திருத்தோளில் அமரும் பாக்கியத்தையும் அவருக்கு முருகன் அருளினார்.

பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை வாய் பேச இயலாதவராக இருந்தவர் குமரகுருபரர். அவர் திருச்செந்தூர் முருகனின் அருளால் பேசும் ஆற்றல் பெற்று, அதற்கு நன்றியறிதலாக கந்தர் கலி வெண்பா எனும் துதியைப் பாடி, அதுமுதல் கவி இயற்றும் திறமையையும் பெற்றார்.

பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். முருகனை அழைத்துத் தன்னுடன் அமர்ந்து பால் சோறு சாப்பிடச் செய்தவர்! இது அவருடைய பக்தியின் சிறப்பு! தன் வாழ்க்கையில் நேர்ந்த பல இன்னல்களை தான் இயற்றிய ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தே தீர்த்துக் கொண்டார் அவர். முதுமைக் காலத்தில் அவர் கால் எலும்பு முறிய உடனே அவர் முருகனைப் பாட, எங்கிருந்தோ வந்த இரு மயில்கள் அவர் படுத்திருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பறந்து வந்து அவர் காலை தம் தோகையால் வருட, மருத்துவர்களே வியந்து போற்றும்படி அவர் கால் எலும்புகள் ஒன்று சேர்ந்தன. 

ஔவையாரிடம்   சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, தனக்கிருந்த தமிழ் கர்வத்தை அடக்கிய முருகனின் தரிசனம் பெற்று அவன் அருளையும் பெற்றார்.

போகர் பெரும் சித்தர். முருகப் பெருமான் திருவருளால் நவபாஷாணங்களினால் இவர் உருவாக்கிய முருகனின் திருவுருவமே இன்று பழநியில் மூலவர் முருகனாய் அருளொளி பரப்புகிறார். 

மகான்களுக்கு அருளிய முருகப் பெருமானை வைகாசி விசாகப் புண்ணிய தினத்தில் வணங்கி, அவன் அருள் வேண்டி சிரம் தாழ்த்தி அவன் திருவடிகளைப் பணிவோம்.